அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 35 – பூசாரி கைச்சிலம்பு, கிலுகிலுப்பை, வெண்டையம் மற்றும் அம்மானைக்காய் – சரவண பிரபு ராமமூர்த்தி


பூ
சாரி கைச்சிலம்பு, கிலுகிலுப்பை , வெண்டையம் மற்றும் அம்மானைக்காய் – கஞ்சக்கருவிகள் பூசாரி கைச்சிலம்பு – இது நீண்டு வளைந்த ஓர் அங்குல குறுக்களவுள்ள பித்தளை அல்லது வெண்கல சுருளின் உள்ளே ஒரு சில உலோக ரவை குண்டுகள் போடப்பட்டு இயங்கும் தாளக் கருவியாகும். தமிழர்களின் தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கருவி இது. மாரியம்மன், திரெளபதியம்மன், கண்ணகியம்மன் வழிபாட்டில் இடம்பெறும். 

சக்தி கரகம் அழைத்தல் மற்றும் அம்மன் வர்ணிப்பில் இக்கருவி பம்பை,உடுக்கையுடன் சல்


சல் என்று ஒலிக்கும். சிலம்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு பம்பை, உடுக்கை இசையின் துணையோடு ஆடப்படும் ஒருவகை கூத்து சிலம்பாட்டம். பூசாரி இனத்தவர் இதை நிகழ்த்தி வந்தனர். மிக மெல்லிய உடல்வாகு கொண்டவர்களாலும் உடம்பில் அதிக வலுவுள்ளவர்களாலும் மட்டுமே தாக்குப்பிடித்து ஆட முடியும் என்பதால் இதைக் கற்றுக்கொள்ள எவரும் முன்வருவதில்லை. எட்டு வயது முதல் பத்து வயதுக்குள்ளாகவே இதைக் கற்றுக்கொண்டால்தான் உண்டு. கண்ணகி கையில் சிலம்போடு உக்கிரமாக நடந்துசென்றதன் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாட்டம் தொடங்கியிருக்கலாம். இவ்வளவு அரிதான இந்த கலை இன்று வழக்கொழிந்து விட்டது. ஒரு பம்பைக்காரர், ஒரு உடுக்கைக்காரர் இவர்களுடன் இரண்டு சிலம்புக்கார்கள் தேவை. ஆட்குறைப்பு கலாசாரத்தில் இவர்களும் அழிந்து விட்டார்கள். 

அரிதாக சில இடங்களில் பெயர் அளவிற்கு சிலம்பு கைகளில் வைத்து ஆட்டப்படுவதும்,

வர்ணிப்புகளில் சிலம்பு அசைத்து பின் பாட்டு பாடுவதுமாக சிலம்பு சில கோவில்களில் தலையைக் காட்டி வருகின்றது. சிலம்பு இசைப்பவரே உடுக்கைக்காருக்கு ஆமாம் போடுதல், நையாண்டி கேள்வி கேட்டல் போன்றவற்றையும் செய்து வருகிறார்கள். இது தான் கைச்சிலம்பு கருவியின் இன்றைய நிலை. பாடல்: குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்  தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்  எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்  கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே. திருமுறை.1.71.7  காணொளி: https://www.youtube.com/watch?v=slMLOsIwkgg https://www.youtube.com/watch?v=hQbmRNzdGF0 https://www.youtube.com/watch?v=9HksWR8OS5A https://www.youtube.com/watch?v=eapeL6ckC_o  கிலுகிலுப்பை – கிலுகிலுப்பை இசைக்கருவியாக முற்காலத்தில்

பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டு கூம்பு வடிவ உலோக பகுதிகளுக்குள் ஒலி எழுப்பும் உலோக உருண்டைகள் போடப்பட்டு கைப்பிடியுடன் வைத்து ஒட்டப்படும். இதுவே கிலுகிலுப்பை இசைக்கருவி. கிலுகிலுப்பை இன்று பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டாலும் வட தமிழ்நாட்டில் ஒரு சில பம்பை-உடுக்கை குழுக்களில் பயன்பாட்டில் உள்ளது. வேறு சில வடிவங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருளாக தமிழ்க் கலாச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொராக்காஸ்/மராக்காஸ் எனப்படும் தற்கால இசைக்கருவி இதன் பரிணாம வளர்ச்சியே. மொராக்காஸ் பரவலாக பல நாட்டுப்புறக் கலை வடிவங்களில் இன்று பயன்படுகிறது.  காணொளி: https://www.youtube.com/watch?v=_A8amRz7ocQ&feature=youtu.be https://www.youtube.com/watch?v=a4ayikUGyic https://www.youtube.com/watch?v=9Lg6wmD52z4  வெண்டையம் – வெண்டையம் என்பது பழந்தமிழர் அணிந்த ஒரு

அணிகலன். சிலம்பு போல் இதை இசைக்கருவியாகப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.   புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், விருத்தாசலம் , சிதம்பரம் போன்ற வட மாவட்டங்களில் வாழும் வன்னிய சமுதாய மக்களின் இல்லங்கள் தோறும் அறுவடை காலங்களில் சென்று அவர்களை வாழ்த்திப்பாடி சன்மானம் பெற்று வாழ்பவர்கள் நோக்கர் அல்லது வன்னிய சாதிப்பிள்ளை என்னும் சமூகத்தினர். இவர்கள் வன்னிய சமூக மக்களை வாழ்த்திப்பாடும் பொழுது துத்திரி அல்லது வாங்கா மற்றும் வெண்டையம்  ஆகிய இசைக் கருவிகளைக்கொண்டு பாடல்களை இசைத்துப் பாடி பணம், தானியம், அரிசி, உடை ஆகிய பொருட்களைப் பெற்றுச் செல்கிறார்கள். இவர்களின் பாடுபொருள் உருத்திர

வன்னியன் என்னும் இம்மக்களின் மூதாதையர் பற்றியதாக இருக்கின்றது. இந்த உருத்திர வன்னியன் தான் இவர்களுக்கு இந்த வெண்டையத்தை தந்ததாக நம்புகிறார்கள். வன்னிய சமூக மக்களுக்காகவே அமைந்த இந்த இசைப்பாணர்களின் இன்றைய நிலை மிகவும் அவலமாக உள்ளது. இவர்களை இரவலர்கள் என்று எண்ணி விடுகிறார்கள். இவர்கள் இச்சமூக மக்களிடம் மட்டுமே சென்று பரிசுப் பொருட்களை பெறுவதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். தொட்டிக்குடிசை ஊரைச் சேர்ந்தவர் திரு முனுசாமி சாதிப் பிள்ளை. இவர் மனைவி  திருமதி விசாலாட்சி. இவர்கள் கதைப்பாடல்களைக் கூறும் போது வீர வெண்டையம், வாங்கா  ஆகியவற்றை இசைக்கின்றனர். அவற்றில் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் வைகாசித் திருவிழாவின் நான்காம் நாளில் நாம் இக்கோவிலில் 10க்கும் மேற்பட்ட 

வெண்டைய இசைக்கருவிகளை நாம் காணலாம்.  காணொளி: https://youtu.be/DCsId89QYgM https://www.youtube.com/watch?v=EkI-Dfo4lnk https://www.youtube.com/watch?v=j7GYCU3gZ2k&t=170s https://www.youtube.com/watch?v=mb0jylC85yA  அம்மானைக்காய் – அம்மானைக்காய் என்பது பழந்தமிழ் மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். ஆண்கள் விளையாடுவதற்குப் பந்து பயன்படுவதைப்போல் பெண்கள் விளையாட இவ்

அம்மானைக்காய் பயன்படுத்தினர். ஈழ நாட்டில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களில் அம்மானைக்காய்s புனித பொருளாகக் கருதப்படுகிறது. உடுக்கு இசைக்கருவிகளுடன் அம்மன் காவியம் பாடுதல், உடுக்குச் சிந்து பாடுதல்,  அம்மானைக்காய் மற்றும்  சிலம்பு ஆகிய்வற்றைக் குலுக்குதல், குரவைபோடுதல் போன்றவை ஈழத்து கண்ணகி அம்மன் வழிபாட்டு சடங்குகள்.  -சரவண பிரபு ராமமூர்த்தி 

No comments: