அன்பு காட்டிடின் அமரன் ஆகுவாய் !மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண்
 .... ஆஸ்திரேலியா போதை ஏறினால் பாதை மாறுவாய்
 வாதை ஏறினால் மடிய எண்ணுவாய்
 வறுமை ஏறினால் வதங்கி வாடுவாய்
 பொறுமை ஏறினால் புவியை ஆளுவாய்

அறிவு மங்கிடின் அசடன் ஆகுவாய்
அதிகம் பேசிடின் அனைத்தும் போக்குவாய் 
அழிக்க எண்ணிடின் அரக்கன் ஆகுவாய்
அன்பு காட்டிடின் அமரன் ஆகுவாய் 

பறித்து வாழ்ந்திடின் பாவம் வாங்குவாய்
அறுத்து நின்றிடின் அழிவை நாடுவாய்
வெறுத்து நின்றிடின் வினையை வெல்லுவாய்
ஒறுத்து நின்றிடின் உலகை வெல்லுவாய்

பெருமை பேசிடின் அருமை தேர்ந்திடாய் 
சிறுமை தேக்கிடின் பெருமை கண்டிடாய் 
குறைகள் கண்டிடின் கொதிக்க மறந்திடாய்
நிறைகள் கண்டிடின் வாழ்த்த மறந்திடாய்

கறைகள் சேர்ந்திடின் கழுவ மறந்திடாய்
கயமை நிறைந்திடின் எரிக்க மறந்திடாய் 
கருணை பெருகிடின் தேக்க மறந்திடாய்

கடவுள் துதியினைப் பாட மறந்திடாய்  No comments: