சரசுவதி கீதங்கள்

             


இயற்றியவர் பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி



கீர்த்தனை1  

                       பல்லவி

செந்தமிழ்த் தேன்மாந்தும் செல்வீ என் கலைவாணீ

பைந்தமிழ்ப் பாமாலை சூடவந்தேன் அம்மா - 

சூடவந்தேன் அம்மா - சூடவந்தேன் அம்மா  

                                                                            (செந்தமிழ்)

அருள் சுரவாய் நீ மருள் களைவோய் நீ

வருந்திருவே நீ அருமருந்தே நீ அம்மா!


             அனுபல்லவி

வான்பொழியும் மாமழைபோல் வற்றாது கலைச்செல்வம்

ஊன்கலந்து உளங்கனிய ஊட்டிடுவாய் அம்மா!

                              (செந்தமிழ்)

             சரணங்கள்

வித்தக வீணையை ஏந்திநிற்பாய் - உன்னை

விரும்பும் அடியவர் வினை களைவாய்

நித்தம் உனைத்தொழும் பத்தருக்கே தினம்

சித்தி எல்லாம் செய்து திருவருள் தந்திடும்

                                (செந்தமிழ்)

பங்கய நாயகி பாரதி ரூபிணி எங்களுக் கருள் இறைவி நீ

திங்களும் நாணிடும் மங்கல வாணிநீ திவ்யசொரூபி நீ தேமொழி

சுந்தர நற்றமிழ் துலங்கிட வித்துவம் தந்திடுவாய் என் சரஸ்வதி

மந்திர வீணை இசைத்துநல் ஆசியை வழங்கிடு தேவீ கல்யாணீ

                                 (செந்தமிழ்)

 ------------------------------------------------------------------------------------------------          

கீர்த்தனை 2  

            பல்லவி                                             

செந்தமிழ்ச் செல்விநின் செம்பதங்கள் பிடித்தேன்         

சித்திகள் அருள்வாய் அம்மா! –தேவீ   

                                 (செந்தமிழ்)

          அனுபல்லவி

 

சிந்தையிலே மலர்ந்து செந்நாவினிலே கனிந்து 

செவியினிலே செழுந் தேனாய் இனித்திடும்                  

                                                                      (செந்தமிழ்)

            சரணம் 

நல்லோரின் நாவிலே நடம்புரி தெய்வமே  

எல்லோர்க்கும் அருள்புரி ஆனந்தமே!  கல்யாணியே கல்விக் காரணியே பாரின்  நல்வாணியே உனை நாடி வந்தேன் அம்மா!  

                                                                         (செந்தமிழ்) 



No comments: