பங்கயச் செல்விக்குப் பாமாலை சூடிய தங்கத் தாத்தா

   











பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.

ஓங்கலிடைத் தோன்றுதல்இ உயர்ந்தோர் வணங்கும் பொருட்டு ஒளி பரப்புதல்இ உலகத்து இருளை அகற்றுதல் ஆகிய தனிப்பெரும் பண்புகள்;இ சகல உயிர்களையும் வாழவைக்கும் வெங்கதிரோனுக்கும்இ பல மொழிகளுத்குத் தாயாகி ஒளிரும் தன்னேரில்லாத் தமிழுக்கும் சாலப் பொருந்துவன என்று;இ தகைமைசால் தமிழ்ப் புலமையாளர்கள் விதந்துரைப்;பது முற்றிலும் உண்மை. கருமேகம்இ பனிஇ  புகார் முதலியவற்றாலே பகலவனி;ன் ஒளி குறிப்பிட்ட சில இடங்களிலேமட்டும இடைக்கிடை மங்கி மறைக்கப்படுவதும் அவை நீங்கியபின்பு மறுபடியும் புத்தொளியுடன் பிரகாசிப்பதும் ஒவ்வொரு நாளும் காணப்படும் காட்சியாக அமைகிறது. இதே போன்ற தாக்கங்கள் இக்காலத்திலே இலக்கியம் படைப்போர்கள் பலர் பெரிதும் கையாளும் பிறமொழிகளாலும் அவற்றின் கலப்பாலும்;;இ உலகிலே பரந்துவாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிற இன மதத்தவர்களுக்குரிய கலாசாரக் கலப்பினாலும்இ அரசியல் தாக்கங்களாலும்;இ தமிழின் மறுமலர்ச்சி - புதுமையாக்கம் என்று  தமிழைச் சிதைப்போரின்  செயல்களாலும்இ தாமரை இலைத் தண்ணீர்போலத் தரணி ஆண்டுவந்த தமிழுக்கும் ஏற்படுகின்றது. ஆனால் எவ்வாறு தற்காலிக மறைப்புகள் ஏற்படினும்  சூரியனின் பெருமையை அதன் ஒளி இன்றுவரை காத்துவருகின்றதோ அதே போன்று  எங்கள் சுந்தரத் தமிழையும் தொன்றுதொட்டு அதற்கு அணிசெய்துவருகின்ற பல்லாயிரச் செந்தமிழ் நூல்கள் காத்துவருகின்றன. அவை தமிழின்; இளமைத் தன்மையையும் புனித மேன்மையையும் சற்றேனும் குன்றாது இலங்கவைத்து வருகின்றன. 

ஆயிரமாயிரம் வருடங்களாப் பலவிதத்திலும்  தமிழை அழித்துவந்த ஆரியர்களின் கொடுஞ்செயல்கள் ஒருபுறம்! உலக இரீதியாக ஆங்கில மொழியின் அடிமைப்படுத்தல் ஒருபுறம்! தமிழைப் பேசிவந்த நாடுகளிலே காலத்திற்குக் காலமாக மேற்கொள்ளப்பெற்ற ஆட்சியாளர்களின் கொடுமை மறுபுறம்!. கடற்கோள்களால் அழிந்ததும்;; செல்லரித்துச் சிதைந்ததும் தேடுவாரற்று மறைந்ததுமாகச் சொல்லற்கரிய பல்லாயிரம் அரும்பெரும் ஏட்டுச்சுவடிகளையும் நூல்களையும் தமிழ் இழந்தபின்பும்;இ வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத அளவு எஞ்சியிருக்கும் சிறந்த இலக்கிய இலக்கண நூல்களைக் தன்னகத்தே  கொண்டும் தமிழைச் செவ்வியல் மொழியாக அலங்கரித்தும் வருகின்றது.. தொல்காப்பியர் முதல் மகாகவி பாரதியார் வரை எத்தனையோ புலவர்கள்  சூட்டிய அணிகலன்களுடன் தமிழணங்கு இன்றுவரை செழுமைப் பொலிவுடன் இருப்பது புதுமையே!.  

இந்த வகையிலே உயிருள்ள நூல்களின் வரிசையிலே ஒன்றாகவைத்துப் போற்றக் கூடிய உயர்வுடைய பல நூல்களைப் படைத்துப் புலவர் பரம்பரையை இலங்கச் செய்த பெருமை நவாலியூர் 'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவர் அவர்களையும் சாரும். தனது குல தெய்வமாகிய முருகப் பெருமானையும் தமிழ்ப் புலமை தந்தருளிய நாமகளையும் செஞ்சாரத் துதித்து வாயாரப் பாடி மகிழ்வதிலே அவருக்கிருந்த ஈடுபாடு சொல்லிலடங்கா. இத்தெய்வங்களின் அருட்டிறங்களையும் வரம்பிலாற்றல்களையும் பாடி வணங்குவதும்  அருளைப் பெறுவதும் ஒருவருக்குத் தவப்பயனாற் சித்திக்கும் என்பதற்கு அமையத் தங்கத் தாத்தாவும் தனக்குக் கலைநிதி அருளிய கருணைத் திறத்தை வியந்தும் நயந்தும் பல்வேறு பதிகங்களாகப் பலவித பிரபந்தங்களையும் தனிப் பாடல்களையும் பாடி அருளினார். தெய்வமணம் கமழும் இப்பாடல்கள் படிக்கப் படிக்க மெய்யையினை உருகவைக்கும் பெற்றியது.  

வற்றாத  ஊற்றெனப் புலமை நலங்கனியப் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மரபுவழிப் பாடல்களைத் தங்கத் தாத்தா  பாடியருளியவர்.   தமிழ்தந்த தன் கலைப்பெருமாட்டியை - செந்தமிழ்ச் செல்வியை - தாமரையாட்டியை - அன்புத் தமிழரசு ஆளுந் தலைவியைத் தமிழ் உலகமே கண்டறிந்திராத வகையிலே பாடிய பெருமை புலவருக்கே சேரும். இருபத்தி மூன்று நூல்களை உள்ளடக்கிய 'நாமகள் பகழ்மாலை' என்னும் தெய்வீகச் செய்யுள்களாலான புத்தகத்தைப் புலவர் இயற்றிப் பெருமை சேர்த்தவர். செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளில் சீரிய கூரிய செழுந்தமிழ்ச் சொற்களால் இந்நூல் இயற்றப் பெற்றுள்ளமையினால்;இ படிக்குந் தோறும் படிக்குந்தோறும் சொன்னயமும்;இ பொளுள் நயமும் பயப்பதாகச் சிந்தைக்கோர் அரிய விருந்தாகிறது. தமிழ்மொழியின் காலங்கடந்த பழமைச் சிறப்பு - இலக்கண இலக்கிய நூல்களின் பொலிவு -  தேவாரம் திருவாசகம் அருளிய நால்வரின் திருமுறை மந்திரப் பெருமை - மூவேந்தரொடு பிறரும் தமிழை வளர்த்துப் பாதுகாத்த  திறம் - மற்றும் இதுவரை எந்தப் புலவரும் நினைத்துப் பார்க்க முடியாதளவிற்குக் கலைமகளுக்குச் சூட்டிய அணிநலம் .... இவ்வண்ணம்  பல்வகைச் சிறப்புகள் நாமகள் புகழ்மாலையிலே புலவராலே கூறப்பட்டுள்ளன. பாடல்களிலே வரும் ஒவ்வொரு வரிகளும் பொருள் பொதிந்தவையெனக் காணலாம்.

பழைமையில் நின்று புதுமைக்கு வழி சமைக்கிறது புலவரின் படைப்புகள். செய்யுள்களிலே காணப்பெறும் ஓசை நயம் - பொருள் வளம் - நடைச் சிறப்பு - கற்பனைத் திறன் - கருத்தோட்டம் வரிக்கு வரி மிளிர்கின்றது. செந்தமிழ்ச்செல்வி வழிபாடு - திருப்பள்ளி எழுச்சி - குயிற்பத்து - ஆசைப்பத்து - வருகைப் பத்து - ஓலப் பத்து - உய்ந்த பத்து - பொறுத்த பத்து - அருட் பத்து - நயனப் பத்து - அடைக்கலப் பத்து - போற்றித்; திருவகல் - தசாங்கம்  இரட்டை மணிமாலை - வருக்க மாலை - நாமகள் கலித்துறை - தாலாட்டு - அம்மானை - அலங்காரம் - இழந்தவை கொண்டு வளம்பெற வாழ்வோம் என்பவை போன்று பலவித அருட்பா நூல்;கள் கொண்டது நாமகள் புகழ்மாலை.

இந்த 23 நூல்களில் முதலாவதான 'செந்தமிழ்ச் செல்விவழிபாடு' புலவரவரல் 1925ஆம் ஆண்டிலே எழுதப்பெற்றது. இலங்கையிலிருந்தம் தமிழ் நாட்டிலிருந்தம் கவிஞர்கள் பலர் பங்கேற்றிருந்த நாமகளைப் பற்றிய கவிதைப் போட்டியிலே அதனை நடாத்திய புலவர்குழாம் தங்கத் தாத்தாவின் 'செந்தமிழ்ச் செல்விவழிபாடு' நூலைச் சிறந்ததெனத் தெரிவுசெய்து அரங்கேற்றி முதற் பரிசும் வித்துவச் சன்மானமும் அளித்துக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.  இதிலிருந்து  தங்கத் தாத்தாவின் புலமையைச் சிறிது பார்ப்போம்.

   

'செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச்

சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச்

சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவிப்புலத்தே

வந்துகனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துவமே'


என்ற காப்புப் பாடலுடன் ஆரம்பிககப்பெற்ற இந்தச் செய்யுள் ஆற்றுப்படை இலக்கணப்படி அமைந்துள்ளது. நாமகளை வாழ்த்தும்வண்ணம் செந்தமிழப் புலவர்களைத் தங்கத் தாத்தா அன்பு கூர்ந்து அழைக்கிறார் ....

'வம்மின் புலவீர்! வம்மின் புலவீர்   

இம்மையும் மறுமையும் நன்மையும் பயந்து 

தொன்மையும் புதுமையும் மென்மையும் தெய்வத் 

தன்மையும் நிரம்பி எழுமையுந் தொடர்ந்து

யாழினும்; குழலினும் பாலினுந் தேனினுங்

காணினும் கேட்பினும் கருதினும் இனிக்கும்

அமிழ்துறழ் தலைமைத் தமிழ்மொழி யுணர்ந்த

மெய்ந்நெறிப் புலவீர் வம்மின் எல்லீரும்

அந்தமும் நடுவும் ஆதியுந் தெரியாச்

செந்தமழிழ்ச் செல்வியைப் போற்றுதும் யாமெலாம்.......'


என்று புலவர்களை அழைத்தவர் செந்தமிழ்ச் செல்வியை வரவேற்க என்னவெல்லாம் செய்யச்சொல்கிறார் தெரியுமா?..

'நெடுங்கடல் உலகில் இடந்தொறும் இடந்தொறும்

வானுயர் சங்க மண்டபம் வகுத்து

மான விதானம் வழங்கெழ அமைமின்!

ஊக்கமு நெருங்கிய வொருமையு மென்றா

நீக்கமி லுழைப்பு நேர்மையு மென்றா

மாக்குலைக் கமுகும் வாழையும் நடுமின்

தூக்குறு குரும்பையுந் தொடையலுந் தொடுமின்!......'

'தேம்பிழி குவளைகண் ஆம்பல்வாய் மலர்ந்து

முல்லை அரும்பிப் பவளம் பூத்த

முழுமதி ஆயிர மொருவயிற் குழீயிய

காட்சித் தன்ன மாட்சிகண் கவர'     


தாமரையாட்டியை அழைத்து 'தெரிதமிழ்ப் பலகை அரியணை'   மீது அமர்த்தி அவளின் கைகளைப் பார்த்து  வியக்கிறார்;.


'திருவுறை செங்கை நான்கி னொருகை

புத்தகச் செங்கோல் ஏந்த ஒருகை

வித்தகத் திவவின் நல்லியாழ் தடவ ஒருகை

நச்சுநர் நச்சிய விச்சையி னுதவ ஒருகை....'


கைவண்ணம் பார்த்த புலவர் கலைப்பெரு மாட்டியை விட்டுவிடுவதாக இல்லை. பூம்பொழில் செல்லும் தமிழ்ச்செல்வியைத் தெடர்கிறார் புலவர்!

அருளடை பொதுளித் தெருணிணல் வழங்கி

அன்பு மலர்ந்துயிர் இன்பம் பிலிற்று

மருவா நெறியறி வாதவூ ரெங்கோன்

திருவா சகமெனுஞ் செழும்பொழில் புகுந்து

மருப்பூ முகத்து வல்லி ராயமொடு....... '

என்ன திருவிளையாட்டுகள்  செய்வாளோ என்று அவள் செய்கைகளைப் பதிவு செய்கிறார் தங்கத் தாத்தா!


திருப்பூ வல்லி விருப்பொடு கொய்துங்

குயிலொடு கூவியும் கிளியொடு மிழற்றியும்

பயின்மணிப் பாவை நயமுறப் புனைந்தும்

வாசந் திமிர்ந்து ஊசல் ஆடியும்

அம்மனை ஆடியும் கொம்மை கொட்டியுஞ்

சேரன் செய்த திருக்கிளர் சிலம்பிற்

குந்துக வரியிற் பந்துவந் தடித்துங்

செவிச்சுவை நிரம்பிய கவிச்சுனை குடைந்தும்

பொழில்விளை யாடல் எழிலபெற வாடியும்;.....

நீர்மேல் நடந்தும் நெருப்பிடைக் குளித்தும் 

பார்முதிர் கருங்கடல் பாறையிற் கடந்தும்

மறைபிணி கதவந் திறவெனத் திறந்தும் 

சுடுபிணி மாற்றியுங் கடுவிடம் தீர்த்தும்

அருள்விளை யாடல் அளவில புரிந்த

காப்புடை வாழ்க்கைக் கலைப்பெரு மாட்டியை...


எவ்வாறெல்லாம் அழைத்து மகிழ்கிறது புலவரின் பா வடிக்கும் நெஞ்சம்;!


செந்தமிழ்ச் செல்வியைத் தேமொழித் தேவியை

சந்தனச் சிலம்பியைத் தாமரை யாட்டியைத்

தென்னவன் பாவையைச் செம்பியன் பூவையை

மன்னவன் சேரன் வரைதரு மயிலை

இன்;னுயிர் நாவமர் பொன்நிறக் கிள்ளையை

ஏழிசை நறும்பொழில் கூவுவெண் குயிலை

விண்ணகப் புலவர் வெட்கி வாயூற

;மண்ணகப் புலவர் வாரிவாய் மடுக்கும்

அரும்பெறல் அமுதைப் பெருஞ்சுடர் விளக்கை'...  எனப்  

பாடி  இறும்பூதெய்திய புலவர் ....

'புறமொழி விழைவெனுஞ் செறியிரு ளகன்றன

மறுவறு புலமை வாரண மியம்பும்

தெளிவெனும் ஆயிரம் ஒளிநிரை பரப்பி

புகழெனும் பரிதி கடன்முக டெழுந்தனன் ...'

ஏங்கள் தமிழன்னை இன்னமும் திருவிளையாட்டின் களைப்பாலே துயில்கொள்கிறாளோ வென எண்ணி....


'சந்தனச் சிலம்பினில் இசைக்குயில் கூவும்

   தகுமருட் பாவினச் சங்கொலி மேவுஞ்

செந்தமிழ்ச் சேவல்கள் திருப்புகழ் யாவுஞ்

   சிறைபுடை யடித்தெதிர் சிலம்பிடக் கூவும்

அந்தமிர் கலைக்குரு அரற்றிய ஒலியும்

   அடியவர் சயசய அமைலையு மலியும்

எந்தமை ஆண்டருள் முத்தமிழ்க் கடலே

   இன்னமு தேபள்ளி எழுந்தரு ளாயே!


தேனெனப் பாலெனச் செழுங்கரும் பூறுந்

   தீஞ்சுவைச் சாறெனத் தௌ;ளமு தெனவே

மானன நோக்கிநின் வாய்மொழி கேட்டு 

   மகிழுபு பறமொழி மாந்தரும் வந்தார்

பூநனை புனைகுழற் பொன்னனை யாளே

   பொற்சிலம் பலம்பிடு பூவடிப் பூவாய்

ஈனனை யும்அருள் முத்தமிழ்க் கடலே

   இன்னமு தேபள்ளி எழுந்தரு ளாயே!


என்று ஒரு திருப்பள்ளி எழுச்சிப் பதிகம் பாடித் துயில் எழுப்பியபின் அன்னையைச்


'செம்பொன் தவிசின் உம்பரி னிரீஇ

அன்புநீர் ஆட்டி வெண்கலை உடுத்தி' எனக்கூறிய தாத்தா


'சைவலப் பூங்குழல் ஐவகை முடிமின்' என்றும் 


'மெய்வகைச் சாந்த விரைக்குழம் பணிந்து

செஞ்சொலில்; தொடுத்த மஞ்சரி ளைமின்

விதுப்பிறை பழித்த கதிர்ப்புறு நுதலிற்

பொங்கிய மகிழ்ச்சிக் குங்குமம் இடுமின்

உய்வகை மும்மையின் ஆண்மை தெரித்துக்

தெய்வப் புலவன் செய்தருள் மணிமுடி 

வணங்காச் சென்னி இணங்கச் சூட்டி

மென்பணைத் தோளினும் பொன்புணர் மார்பினு

மூவர் ஆரமும் முனிவர் கோவையுந்

தேவர்மா மணியு மேவர வமைமின்! 

அன்பி னைந்திணை ஆழ்வார் திருமொழி

பொன்புனை மாலை வேய்ந்து மின்பொலி

குண்டலம் வளையெனும் ஒண்டமிழ் இரண்டும்

காதினும் போதுறழ் கையினும் இடுமின்!

தணியாப் புலவன் தண்டமிழ்ச் சாத்தன்

மணிமே கலையை மருங்குறச் சேர்த்திச்

சேரன் தந்த திருக்கிளர் சிலம்பு

வேரியந் தாமரை மெல்லடிப் புனைமின்!

நாலடிப் பாதுகை கீழுறக் கொளுவி

நாவணி தந்த பாவணி பலவும்

பொருந்துளி பொருந்துளி திருந்துபு பூட்டி

ஒப்பில் உடல்பொருள் ஆவியென் றுரைசால்

அப்ப முப்பழம் அமுதமும் நல்கி

மெய்ப்பொருள் விளக்கங் காட்டி யற்புடன்

ஊழி முதல்வி வாழிய வென்று

சொல்லாண் டியம்பும் பல்லாண்(டு) இயம்பி...'     

 இவற்றுடன்

முத்தமிழ் - முக்குணம் - மூவுரு- முத்தொழில் - மூவுயிர் - மும்மலம் என மூன்றாக இருக்கும் அத்தனையையும் குறிக்கும் சான்றவர் ஆய்ந்த தமிழ் என்னும் மந்திரம் 'நாவியன் மருங்கி நவிலப் பாடி  - வலப்பக்கமாக மூன்று முறை முறையாகச் செந்தமிழ்ச் செல்வியை வலம்வந்து கண்ணினீர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப நெஞ்சநெக் குருக அஞ்சலி செய்யப் பணிக்கிறார் நரை பூத்த தாத்தா!.

இவ்வளவு சிறப்புச் செய்தும் புலவரின் சிந்தைக்கு நிறைவு வரவில்லை. தொடர்ந்து வாயாரப் பாடுகிறார்....


'செந்திரு நாணச் சிதையா வளமருள்

சிந்தா மணியே! நந்தா விளக்கே!

ஆருயிர் மருந்தே! அடியவர் விருந்தே!

குற்றவர் களிக்க மற்றவர்க் கொளித்த

கற்பகக் கனியே! அற்புதத் தேனே!

அருட்பெருங் கடலே இருட்பெருங் கடற்குப்

புணையே! தோன்றாத துணையே! பிணையே!

கண்ணு நீயே! கருத்து நீயே!

எண்ணு நீயே1! எழுத்து நீயே!

புண்ணிய முதல்வி போற்றி...'  


என்று அன்புடை நன்மொழி கூறி அவள் முன்பு நின்று ஆனந்தக் கூத்தாடும் முதுபெரும் புலவர் தொடர்கிறார்...

.

'அழுமின் விழுமின் எழுமின் தொழுமின்

ஆடலும் ஆடுமின் பாடலும் பாடுமின்

யானறி அளவையின் அன்றி நீவிர் 

அறிந்தன அறிந்தன புரியிற் சிறந்ததன்

மூவா விளநலங் காட்டி வாய்மலர்ந்(து)

அஞ்சலிர் வாழியென்(று) இன்சொற் கூறி

வரம்பல நிரம்பவும் ஈயும் 

அறம்பொரு ளின்பவீ டடைந்துவாழ் குவிரே!' என்று மனநிறைவு கொள்கிறார் 



No comments: