அந்தகாரம் திரைவிமர்சனம்


தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது OTT யில் வெளிவந்துள்ள படைப்பு அந்தகாரம். இது ரசிகர்களை திருப்திப்படுத்தியதா, பார்ப்போம்.

கதைக்களம்

அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.

அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடுகிறார் வினோத்.இதை காட்டும் அதே நேரத்தில் ஒரு மனநல மருத்துவர் தன் ஒரு பேஷண்டால் தன் குடும்பத்தை இழந்து, மீண்டும் தன் புதிய பேஷண்டுகளை ஏதோ செய்ய முயற்சிக்கிறார்.

இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் எப்படி சந்திக்கிறது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்..

அர்ஜுன் தாஸ் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்லா வரவு, தன் கனத்த குரலில் மிரட்டியும், அதே வேளையில் பயந்தும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

வினோத்தும் கண் தெரியாத இளைஞராக பேய் ஓட்டும் நபராக அவர் செய்யும் விஷயங்கள் நம்மை திகிலடைய செய்கிறது.

டெக்னீக்களாக படம் செம்ம வலுவாக உள்ளது, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்ன அனைத்தும் பிரமாதம்.

இயக்குனருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் எல்லோருக்கும் இது புரியுமா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு

டெக்னீக்கள் விஷயங்கள்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட்

பல்ப்ஸ்

படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம்.

மொத்தத்தில் அந்தகாரம் முழுதிருப்தி சினிமா ரசிகர்களுக்கு.

நன்றி CineUlagam 

 


No comments: