பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 22 - தரிசனம்- சுந்தரதாஸ்

.



இது இது மாலை நேரத்து மயக்கம், பூ மாலை போல் உடல் மணக்கும் இந்தப் பாடலை இன்றும் ஆயிரக்கணக்கானோர் ரசித்து வருகிறார்கள். சிற்றின்பத்துக்காக விரகத்துடன் ஏங்கும் பெண்ணுக்கு மோகத்தை துறந்துவிடு உடலின் பந்தத்தை மறந்துவிடு என்று ஆண் கூறுவதாக அமைந்த இந்தப் பாடல் படம் வெளிவந்த காலம் முதல் 50 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் தரிசனம். படத்தை ரசிகர்கள் மறந்து விட்டாலும் பாடல் மட்டும் நினைவில் நிறைந்துள்ளது.

சஷ்டி பிலிம்ஸ் சார்பில் வி டி அரசு தரிசனம் படத்தை தயாரித்து டைரக்ட் செய்திருந்தார் இவர் உருவாக்கிய படங்களில் அடுத்தடுத்து ஏவிஎம் ராஜன் புஷ்பலதா இருவருமே கதாநாயகன் நாயகியாக நடித்தார்கள் அதே போல் இதிலும் இவர்கள் இருவருமே நடித்தார்கள். ஏராளமான படங்களில் நடித்திருந்த ராஜனுக்கு இப்படத்தில் தான் இரட்டை வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் மட்டுமே அவர் இரட்டை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடக்கூடியது.




படத்திற்கான கதை வசனத்தை சிங்காரவேலன் திறமையாக எழுதியிருந்தார் . உணர்ச்சிகரமான கதைக்கு அவரின் வசனங்கள் கருத்தாளம் மிக்கதாக அமைந்தன. அதேசமயம் சோ , மனோரமா இருவரும் சம்பந்தப் படட நகைச்சுவை காட்சிகளிலும் அவரின் வசனங்கள் நன்றாக இருந்தன. திறமைமிக்க கதாசிரியரும் வசனகர்த்தாவாகவும் இருந்தும் சிங்காரவேலன் திரையுலகில் குடத்திலிட்ட விளக்காகவே இருந்துவிட்டார்.

கட்டடத் துறையில் ஈடுபடும் மோகன் தொழிலில் ஏற்படும் நட்டத்தாலும் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டத்தாலும் ஊரை விட்டு ஓடி விடுகிறான். அதேசமயம் அவனைப்போல் இருக்கும் பாண்டியன் குடும்பத்தில் வந்து சேருகிறான் எல்லோரும் அவனை மோகன் என்று நம்ப அவரும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறார் . மோகனோ பாண்டியனின் குடும்பத்தினரிடம் சிக்குகிறான்.

இப்படி அமைந்த படத்தின் கதையில் சோ ,மனோரமா ஸ்ரீகாந்த் சைலஸ்ரீ சேஷா ஸ்திரி ஆகியோரும் நடித்திருந்தனர் படத்திற்கு பிரபல பாடகி சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைத்திருந்தார் அவரின் இசையில் கண்ணதாசநின் கவித்துவத்தில் சௌந்தரராஜன் ஈஸ்வரி பாடிய மாலை நேரத்து மயக்கம் பாடல் ராஜன் சைலஸ்ரீ நடிப்பில் மெருகேற்றப்பட்டது. தரிசனம் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு சில ஆண்டுகள் கழித்து சிவாஜி நடிப்பில் என்னைப்போ ல் ஒருவன் படம் வெளிவந்தது.


No comments: