ஓடியோடி உழைத்தாலும் 
ஒன்றைப்பத் தாக்கினாலும்
உறங்கி யெழுந்திடுதல்
ஒருவருக்குந் தெரியாது
உறங்கினார் உறங்கிவிடின்
உழைத்தவைகள் வாராது
விளங்காமல் வீண்கனவு
மேலோங்கி எழுகிறதே !
ஒன்றைப்பத் தாக்கினாலும்
உறங்கி யெழுந்திடுதல்
ஒருவருக்குந் தெரியாது
உறங்கினார் உறங்கிவிடின்
உழைத்தவைகள் வாராது
விளங்காமல் வீண்கனவு
மேலோங்கி எழுகிறதே !
          கறந்தபால் மறுபடியும் 
              மடியேற  மாட்டாது 
        பிறந்திடலும் இறந்திடலும்
              பெரும் புதிராயாகிறது 
        வருந்தியே அழைத்தாலும்
               மரணம் வந்தமையாது
        வருகின்ற வேளைதனை
               மண்ணுலகில் யாரறிவார்   !
        நிரந்தரமாய் வாழுகின்றார்
             நீள்புவியில் யாருமுண்டோ 
       அறிந்திருந்தும் பலபேரும்
              அதையுணரா ஓடுகிறார் 
      கிடைக்கின்ற வாழ்நாளில்
              கீழ்த்தரமாய் எண்ணாமல்
      கடைத்தேறும் வழிநடந்தால்
காலமெமை வாழ்த்திநிற்கும் !

No comments:
Post a Comment