எங்குமே அச்சமே எழுகிறதே இருளாய் !மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


        
    தும்மலொடு இருமல் தொடர்ந்து வரும்வேளை
    எம்மருகே இருப்பார் எமைவெறுத்துப் பார்ப்பார் 
    கைபேசி எடுத்து காவல்துறை அழைத்து
    கொரனாவின் காவி அருகிருப்பார் என்பார்  !

   சாதாரண தும்மல் வந்தாலும் துன்பம் 
   சளிகாய்ச்சல் சேர்ந்து வந்தாலும் துன்பம் 
   பக்கத்து நின்று கதைத்தாலும் துன்பம் 
   பார்க்கவே பயமே பரந்திருக்கு எங்கும்   !

   விருந்துண்ண வந்தாலும் விலகிநிற்ற வேண்டும்
   விழாவனைத்தும் இப்போ இணையவழி ஆச்சு
   வருவிருந்தும் உள்ளே வரவச்சம் கொண்டு
   வாசல்வரை என்று வரையறையும் ஆச்சு   ! 

   வாங்கிவரும் அனைத்தும் வாசலிலே வைத்து
   மருந்ததனைத் தெளித்தே மனைக்குள்ளே செல்லும் 
   வங்கிசென்று பணத்தை எடுத்துவந்த போதும்
   பயமுடனே பணத்தைப் பார்க்கும் நிலையாச்சு  ! 

  சென்றாலும் பயமே நின்றாலும் பயமே
  எடுத்தாலும் பயமே கொடுத்தாலும் பயமே 
  சிங்காரச் சீனாவின் சிறப்பான பரிசால் 
  எங்குமே அச்சமே எழுகிறதே இருளாய்  ! 
  

 
No comments: