மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் 27/11/2020

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில், ஓஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநிலமெல்பேர்ன்  நகரில்  எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட ஏற்பாடகியுள்ளது. 


இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் தற்போதய அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய  அவுஸ்திரேலியா  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விக்டோரிய பணிமனையின் உத்தியோகபூர்வமான அறிவித்தலும் இத்துடன் உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.


அந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டின் மற்றைய மாநில மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.     

 உங்கள் வரவை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0433002619 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ (SMSஅனுப்பி வைக்கவும்.

பெயர் -

தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –

வதிவிட முகவரி-

வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –

வரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)

 

என்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதிவு (வருகின்ற நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு) போதுமானது. 50 பேர்வரை ஒரு நேர இடைவெளிக்குள் பதிவு செய்யப்பட்டால் அதன்பின்னர் பதிவுக்கு வருவோர் வேறு நேரத்தைத் தெரிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.

முன்பதிவு  தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல்தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வு நடைபெறும் இடம் :– பின்னர் அறியத்தரப்படும்.


No comments: