பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 24- சொர்க்கம் - சுந்தரதாஸ்

 .எம்ஜிஆர் சிவாஜி இருவருடைய நடிப்பிலும் பல படங்களை தயாரித்து இயக்கியவர் டி ஆர் ராமண்ணா. வெற்றிப்பட இயக்குனராக விளங்கிய இவர் 1970 ஆம் ஆண்டு உருவாக்கிய படம் சொர்க்கம். சிவாஜிகணேசனின் அட்டகாசமான நடிப்பில் உருவான இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. சிவாஜியின் இந்த படத்துடன் அவர் நடித்த எங்கிருந்தோ வந்தாள் படமும் தீபாவளிக்கு திரைக்கு வந்தது இரண்டு படங்களும் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டன. சென்னையில் புதிதாக கட்டப்பட்ட தேவி பாரடைஸ் திரையரங்கில் இந்த பரடைஸ் முதல் தமிழ் படமாக திரையிடப்பட்ட பெருமையையும் பெற்றுக்கொண்டது.

இந்தியாவிலிருந்து தமிழ் படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து திரையிடடவர் சினிமாஸ்கோப் கே குணரத்தினம் இவர் 1940-ஆம் ஆண்டு களின் இறுதியில் வெ ழிவந்த ஏவிஎம்மின் வாழ்க்கை படத்தை இறக்குமதி செய்து இலங்கையில் திரையிடடார் அதில் தொடங்கிய அவருடைய சினிமா வாழ்க்கை சொர்க்கத்துடன் முடிவுக்கு வந்தது. சினிமாஸ் சார்பில் திரைக்கு வந்த கடைசி படம் சொர்க்கமாகும் . அதன் பிறகு திரைப்படக் கூட்டுத்தாபனம் பட இறக்குமதியை தன் வசப்படுத்திக் கொண்டது .


மிகுந்த பொருட்செலவில் ராமண்ணா சொர்க்கம் படத்தை தயாரித்தார் படத்தில் ஆர் எஸ் மனோகர் இரட்டை வேடம் தனது உடல் பாவங்களினால் வித்தியாசமான நடிப்பை வழங்கி இருந்தார் மனோகர். இரட்டை வேடங்கள் மனோகருக்கு என்றால் வாசுவுக்கு படத்தில் நான்கு வேடங்கள் அதேபோல் சச்சினுக்கு மூன்று வேடங்கள் இந்த கும்பலுக்கு பாலாஜி முத்துராமன் நாகேஷ் ராஜஸ்ரீ என்று மேலும் பலரும் படத்தில் இடம் பெற்றார்கள் .

கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் சங்கர் வாழ்வில் பணம் சம்பாதிப்பதே இலட்சியம் என்று நம்புகிறார் அவனின் நண்பன் மூலம் செல்வந்தர் ஒருவரின் உதவி கிட்ட சங்கரின் வாழ்க்கையில் செல்வமும் செல்வாக்கும் கூடுகிறது கூடவே புகை மது பழக்கமும் தோன்றுகிறது இதைப் பார்த்து அவர் மனைவி கலங்குகிறாள் குழந்தையுடன் அவனை விட்டு விலக முடிவு செய்கிறாள் இதற்கிடையே வில்லனின் சதியில் சங்கர் சிக்குக்கிறான் .


படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் கே ஆர் விஜயா இருவரும் தோன்றும் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருந்தன படத்தின் கதை ஓட்டத்துடன் நாகேஷின் பாத்திரம் அடக்கப்பட்டிருந்தது. அதேபோல் பாலாஜியின் நடிப்பும் இயல்பாக இருந்தது . நன்நுவின் மூலக் கதைக்கு சக்தி கிருஷ்ணசாமி கதை வசனங்களை எழுதியிருந்தார் வசனங்கள் கவரும்படி இருந்தன படத்துக்கு இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இவரின் இசையில் ஆலங்குடி சோமு இயற்றிய பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பாடல் டிஎம்எஸ் குரலில் மிகவும் பிரபலமடைந்தது விஜயலலிதாவின் நடனம் கவர்ச்சிகரமாக அமைந்தது ஏனைய பாடல்களை கண்ணதாசன் இயற்றினார்

படத்தில் ஒரு நாடகக் காட்சியில் யூலியஸ் சீசராக சிவாஜி நடித்திருந்தார் ரசிகர்கள் சிவாஜியின் நடிப்பை பலவிதத்திலும் ரசித்து பாராட்டினார்கள் ஈஸ்ட்மென் கலரில் உருவான சொர்க்கம் ரசிகர்களை காலம் கடந்தும் ரசிக்கும் படமாக அவர்கள் மனதில் இடம் பெற்றிருந்தது

No comments: