சினிமா விமர்சனம் - டகால்டி திரை விமர்சனம்



.

சந்தானம் காமெடியனாக கொடிக்கட்டி பறந்தாலும் ஒரு ஹீரோவாக ஜெயிக்க போராடி வந்தார். அந்த நிலையில் தான் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2, ஏ1 ஆகிய படங்கள் இவரை ஹீரோவாகவும் வெற்றிப்பெற வைத்தது, இப்படி தொடர் வெற்றியில் சந்தோஷத்தில் இருக்கும் சந்தானத்திற்கு மேலும் சந்தோஷத்தை சேர்த்ததா? இந்த டகால்டி பார்ப்போம்.

கதைக்களம்

சந்தானம் மும்பையில் டகால்டி வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றார். அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் சாம்ராட் தனக்கு தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர்.
இவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் கொடுக்கின்றார். அந்த சமயத்தில் மும்பையில் டான்-ஆக இருக்கும் ராதாரவியிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொள்ள ராதாரவி உத்தரவிடுகின்றார்.
சந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் ஒப்படைக்கிறேஎன் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகி, அந்த பெண்ணை எப்படியோ கண்டுப்பிடிக்கின்றார், பிறகு அந்த பெண்ணை சொன்னது போல் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.


படத்தை பற்றிய அலசல்

சந்தானம் எப்போதும் ஒன் லைன் கவுண்டரில் கிங் தான், அந்த விதத்தில் இந்த படத்திலும் தூள் கிளப்புகின்றார், அதிலும் கூடுதல் போனஸாக யோகிபாபுவும் களத்தில் இறங்க படம் அரை மணி நேரம் செம்ம கலகலப்பாக செல்கின்றது.
பிறகு கால்ஷிட் பிரச்சனையா என்று தெரியவில்லை, யோகிபாபுவை கழட்டிவிட்டு சந்தானம் மட்டும் பெண்ணை தேடி செல்கின்றார், ஹீரோயின் சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையை சந்தானம் பயன்படுத்தி அவரை மும்பை கொண்டு வரும் காட்சிகள் ஓரளவிற்கு பரவாயில்லை ரகம், அதுவும் கதை கேட்கும் காட்சி எல்லாம் உண்மையாகவே சிரிக்க வைக்கின்றது.
ஆனால், அதை தொடர்ந்து அவரை மும்பையில் வில்லனிடம் ஒப்படைக்கும் வரைக்கும் சந்தானம் கில்லி விஜய்யாகவே மாறிவிட்டார், அது நமக்கு செட் ஆகவில்லையோ என்னமோ, அட எப்பப்பா காமெடி வரும் என காத்திருக்க வைக்கின்றது, அதிலும் ஊரே துரத்தில் வந்தாலும் ஒவ்வொருவராக சந்தானம் அடித்து ஏதோ வீடியோ கேம் போல் டாஸ்க் முடித்துவிட்டு செல்வது அநியாயத்திற்கு லாஜிக் மீறல்.
ஒரு வழியாக கிளைமேக்ஸ் வந்ததும் வழக்கமான காமெடி படங்களில் ஆள் மாறாட்ட கதை கொஞ்சம் சிரிப்பை வரவைக்கின்றது, மேலும், யோகிபாபு வரும் இடமெல்லாம் சிரிப்பிற்கு புல் கேரண்டி, கிளைமேக்ஸில் ஹீரோயினை திட்டும் காட்சியில் எல்லாம் நமக்கே சந்தோஷம் வர காரணம், ஹீரோயின் ரித்திகா சென் கதாபாத்திரம் தான்.
கிளைமேக்ஸில் அவருக்கு போதை ஊசி போட்டு விடுவார்கள், அப்போது மக்கு மாதிரி அவர் பேசுவார், ஆனால், அந்த போதை ஊசி போடாமலேயே படம் முழுவதும் இந்த ஹீரோயின் இப்படி தான் பேசி வருகின்றார், எந்த ஹீரோயின் மக்கு என்று ஒரு போட்டி வைத்தால், நான் தான் பர்ஸ்ட் என்று இவர் வந்த நிற்பார் போல.
வில்லன் கதாபாத்திரமும் படுமோசமாக அமைந்துள்ளது, தீபக் குமார் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்க, விஜய் நரேன் இசை சந்தோஷ் நாரயணனை நியாபகப்படுத்துகின்றது.

க்ளாப்ஸ்

சந்தானம் முடிந்த அளவிற்கு படத்தை தாங்கி கொண்டு செல்கின்றார், அவருக்கு மிக பக்கபலமாக யோகிபாபு கலக்கியுள்ளார்.
பிரமானந்தம் கிளைமேக்ஸ் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நின்று செல்கின்றார்.

பல்ப்ஸ்

நல்ல கதை இருந்தும், தடுமாறும் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதி.
இன்னுமே கொஞ்சம் நகைச்சுவை சேர்த்து இருக்கலாம் என்று தோன்றியது.
மொத்தத்தில் டகால்டி படத்தில் மட்டுமில்லை நம்மையும் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார் சந்தானம்.

No comments: