பண்புடையார் கண்ணீர் பாரையே திருத்திவிடும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் ...

.


        மலர்களின் கண்ணீர்  
               மனிதனுக்குத் தெரிவதில்லை
        பன்னீராய் மாறியது
                பரவசத்தைக் கொடுக்கிறது 
        ஏழைகள் கண்ணீர்
               எவருக்கும் தெரிவதில்லை
         வற்றாமல் பெருகியது
               மனமுடையச் செய்கிறது 

         சிப்பியின் கண்ணீர்
                முத்தாக மிளிர்கிறது 
         செங்கரும்பின் கண்ணீர்
                தித்திப்பைத்  தருகிறது 
         சொத்துள்ளார் கண்ணீர்
                 சுகத்தைக் குறிவைக்கிறது 
          சோம்பலுடன் திரிவார்க்கு
                    கண்ணீரே வருவதில்லை  ! 

         சீதையின் கண்ணீர்
                      இராவணனை வீழ்த்தியது
        சிலம்பினது கண்ணீர்
                         ஆட்சியையே வீழ்த்தியது 
        பாண்டவர்கள் கண்ணீர்
                           பாதகத்தை வீழ்த்தியது
        பண்புடையார் கண்ணீர்
                           பாரையே திருத்திவிடும்  ! 

No comments: