இது இந்த வாரம் 30,1.2020 அன்று ஒளிபரப் பானது. இது ஐந்தாம் பகுதி. அக் காலத்தில் நான் முதன் முதல் தயாரித்த "சங்காரம்" நாடகம் பற்றி இங்கு பேசப்படுகிறது சங்காரம் நாடகம் பற்றி ஈழத்து நாடக வரலாறு எழுதுவோர் பலர் குறிப் பிடுவ தில்லை.அது பற்றி அவர்களுக்குத் தகவல்கள் கிடைக்கவில்லை போலும்
'
அது ஓர் மக்கள் போராட்ட நாடகம்
'
அது ஓர் மக்கள் போராட்ட நாடகம்
.அடக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் சாதி,மத இன,நிற வர்க்க அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவதைக் காட்டும் நாடகம்
1960 70 களில் இத்தகைய ஓர் சிந்தனைப் போக்கும் செயல் போக்கும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இனமக்களிடையே எங்கணும் காணப்பட்டது
முதன் முதலாக மட்டக்கள்ப்பு கூத்து வடிவம் இன்னொரு மாற்றம் பெறுகிறது
அப்போது நாம் மட்டக்கள்ப்பு நாடக சபை என்றொரு அமைப்பை உருவாக்கிச் செயற்பட்ட காலங்கள் அவை
துடிப்பு மிகுந்த இளம் பராயம்..
எனது உடலில் மிகுந்த வலு இருந்த காலம்
எனது உடலில் மிகுந்த வலு இருந்த காலம்
1969 இல் கூத்து மரபினடியாக நவீனம் கண்ட நாடகம் இந்தச்
சங்காரம்
சங்காரம்
இதில் நடித்தோரில் மிகபெரும்பாலானோர் மரபுவழிக் கூத்துக்கலைஞற்கள்,
வட்டக்களரியில் கூத்து விடிய விடிய ஆடியவர்கள்,
மிக நன்றாக ஆடப் பாடக் கூடியவர்கள்
மத்தளம் அடித்தவர் செல்லையா அண்ணாவியார்
செல்லையா அண்ணவியார் வித்தியானந்தனால் நவீனத்துக்குப் பழக்கப்பட்டவர்,
ஆனால் மறவர்கள் அப்படியன்று
அவர்களுக்கு நவீனம் புதியது
. எனினும் வெகு லாவகமாக அதனை உள்வாங்கி வெளிப்படுத்தினர்.'
சங்காரம் கூத்தின் உள்ளடக்கமோ புதிது
அது பேட்டியில் விபரிக்கப்படுகிறது
, கூத்துக்கலைஞர்களோடு இணைந்து கூத்தை இன்னொரு திசைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் 1960 களின் பிற்பகுதியில் ஆரம்பித்து விட்டன
காத்தான் கூத்துப் பின்னணியில் எழுந்த கந்தன் கருணை இன்னொரு உதாரணம்
இவையாவும் இற்றைக்கு 52 வருடங்களுக்கு முன்னரேயே ஆரம்பித்து விட்டன என்பதை இன்றுள்ள இளம் தலை முறை அறியாது, அல்லது அவர்களுக்குக் கூறப்படுவதும் இல்லை
இப்பேட்டியில் 1960 களின் பிற்பகுதியில் சங்காரம் உருவான கதை கூறப்படுகிறது
சங்காரத்தின் கதாநாயகனின் மாதிரி உரு அன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரையும் சாதி,மத இன பேதமின்றி ஒன்று திரட்டி தமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராட வைத்த மட்டக்கள்ப்பில் வாழ்ந்த ஓர் சாதாரண ஒரு தொழிலாளர் தலைவன் என்பதும் இங்கு பேசப்படுகிறது
வேர்களும் விருட்சங்களும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பில் ஒரு சிறு மாற்றம்
இனிமேல் டான் டி வி வியாழக்கிழமை தோறும் இரவு 9,00 மணியிலிருந்து 10,00 மணி வரை இந்நிகழ்வை ஒளிபரப்ப உள்ளது.அதற்கான அறிவித்தலும் நேயர்களுக்குக் கொடுதுள்ளது
'இந்தப் பேட்டி நிகழ்வில் 1960 தொடக்கம் 1970 வரை எனது செயற்பாடுகள் இடம் பெறுகின்றன
பாருங்கள்
50 வருடங்களுக்கு முந்திய பல செய்திகளை அறிவீர்கள்
பார்த்தபின் கருத்துகளைப் பகிருங்கள் ,
No comments:
Post a Comment