சுவீட் சிக்ஸ்டி - கவலை இல்லாத மனிதன் - ச.சுந்தரதாஸ்

.


கவிஞராகவும் கதாசிரியராகவும் புகழ்பெற்றிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதிப் பகுதியில் படத் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். கண்ணதாசன் புரடக்சன் சார்பில் அவர் தயாரித்த 3வது படம் தான் கவலை இல்லாத மனிதன் 1960இல் இப்படம் வெளிவந்தது.

கண்ணதாசனின் பாடல்களினால் ஏராளமான படங்கள் வெற்றியடைந்து கொண்டிருந்தன . இதனால் சிவாஜியும் ஸ்ரீதரும் கண்ணதாசன் படம் தயாரித்தால் நடித்து இயக்க தயாராக இருந்தார்கள் . ஆனால் கண்ணதாசன் அந்த வாய்ப்பை விட்டுவிட்டு நகைச்சுவை நடிகராக மிளிர்ந்துகொண்டிருந்த ஜே பி சந்திரபாபுவை தன படத்திற்கு கதாநாயகனாக்கினார் . போதாக்குறைக்கு அதில் நடிப்பதற்கு சந்திரபாபு கேட்ட தொகையையும் ஊதியமாகக் கொடுத்தார்.

அன்று பிரபலமாக இருந்த எம் ஆர் ராதா , ரி ஆர் மகாலிங்கம் , எம் என் ராஜம் . ராயசுலோஜனா ஆகியோரும் இதில் நடித்தார்கள். பிரபல இயக்குனரான கே சங்கர் படத்தை இயக்கினார் .

வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த படடதாரியான சந்திரபாபுவுக்கு பிறர் துன்பங்களைத் துடைப்பத்தால் தான் ஆர்வம். அவர் தந்தை பாலையாவுக்கோ பணத்தின் மீது தான் குறி. அன்னான் எம் ஆர் ராதா ஊதாரியாக பெண்பித்தனாக திரிகிறார். வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த எம் என் ராஜத்தை சந்திரபாபுவுக்கு மனம் முடித்துக் கொடுக்க பாலையா முனைகிறார். ஆனால் ராஜமோ ஏழைக் கவிஞரான டி ஆர் மகாலிங்கத்தை காதலிக்கிறார். இவர்களை சேர்த்து வைப்பதில் சந்திரபாபு பல சிரமங்களுடன் முயட்சி செய்கிறார்.






இப்படி அமைக்கப் பட்ட கதையில் . பிறருக்கு உதவுவதாக வரும் சந்திரபாபு படத்தயாரிப்பைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் கண்ணதாசனுக்கு எக்கச் சக்கமான தொல்லைகளைக் கொடுத்தார். நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பை தாமதப் படுத்தினார். இதனால் படத்தின் இறுதிக்கு காட்சியைக்  கூட திடடமிடட படி  எடுக்க முடியாமல் எனோ தானோ என்று எடுத்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட்து . இறுதியில் படம் வெளிவந்து தோல்வி கண்டது. கண்ணதாசனை கடன்காரன் ஆக்கியது


திரையுலகில் கவலையில்லாத மனிதர்களாக வாழ்ந்தவர்கள் கண்ணதாசனும் சந்திரபாபுவும். ஆனால் படம் இருவருக்கும் கவலைகளையே பெற்றுக் கொடுத்தது.



படத்தில் குறிப்பிடக்கூடிய அம்சம் அதில் இடம் பெற்ற பாடல்கள். கவிஞரின் சாகாவரம் பெற்ற பாடலான ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்..’ இன்றும் காலம் கடந்து ஒலிக்கிறது. அதே போல் ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்,’ ‘சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்,’ ‘காட்டில் மரம் உறங்கும்போன்ற பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் சிறப்புப் பெற்றன.

எம்.ஆர்.ராதா, பாலையா இருவரும் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல உதவினார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் கண்ணதாசனும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.

வெற்றிப் படமாகும் என்று நினைத்து தோல்விப் படமாகி பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடலை கண்ணதாசனுக்குப் பரிசாகக் கொடுத்தது கவலையில்லாத மனிதன்!




No comments: