லண்டனில் முதற் தடவையாக ‘சாஸ்வதம்’ போட்டி நிகழ்ச்சி - நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்

.

‘பரதநாட்டியத்தின் உச்சம் இசையின் காட்சி வடிவம். அது ஒரு சடங்கு. பக்தியின் செயற்பாடு. நடனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவர் அதே அளவுக்கு இசைக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த இரண்டு கலை வடிவங்களிலும் முழுப் பயிற்சி பெற வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்தகைய கலைவடிவத்தை இன்று ‘சாஸ்வதம்’ என்ற நிகழ்ச்சி மூலம் முதற்தடவையாக முன்னெடுத்த கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும், ஸ்ரீமதி பவித்ரா சிவயோகம் அவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். லண்டனில் பரத நாட்டியத்தைப் பயின்று வரும் மாணவர்கள் தமது அபிநயம் இசை இரண்டையும் மிக அழகாக இணைத்துத் தம் கருத்துக்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்திய விதம் அபாரமானது. நடனக்கலையைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் உட்பட, மாணவர்களின் திறமையை விதந்து மகிழ்கின்றோம். அத்தோடு களம் அமைத்துக் கொடுத்த ருனுநயச புரinநௌள னுயnஉந இங்கிலாந்தின் நிர்வாகியாகவும் சர்வதேச நடனப்போட்டிகளின் பரிசோதகராகவும் செயற்படும் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும், சென்னை ராஜ், சண் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், கலாச்சார நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்ட பவித்திரா சிவயோகத்தினதும் கடின முயற்சிக்கு தலைசாய்க்கின்றோம். இவர்களின் வித்தியாசமான இச்செயற்பாடு மண்டபம் நிறைந்த மக்களின் இதயங்கனின் மீது பொழிந்த அமுத மழையாக இருந்தன’ என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த முன்னாள் லண்டன் நகர முதல்வரும் தற்போதைய ஹரோ நகர சபை உறுப்பினரமான லண்டன் பாபா- சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் தமது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்திருந்தார்.






லண்டனில் பரதநாட்டியத்தைப் பயிலும் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புக்களிலிருந்து திறமைமிக்க மாணவக்குழுக்கள் பங்குபற்றி; நடனத்தின் உள்ளார்ந்த அழகை உள்ளுணர்வுகளோடு வெளிப்படுத்தியிருந்தனர். ஸ்ரீமதி சுஜாதா சிறீயின் மாணவர்கள் தமது கலைத் திறமையை வெளிப்படுத்தி; முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டனர். ‘சாஸ்வதம்’ நிகழ்வில் நாட்டியத் தாரகைகளின் கலை நுட்பங்களை ஆழமாகக் கிரகித்து மதிப்பீடு செய்யும் நடுவர்களாக லண்டனில் பிரபல்ய நாட்டிய ஆசிரியர்களாகத் திகழும் ஸ்ரீமதி ராகினி ராஜகோபால், ஸ்ரீமதி ஸ்ரீமதி பத்மினி குணசீலன், ஸ்ரீமதி பாமினி சித்ரரஞ்சன், ஸ்ரீ ரூபேஷ் கேசி, கலாநிதி ஜெயந்தி யோகராஜா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை மிகச் சிறப்பைக் கொடுத்திருந்தது.

போட்டி நடனங்களுக்கு மத்தியில் விருந்தினர் கலைத்திறைமைகளை வெளிக்காட்டும் முகமாக நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் ஸ்ரீ ரூபேஷ் கேசி இணைந்து வழங்கிய வரவேற்பு நடனம் நளினத்துடன் வசீகரம்;, அழகியல் உணர்வை வெளிக்காட்டி நின்றது. செல்வன் ஆதித்திய சர்மா, மற்றும் பாரத கலா ஃபைன் ஆட்ஸ் குழுவினரின் நடனம், பபிதா ஹரிதரன் போன்ற நடனக் கலைஞர்களின் நடனங்களும் இடம்பெற்றிருந்தன.



போட்டியாளர்களுக்கும் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கும் விருதுகளை வழங்குவதற்கு ஹெபிற்றா லிமிற்டட் திரு. மனோ சிவயோகம், பொன்மகள் யுவலறி உரிமையாளர்கள் திருமதி வாசுகி தயாகரன், வாஸ்ரா சாறி உரிமையாளர்களான திருமதி தர்ஷனா மனோ போன்றோர் முன்வந்து தமது ஆதரவை வழங்கியமை இந்நிகழ்ச்சிக்கு மிகச் சிறப்பையும், உற்சாகத்தையும் அளித்தது. லண்டனில்

இடம்பெறும் பல்வகை கலைநிகழ்சிகளிலிருந்து வித்தியாசமான உணர்வையும், ஆத்மார்த்த, மகிழ்வையும் நிறைத்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்தமை பாராட்டப்படவேண்டியதொன்றாகும்.

நவஜோதி ஜோகரட்னமும் சஸ்கியா யோகராஜாவும் அழகுறவே இக்கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தனர்.

7.1.202





No comments: