பரமட்டா பொங்கல் நிகழ்வு - செ .பாஸ்கரன்

.


பரமட் டா  பொங்கல் நிகழ்வு சனிக்கிழமை 18.01.2020 அன்று காலை 9.45 மணிமுதல் 1.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு பரமட் டா சதுக்கத்தில் இடம் பெறுவதாக இருந்தது பின்  மழை காரணமாக Pemulwuy Community Center உள்ளரங்க மண்டபத்தில் நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு  அங்கு நடைபெற்றது. 

CMRC அமைப்புடன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அன்பாலயம், தமிழ்முரசுஅவுஸ்திரேலியா, கம்பன்கழகம் , சந்திப்போம் வாழ்த்துவோம், தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு (TWDG) ஆகிய தமிழ் அமைப்புக்கள் ஆதரவு வழங்க மங்கள இசையுடன்  இந்நிகழ்வு ஆரம்பிக்கப் பட்டு இடம்பெற்றது.

  





இந்நிகழ்வுக்கு  MS Melissa Monteiro ( CEO CMRC) வரமுடியாமையால் Aurelia Rahman  , திரு திருநந்தகுமார் ( Vice President , NSW Federation of community languages schools) , MS Julie Owens ( Federal Member for Parratta), Parramatta Lord Mayor Cr Bob Dwyer, Dr Geoff Lee ( Member for Parramatta)  ஆகியோரும் பல சமூக அமைப்புக்களின் முக்கிய உறுப்பினர்களும் மண்டபம் நிறைந்த மக்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

ஹோம்புஷ் தமிழ் பாடசாலை மாணவர்களதும் , மவுண்ரோயிட்  தமிழ் பாடசாலை மாணவர்களதும் கலாசார நடன நிகழ்வு சிறப்பம்சமாக இடம்பெற்றது. சிட்னியில் உள்ள சில பாடசாலைகளுக்கு அழைப்பு விடுத்தபோதும் நேரமின்மை காரணமாக சில பாடசாலை நிர்வாகம் கலந்து கொள்ளமுடியாதிருப்பதாக அறிவித்திருந்தார்கள். எதிர் வரும் காலங்களில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தால் நன்றாக இருக்கும்.



கலாபவனம் நாட்டிய கல்லூரி மாணவிகளின் நடனம்,  Luxmi Fine Arts மாணவர்களின் கர்நாடக இசை நிகழ்வு , Durga Shivaji , Aruthy Kumaran  ஆகியோரின் நடனம், ரஞ்ஜீவ் கிருபைராஜாவின் பாடல் என பொங்கல் நிகழ்வுகள் மிக சிறப்பாக அமைத்திருந்தது.

வந்தவர்களுக்கு பொங்கலும் இனிப்பு வகை தின்பண்டங்களும் வழங்கப் பட் டு கொண்டாடப் பட்டது .

வெள்ளைத்தேசத்தில் நம் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது மகிழ்வாக இருந்தது. குறிப்பாக இளையோர் கூட்டம் நிறையவே இருந்தது இரட்டிப்பு மகிழ்வே.


























































No comments: