மெல்பன் கே.சி தமிழ்மன்றத்தின் வருடாந்த பொங்கல் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் Keysborough GAELIC மைதானத்தில் காலை முதல் மாலை வரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வெளியரங்கில் மூத்த இளம் தலைமுறையினரின் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப்போட்டிகளும் உள்ளரங்கில் சிறார்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் கைவினை, கோலம் வரைதல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இம்முறை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கதை சொல்லும் நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மெல்பன் எழுத்தாளர் விலங்கு மருத்துவர் நடேசனின் சிறுகதையொன்றை திருமதி சுமதி அருண் குமாரசாமி சமர்ப்பித்தார். திரு. முருகபூபதி தமிழ் சினிமாவில் நாவல் - சிறுகதைகளின் தாக்கம் பற்றியும் திரு. மணியன் சங்கரன் தான் எழுதிய சிறுகதையொன்றையும் சமர்ப்பித்தார்.
சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் நன்றி நவின்றார்.
No comments:
Post a Comment