உலகச் செய்திகள்


ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : ட்ரம்ப் 

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அரை  மணி நேரத்தில் இஸ்ரேல் அழிக்கப்படும்

 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில்

ஆயுதக் களைவு குறித்து அமெ­ரிக்­கா­வுடன்  பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ளது

ஈரானால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அந்நாட்டை நோக்கியே திரும்பும்

இலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்

சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி




ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது : ட்ரம்ப் 

02/07/2019 ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு 300 கிலோகிராமை எட்டியுள்ளதாக ஈரான் நேற்று அறிவித்ததை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் எல்லை மீறியுள்ளதாக ஈரான் மீது சர்வதேச கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
300 கிலோகிராமுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளது. அத்தோடு செறிவூட்டப்பட்ட யூரேனியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகவும் , அணு ஆயுத தயரிப்பிற்கு பங்கு வகிக்கின்றது.
இதனால் ஈரானுடான ஒப்பந்ததை்தை கைவிட்டு அமெரிக்க ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதற்கு எதிராகவே ஈரான் இவ்வாறான செயலில் ஈடுப்பட்டு பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அரை  மணி நேரத்தில் இஸ்ரேல் அழிக்கப்படும்

03/07/2019 அமெ­ரிக்கா ஈரான் மீது தாக்­குதல் நடத்­து­மானால் இஸ்ரேல் அரை மணி நேரத்தில் அழிக்­கப்பட்டு விடும் என ஈரா­னிய சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் எச்­ச­ரித்­துள்ளார்.
ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டையி­ லான பதற்­ற­நிலை அதிகரித்­துள்ள நிலை ­யி­லேயே ஈரா­னிய பாரா­ளு­மன்­றத்தின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆணை­யகத் தலைவர் மொஜ்­தபா ஸோல் நோர் இவ்­வாறு எச்­ச­ரிக்­கையை விடுத்துள்ளார்.
இந்­நி­லையில் இஸ்­ரே­லா­னது ஈரான் தனது தாழ் செறி­வூட்­டப்­பட்ட யுரே­னிய கையி­ருப்பின் அளவை அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில்  வரை­ய­றுக்­கப்­பட்­ட­திலும் அதி­க­மாக்­கி­யுள்­ளமை குறித்து அந்­நாட்­டுக்கு எதி­ராக  ஐரோப்­பிய ஒன்­றி யம் தடை­களை விதி க்க வேண்டும் என அழைப்பு விடுத்­துள் ­ளது.
''ஈரான் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை மீறி­யுள்ள நிலையில் நீங்கள் அதற்­கான நட­வ­டிக்­கையை  எடுக்க வேண்டும்'' என  இஸ்ரேலிய  பிரத மர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு ஐரோப்பிய நாடுகளைக் கோரியுள்ளார்.  நன்றி வீரகேசரி 














72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில்

04/07/2019 பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வாழும் இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினைத் தொடர்ந்தே ஷவாலா தீஜா சிங் எனும் இந்துக் கோயில் திறக்கப்பட்டுள்ளது.
இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. 
இந்தநிலையில் கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இந்து கடவுள் சிலைகள் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மூடப்பட்ட குறித்த கோயில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னரே, சியால்கோட்டிலுள்ள 500 ஆண்டுகள் பழைமையான குருத்வாரா கோயிலுக்குள்ளும் இந்திய சீக்கிய பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்கியது.
இதற்கு முன்னர் குறித்த குருத்வாரா கோயிலுக்குள் பாகிஸ்தானியர்கள் மட்டுமே நுழைய முடியும் என்பதுடன், இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
















ஆயுதக் களைவு குறித்து அமெ­ரிக்­கா­வுடன்  பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ளது

05/07/2019 ஆயுதக்களைவு மற்றும் தந்­தி­ரோ­பாய ஸ்திரத்­தன்மை குறித்து அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ரஷ்யா தயா­ரா­க­வுள்­ள­தாக  ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் நேற்று தெரிவித்துள்ளார்.
இத்­தா­லிய பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு அளித்த பேட்­டி யின் போதே அவர் இவ் ­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புடன் ஜப்­பானில் இடம்­பெற்ற உச்­சி­மா­நாட்டின் போது கலந்­து­ரை­யா­டி­ய­தாக அவர் கூறினார்.
ஆயுதக் களைவு  தொடர்பில் உறு­தி­யான  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது சர்­வ­தேச ஸ்திரத்­தன்­மைக்கு பங்­க­ளிப்புச் செய்யும் என அவர் தெரி­வித்தார்.
விளா­டிமிர் புட்டின்  முக்­கிய அணு ஆயுத உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெறு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்றில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை  கைச்­சாத்­திட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
1987ஆம் ஆண்டு  அமெ­ரிக்­கா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட இடை­நிலை அணு ஆயுதப் படை உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து ரஷ்யா வெளியே­று­வதை நடை­மு­றைப்
ப­டுத்­து­வ­தற்­கான  ஆணை­யொன்றை புட் டின் அன்­றைய தினம் வெளியிட்­டி­ருந்தார்.
அணு ஆயுதப் போர் ஒன்று ஏற்­படும் அபா­யத்தை  தடுக்கும் முக­மாக கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்த அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா ஏற்­க­னவே வில­கி­ய­தற்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே   மேற்­படி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அத்­துடன் ரஷ்­யா­வா­னது  தனது இரு புதிய  சக்தி வாய்ந்த கப்­பல்­களை  பயிற்சி நட­வ­டிக்­கை­யொன்­றுக்­காக  நோர்வே கடல் பிராந்­தி­யத்­துக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தமை பிராந்தியத்தில் பதற்ற நிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே  புட்டின் அமெரிக்காவுடன் ஆயுதக் களைவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தனது நாடு தயா ராக இருப்பதாக அறிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 
















ஈரானால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அந்நாட்டை நோக்கியே திரும்பும்

05/07/2019ஈரானால் விடுக்கப்படும்   அணுசக்தி அச்சுறுத்தல்கள்  அந்நாட்டை  நோக்கியே திரும்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்தினம் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
ஈரான் 2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்டதிலும் அதிகமாக அணுசக்தி கையிருப்பை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே  அமெரிக்க ஜனாதிபதியின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
"ஈரான் இப்போது தான் புதிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. (அந்நாட்டு ஜனாதிபதி) ரோஹானி அணுசக்தி உடன்படிக்கை எதுவும் இல்லாத பட்சத்தில் யுரேனிய செறிவூட்டலை தாம் விரும்பும் எந்த அளவுக்கும் அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்" என ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் ஏனைய தரப்பினர்  அமெரிக்காவிடமிருந்தான தடைகளிலிருந்து ஈரா னுக்கு நிவாரணத்தை வழங்குவதாக தம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமை காரணமாக ஈரான் தனது யுரேனிய செறிவூட்டலின் அளவை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக ரோஹானி நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு உடன்படிக்கையின் பிரகாரம் ஈரான் அணுசக்தி பிறப்பாக்கியின் உள்ளடக்கத்தை அகற்றி அதனை சீமெந்தால் நிரப்பியிருந்தாக தெரிவித்த ஈரானிய ஜனாதிபதி, ஆனால் அணுசக்தி உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ள ஏனைய நாடுகள் தாம்  அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய நேரத்துக்குள்  நிறைவேற்றாத பட்சத்தில்  எதிர்வரும் 7 ஆம் திகதி அரக் அணுசக்தி பிறப்பாக்கி உடன்படிக்கைக்கு முன்னரான  நிலைமைக்குத் திரும்பும் என  எச்சரித்துள்ளார்.
இந்த நிலைமை அபாயகரமானது எனவும் தாம்  அணு ஆயு தத்தை தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய உள்ளடக்கமான புளுட்டோனியத்தை பிறப்பிக்க முடியும் எனவும் ரோஹானி தெரி வித்தார். நன்றி வீரகேசரி 












இலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

05/07/2019 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
2009 இல் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வைகோ இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவுமே காரணம் என கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கையும் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனை காரணம் காட்டி வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருப்பதாக தெரிவித்து திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிபதி இன்று வைகோ தேசத்துரோக குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 
















ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்

05/07/2019 ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பலை பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி குறிப்பிட்ட கப்பல் சிரியாவிற்கு சென்று கொண்டிருந்தது என்ற சந்தேகத்திலேயே குறிப்பிட்ட கப்பலை  பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்கா விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே  கிரேஸ் -1 என்ற கப்பலை கைப்பற்றியதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
மரைன் படைப்பிரிவினரின் உதவியுடன் ஜிப்ரால்டர் துறைமுக மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர்.
30 மரைன் 42 கொமாண்டோக்கள் இந்த நடவடிக்கைகாக பிரிட்டனிலிருந்து ஜிப்ரால்டரிற்கு அனுப்பட்டுள்ளனர்.
பனாமா கொடியுடன் காணப்பட்ட  அந்த கப்பலிற்குள் ஹெலிக்கொப்டரிலிருந்து கயிற்றின் மூலம் மரைன் வீரர் ஒருவர் இறங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர் ஏனையவர்கள் படகு மூலம் அந்த கப்பலைநோக்கி சென்றுள்ளனர்.
இதேவேளை தனது எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை கடுமையாக கண்டிததுள்ள ஈரான் இது குறித்து விளக்கம் கோருவதற்காக பிரிட்டன் தூதுவரை அழைத்துள்ளது.  நன்றி வீரகேசரி 











சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி

06/07/2019 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நளினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருமாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
\Related image
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் “என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கிய, இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. 
27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மனுதாரர் நளினி, நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என கடிதம் வழங்கியுள்ளதாகக அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். நளினியின் விருப்பத்தை இந்த உயர்நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. தன்னுடைய வழக்கில் சட்டத்தரணி  இல்லாமல் தானே ஆஜராகி வாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும்போது, அதை நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதேநேரம், நளினியை ஆஜர்படுத்தும்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அரசு தரப்பில் கூறினாலும், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.
எனவே நளினியை பாதுகாப்புடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும் சிறை விதிகளை மீறாமல், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவும் ஜூலை 5 ஆம் திகதி பகல் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியது. 
அதன்படி நளினி ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  நன்றி வீரகேசரி 














No comments: