சுட் டெரிக்கும் நினைவுகள் - செ .பாஸ்கரன்

.


காட்டுப் பூவிற்கும் வாசமுண்டென்று 
 காட்டியவள் நீ 
கடைக்கண்ணால் கதை பேசினாய் 
கலகலத்துச்  சிரித்தாய் 
உளவியல் படிக்கும் மாணவிபோல் 
உள்ளும் வெளியும் எனைத் தேடினாய் 
நான் நீயாகவும் நீ நானாகவும் 
கடல் மடியில் மிதக்கும் படக்கானோம் 
கண் மூடிச் சிரிக்கும் சிறு பிள்ளைபோல் 
உலகை ரசித்தாய் 
வள்ளுவன் திருக் குறளுக்கும் 
ஒளவையின் ஆத்திசூடிக்கும் 
அர்த்தம் கேட்டாய் 
தொடர்பில்லாத இசைபோல 
அறுந்தறுந்து  வந்தது உன் பேச்சு 
மழைக்கால விட்டில் பூச்சிகளாய் 
நினைவுகளை தூவிவிட்டு தூரம் சென்றாய் 
மல்லிகைப் பூவை மணந்து பார்க்கிறேன் 
சொல்லிவைத்தாற்போல்   உன்வாசம் தருகிறது 
வேடன் அம்புபட்ட புறாவாய் 
மனம்  துடிதுடிக்கிறது 
நீ காட்டிச் சிரித்த நிலா 
இன்று அழுதுவடிகிறது
நுரையெறிந்த கடலலையும் 
குமுறிக்கொண்டிருக்கிறது 
உன்னை காணவில்லை என்ற குறைபோலும் 
எவ்வளவு தூரம் சென்றாலும் 
புறப்பட்ட இடத்தில் திரும்பவந்து 
தரித்து நிற்கிறது மனச்சங்கிலி 
நீளம் தொடர்கிறது நினைவுத் திரையில் 
நீலம்  கவிகிறது  வானவெளியில் 
சுட்டெரிக்கும்  நினைவுகளை 
சுமந்து நிற்கிறேன். 

No comments: