2019 சிட்னி இசைவிழாவில் நடைபெற்ற ஆடல் நிகழ்ச்சிகள் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


சிட்னி இசைவிழாவில் வழமையாக ஆரம்ப நாள் அன்று பிரபல ஆடற்கலைஞர் முரளீதரன் சிட்னி கலைஞர்களுடன் இணைந்து நாட்டிய நாடகத்தை நடத்தி வந்தார். இம்முறை வழமைக்கு மாறாக இசை விழா நடந்த மூன்று நாட்களுமே காலை நிகழ்வு ஆடலாகவே அமைந்தது.

இந்த மூன்று நிகழ்வுகளிலும் மிக முக்கியமான ஒரு கலை நிகழ்வாக அமைந்தது சக்தி என்ற இரண்டாம் நாள் நிகழ்வு. கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது பெண்மையின் சக்தி. 'ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே' என ஆரம்பிக்கும் சரஸ்வதியதுதியுடன் ஆரம்பமானது. காவியா முரளீதரனுடன் இணைந்து நாலு பெண்கள் ஆடினார்கள். அத்தனைவரும் வயது 13 தொடக்கம் 16 வரை மதிக்கத் கூடிய சிறுமிகள் அனைவரும் அபாரமாக ஆடினார்கள். இவர்கள் முரளீதரன், சித்திரா முரளீதரன் மாணவியர் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்தனர்.  

இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்த வானம், நாம் மேடையில் பார்க்கும் பத வர்ணத்திற்கான அத்தனை அம்சங்களும் இருந்தது. ஆனால் பாடல் புராண புருஷனா போற்றுவதாக அல்ல. சாதாரண வாழ்வில் காணும் பாத்திரமான பெண், வாழ்வில் அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பாடலாக தலை நிமிர்ந்து நில்லடி' சுரங்கள் ஜதிகள் யாவரும் இணைந்து அற்புதமாக ஆடினார்கள். அபினயம் வேறுபட்ட பிரச்சனையை வெவ்வேறு பெண்கள் எதிர் கொண்டு நிலைகுலையும் போது 'காவியா' அவர்களை தேற்றி 'தலை நிமிர்ந்து நில்லடி' என சக்தி ஊட்டுவதாக அமைந்தது.
அடுத்த பாடல் வயதுக்கு வந்த ஒரு பெண்ணுக்கு வீட்டில் போடும் கட்டுப்பாடுகள் உரக்கப் பேசாதே அதனை நடவாதே. இந்தியாதி அவளோ தனது உடல் மாற்றம் மன மாற்றம் மற்றவருக்கு புரியவில்லையே என்ற ஏகத்தை அழகாக பாடலாக அமைத்திருந்தார் முரளி. ஆடலும் அற்புதமாக அமைந்தது.


அடுத்து காவியா பெண்களை பார்த்து 'நீ ஒரு தலையாட்டிப் பொம்மையா' என கேட்பதாக பாடல். பெண் சந்தையிலே ஒருமாதிரி விற்கப்படுகிறாள். கணவனை தெரிவதில் இருந்து அவள் கருத்திற்கு இடம் கிடையா. திருமணத்திப் பின்னும் கணவனுக்கு தலையாட்டும் பெண்ணாகவே வாழ்ந்து முடியும் வாழ்வை காட்டினார். தில்லானுடன் இனியே நிறைவேறியது. கலைஞரை கௌரவிக்க என்னை மேடைக்கு அழைத்தார்கள். முரளீதரனிடம் 'பரத நாட்டியத்திற்கு ஒரு புதிய அர்த்தம் கற்பீத்தீர்கள்' என கூறி மகிழ்ந்தேன்.
மூன்றாம் நாள் காலை நம்பியார், பார்வதியின் பாதக் கச்சேரி. இவர்கள் இருவருமே கலாஷேத்திராவில் கற்றுத் தேர்ந்தவர்கள். ஆண் பெண் இணைந்து ஆடுவது அரிதாகவே காணப்படுவது இருவரும் அழகிய ஜோடிகள் கலாஷேத்திராவிற்கே உரித்தான அந்த சுத்தம பிடிப்பான அடவு ஜாதிகள். ஆதி தான் அல  பார்வதி (பெண் நடிகர்) சிவனாக அமர்ந்திருக்க நம்பியார் பூஜை செய்வது போன்று ஆரம்பமானது. தொடர்ந்து விறுவிறுப்பான ஆடல் மேடையை வியாபித்து ஆடினார்கள். இசை ஒலி பதிவு பண்ணப்பட்டவை. மேடை அலங்காரம் ஏதாவது செய்து மிக பெரிய மேடையை சிறுக செய்வதுடன், அழகிப் படுத்தியிருக்கலாமே எனத் தோன்றியது.

அவர்கள் அஷ்டபதி ஆடியது இசை கற்றுக் கொணடவர்கள் பல காலங்களுக்குபின் அஷ்டபதியை அழகாக பார்த்தது திருப்தி என்றார்கள். ஒரு ஆடல் ஆசிரியை எமக்கு விளக்கி இரசிக்க முடியும். ஆனால் மொழி புரியாதவர் என்ன ரசிப்பார்களா என கேள்வியை எழுப்பினார்கள் என் மனதிலே ஆடல் கலை சிட்னியில் பிரபலம் என்பதை மனதில் கொண்டே இசை விழாவில் பரத நிகழ்ச்சி நடைபெற்றது.  ஆனால் எத்தனை ஆடலை கற்று கொள்ளும் மாணவியர் வந்திருந்தனர் என எண்ண தோன்றியது. தெருவுக்கு தெரு ஆடல் கற்பிக்கப் படுகிறது. ஓவ்வொரு ஆடல் நிலையத்திலும் நூற்றுக் கணக்கில் மாணவியர்  அவர்களுக்கு அரங்கேற்றம் செய்யும் பெற்றோர். ஆனால் ஆடலை பார்க்க வருவோர் இவர்களில் யாரும் இல்லை.  அந்தோ பரிதாபம். 

நம்பியார் முருகன் பாடலுக்கு ஆடினா.த அழகிய மயில் மேல் வரு ஆனந்த முருகனாக எம்மை மயக்கினார். அடுத்த ஜாவளி, கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் ஆத்திரம் அவன் வீடு வரும் போது ஆத்திரம் அடைந்த மனைவி இரவு முழுதும் அவளுடன் களித்தாய் கண்கள் சிவத்திருக்கிறது. உனது ஆடைகள் ஏன் கலைந்து கிடக்கிறது. உன் உடலிலே நீண்ட கூந்தல் இது எப்படி வந்தது என கூறி அருகில் வராதே என கோபம் கொள்கிறான். இவற்றை எல்லாமே பரத மேடையில் பார்த்திருக்கிறோம், ரசித்தும் இருக்pறோம். ஆனால் இங்கோ அவற்றை கேட்ட ஆணில் இந்த உணர்வை கூறும் காரணங்களை நம்பியார் மிக மிக அழகாக எடுத்துக் காட்டினார். ஆண்கள் அதிகமாக பரதம் ஆடாமையால் இவற்றை பார்க்க கிடைப்பதில்லை. பின் இருவரும் சமாதானமாகி கூடுவது அற்புதம், தில்லானவுடன் தம்பதிகள் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

முதலாவது நாள் நிகழ்ச்சியாக நடந்த நடன நாடகம் முரளீதரனின் நெறியாழ்கையில் நடைபெற்ற 'சூரசம்காரம்'. சென்னையில் இருந்து முரளி ஒலி ஒளி பதிவான DVD  அனுப்பிவிடுவார். இங்கு இருக்கும் ஆசிரியைகள் அதை அப்படியே பழக்க வேண்டும். மாற்றம் ஏதும் செய்யக்கூடாது' பின் முரளீதரன் அவற்றை செப்பனிட்டு தன்னுடன் அழைத்து வரும் ஆடற்கலைஞரையும் இணைத்து மேடை ஏற்றுவார். இது காணும் பல தடவைகள் இவை மாதிரி பல நடன நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டு வெற்றிகரமாகவும் நடைபெற்றது. 

இம்முறை 'சூர சம்காரம்' நடன நாடகம் 5 வேறுபட்ட ஆசிரியைகளின் மாணவிகளும் இணைந்திருந்தார்கள். எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.  ஒவ்வொரு காட்சிக்கும் முன்னும் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விபரனை காட்சிக்கு காட்சி இது ஒரு பெரிய இடைவெளி பார்வையாளர் ஒருவர் என்னிம் கூறினார் நடன நாடகம் நடப்பதை பார்த்து நாம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமே தவிர எதற்கு விளக்கம்? என்றார். இங்கு வாழும் அறிஞர் ஆய்வாளர் தேர்ந்த கலைஞர் அவர் என்னிடம் 'என்ன சூர சம்காரம் என்றார்கள் சூரனை கொன்றது நினைவில் கூட இல்லையே என்றார். அடுத்த தடவை  முரளியின் நடன நாடகம்  நன்றாகவே அமையும் என நம்புகிறேன்.No comments: