.
ஒரு மகள்
ஒரு இளவரசி
நாளை ஒரு மனைவி
பின்பு ஒரு தாய்
சிறந்த நாட்கள் செய்யும்
சொந்த தெய்வம் போன்றவள்
உலாவித் திரியும் நிலாவாகும்
மனித இன்பத்தின் மறுவடிவம்
இவள் ஓர் அற்புத உயிரினம்
தடையற்ற வளம் கொண்ட
இவள் இல்லையென்றால்
பூமியில் உயிரோட்டம் இல்லை
புதைகுழி வெட்டும்
குகை மனிதர்களின்
நியாயமற்ற கைகளில்
குனிந்த தலையுடனும்
குறைக்கபட்ட கண்களுடனும்
மண்டியிட்டு விழுந்து
துரிதமாகத் தேய்கிறாள்
வரலாற்றில் பொறித்த
முறுக்கப்பட்ட பொய்களுடன்
முன்னோர் அளித்த பரிசுகளையும்
சுமக்க முடியாமல் சுமந்து
தனது அடுத்த இரகசியத்தை
மனதுக்குள் வளர்த்து
இரவில் தாமதமாக அழுகிறாள்
தோள் தேடுகின்றன
அவள் கண்ணீர்த் துளிகள்
கொல்லைப்புறத்தில்
ஓர் தங்கச் சுரங்கம் சிரிப்பதற்கு
அகந்தை களைந்து
நீ காரணமாக இருப்பாயா?
பெண்ணே
நீ ஓர் ஆச்சரியம்
வேரூன்றிய கருப்புக் கடல்
உன்னை யாரும் வார்த்தைகளால் சுடலாம்
உன்னை யாரும் கண்களால் காயப்படுத்தலாம்
இருண்டிருக்கும் உன் உள்ளடக்கத்தை
யாரும் களவாடிச் செல்லலாம்
வலியை உணர்ந்தபின்னும்
துக்கத்தில் வாழ்வதா?
தைரியம்
வலிமை
விசுவாசம்
பக்தி கொண்டவள் நீ
பலவீனம் வேண்டாம்
பரிதாபம் வேண்டாம்
காற்றுப் போல் எழு
முயற்சி செய்
உயரப்பற
இன்னும் பற
எதையும் நிறுத்தாதே
No comments:
Post a Comment