மலேசியாவின் பினாங்கு மாநிலத்து துணை முதல் அமைச்சர் மேதகு ராமசாமி ஐயா அவர்களிடமிருந்து குவைத் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வந்து ஆய்வறிக்கை வாசித்த கவிஞர் எழுத்தாளர் பன்னூல் பாவலர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவருடைய இலக்கியப்பணியையும், பாடல்களையும், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் என அவரது எழுத்துப்பணியை பாராட்டி 24.02.2019-ஆம் நாளன்று உலகளாவிய முறையில் “தமிழ் படைப்பிலக்கியச் செம்மல்” எனும் உயர் விருதினை கொடுத்து மலேயா பல்கலைக் கழகம், ஓம்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்புகளின் மூலம் நடந்த “உலக திருக்குறள் மாநாட்டில்” பெருமை செய்யப்பட்டது.
மேலும் அவரது தாயார் திருமதி. கெம்பீஸ்வரி அம்மாள் அவர்களுக்கு முதல்வர் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி மேடையில் தாய்மை மதிப்புறச்செய்ய அரங்கம் ஆத்மார்த்த நன்றிகளால் மனம் பூரித்து மகிழ்ந்தது.


இம்மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகளில் மேலே கூறியவர்களோடு சேர்ந்து மதிப்பிற்குரிய தொழிலாலதிபர் திரு. விஜி சந்தோசம், பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், தஞ்சை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. பாஸ்கர், தில்லி தமிழ்ச்சங்க தலைவர் திரு. பெரியண்ணன், சி.கே.பொறியியல் கல்லூரி அறங்காவலர் முனைவர் திரு. சி.கே. அசோக்குமார், தொழில் முனைவர் திரு. செந்தூர் பாரி, சிங்கையிலிருந்து பேராசிரியர் திரு. அழகேசன், ஆஸ்திரியாவிலிருந்து கவிஞர் திரு. ஜெயராம் சர்மா, தொழில் முனைவர் திரு. விஸ்வநாதன் கோவிந்தன், உதயசூரியன் தமிழேட்டின் ஆசிரியர், மலேசியாவிலிருந்து பேராசிரியர் திரு. மன்னர்மன்னன் மருதை, கவிஞர் திரு. முல்லை செல்வன், மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன், எழுத்தாளர் திரு. முருகன் கண்ணன், ஹைத்ரபாத் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் திரு. நடராசன் கணபதி, சாதனைச்செல்வி ஓவியா, திருக்குறள் அன்வர் பாஷா, பதிப்பாளர் திரு. பரிதி மற்றும் பிரான்ஸ், சிங்கப்பூர், இலங்கை, குவைத், இந்தியா என இன்னும் பல நாடுகளிலிருந்து பல தமிழ்ச்சங்கங்களின் ஆளுமைகளும் பல கல்லூரிகளின் பேராசிரியர்கள் முனைவர்களும் கலந்துகொண்டு இம்மூன்று நாடுகள் மாநாட்டு விழாவை பெரியளவில் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment