.
பரமட்டா பொங்கல் விழா 2019 சென்ற சனிக்கிழமை 16.02.2019 அன்று காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை பரமட்டா River Side Theater வெளி மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இவ்விழாவினை வழமைபோல் Community Migrant Resource Centre இன் பேராதரவோடு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , கம்பன் கழகம், தமிழ்முரசுஅஸ்திரேலியா,
சந்திப்போம் வாழ் த்துவோம் குழுவினர் மற்றும் அன்பாலயம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்திருந்தன. வென்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலை உட்பட பல சமூக அமைப்புக்கள் ஆதரவளித்து விழாவினை சிறப்பித்திருந்தன.
பிரதம விருந்தினராக பரமட்டா நகர முதல்வர் Mr .Andrew Wilson கலந்து கொண்டு சிறப்பித்தார். இவரை வென்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலை அதிபர் திரு அலோசியஸ் ஜெயச்சந்திரா அழைத்துவர சத்தியமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர இசை முழங்க பொங்கல் நிகழ்வு சரியான நேரத்திற்கு தொடங்கப் பட் டது . நிகழ்ச்சி தொகுப்பாளராக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் திரு சிசம்பு பிரபாகரன் தொகுத்து வழங்கினார் . மங்கள விளக்கை Mr .Andrew Wilson ஏற்றிவைக்க, பொங்கல் பானையை திரு திருமதி செ .பாஸ்கரன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் .அவுஸ்திரேலிய கீதத்தையும் தமிழ்மொழி வாழ்த்தையும் செல்விகள் துவாகினி ரட்ணசீலன் , சிவாஞ்சலி ரட்ணசீலன் ஆகியோர் மிக அழகாக இசைத்தார்கள்.
தொடர்ந்து CMRC community Development Worker for Community திருமதி கொன்சிலா ஜெரோம் வரவேட்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினரின் மூன்று குழந்தைகளான துளசி செல்வராசா , நிதுர்ஷி செல்வராசா , மொகிதா செல்வராசா ஆகியோரின் நாட்டிய நிகழ்வும் , கம்பன் கழக இளவல்களான ஜனார்த்தினி குமரகுருபரன் , கேசவி விக்னராஜ் , அபேசா பூபாலசிங்கம் , சிந்துஜன் ஞானமூர்த்தி ஆகியோர் பொங்கலின் முக்கியத்துவம் என்ற சொல் சுழற்சி நிகழ்வும் தொடர்ந்து சிவம் நடன பள்ளி மாணவிகளான ஸ்ரீப்ரியா ராகுலன், சௌமியா ஸ்ரீதரன், நர்த்தனா பார்த்திபன் ஆகியோரின் அழகிய நடன நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதம விருந்தினர் உரையை பரமட்டா நகர முதல்வர் Mr .Andrew Wilson உம் , சிறப்புரைகளை MS Aurelia Rahman , நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர், கலாநிதி பாலா விக்னேஸ்வரன் ஆகியோர் ஆற்றியிருந்தார்கள்.
இறுதி நிகழ்வாக சந்தோசம் கலைக் குழுமத்தினரின் இசை நிகழ்வு இடம்பெற்றது. சில பாடல்களை மிக இனிமையாக ரமேஷன் வேதாபரணம் , துஷ்யந்தன் தெய்வேந்திரன் , அபராஜிதன் கிறிஸ்டி ஆகியோர் பாடினார்கள் இதனை மயூரன் பேரின்பராசா தொகுத்து வழங்கினார்.
இனிய பொங்கல் உணவு வழங்கப்பட்டு 11.30 மணிக்கு பொங்கல் விழா நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment