இன்று ( 17.02.2019) 90 வது அகவையை தொட்டுநிற்கிறார் கவிஞர் அம்பி ..சிட்னியில் எங்கள் மத்தியில் வாழும் மூத்த எழுத்தாளர் கவிஞர் அம்பி என்று அன்பாக அழைக்கப்படும் அம்பிகைபாகர் அவர்களின் 90 வது பிறந்த தினம்  இன்று  17-02-2019 என்பது மகிழ்வாக இருக்கிறது. 

இலங்கை சாகித்திய விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். கொஞ்சும் தமிழ், அம்பி பாடல்,  வேதாளம் சொன்ன கதை, சிறுவர் பாடல்கள்,  யாதும் ஊரே…அம்பி கவிதைகள், பாலர் பைந்தமிழ், கிறீனின் அடிச்சுவடு மருத்துவத் தமிழ் முன்னோடி போன்றவை  அவரால் எழுதப்பட்ட நூல்களுள் சிலவாகும். 

அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் விரிவான ஆய்வு நூல் (அம்பி: வாழ்வும் பணியும்) 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட்து 

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிட தக்கது. 

அவுஸ்திரேலியாவில் நடந்த பல கவிஅரங்குகளை தலைமை தாங்கிய ஒரு மூத்த கவிஞர். பல கவிதை நூல் வெளியீடுகள் இவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

தமிழ்முரசுஅவுஸ்திரேலியா கவிஞர் அம்பி ஐயா அவர்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றது ..


No comments: