நீ தான் அந்த வானின் நட்சத்திரம்.. - வித்யாசாகர்!

.

னைக் கண்டால் மட்டுமே
பாய்கிறதந்த மின்சாரம்
பிறப்பிற்கும்
இறப்பிற்குமாய்..

உனக்காக மட்டுமே
இப்படி குதிக்கிறது என் மூச்சு
வானுக்கும்
பூமிக்குமாய் ..

உன்னை மட்டுமே
தேடுகிறது
கண்கள்
அழகிற்கும் அறிவிற்குமாய் ..

ஒருத்தியைக்கூட
பிடிக்கவில்லை
ஏனோ - நீ
ஒருத்தி உள்ளே இருப்பதால்..

உனைக் காண மட்டுமே
மனசு அப்படி ஏங்குகிறது
ஆனால்,
காதல் கத்திரிக்கா யெல்லாம்
அதற்குப் பெயரில்லை, 

இது அதற்கும் மேல்!

நீ தான்
எனக்கு அந்த
கனவில் வரும் பெண்,
நீ தான் எனக்கு அந்த
காணக் கிடைக்காத தேவதை,
நீயே எனக்கந்த 
வானத்து நட்சத்திரம்,
நீ மட்டுமே எனக்கு
அத்தனைப் பிரியமானவள்!

வா.,
ஒருமுறை சந்திப்போம்
மறுமுறை தெரியவில்லை; 
ஒருவேளை
உன்னில் நான் கரையாதிருப்பின் 
மீண்டும் மீண்டும் சந்திப்போம் வா..

No comments: