புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா

.


புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் உருவாக உள்ள தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தின் தொடக்க விழா 11.02.2019 (திங்கள் கிழமை) மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை புதுச்சேரியில் உள்ள செயராம் உணவகத்தில் நடைபெற்றது.

.தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் வெளியீட்டு விழாவில்  புதுச்சேரி அரசின் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார் மயிலம் திருமடத்தின் அதிபர் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற  ஆவணப்படத் தொடக்க விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி ஆல்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் வ. பாசிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கனடாவிலிருந்து வருகைபுரிந்த மருத்துவர் பால் ஜோசப், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். இந்த ஆவணப்படத்தில் பணிபுரிய உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.





கலைமாமணி கா. இராசமாணிக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவும், முனைவர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், புலவர். . ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், தூ. சடகோபன் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். இன்னிசைவேந்தன் கழுவினரின் அறுமுகனம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கு.அ. தமிழ்மொழி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.



No comments: