சீதக்காதி திரைவிமர்சனம்


விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை மிக பிரபலம், அதில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர். படம் எப்படி..? வாருங்கள் பாப்போம்.
கதை:
'அய்யா' ஆதிமூலம் (விஜய் சேதுபதி) சிறு வயதில் இருந்தே நாடகம் மீது ஆர்வம் கொண்டு அதிலேயே மொத்த வாழ்க்கையையும் செலவளிக்கிறார். ஒரே அரங்கில் தொடர்ந்து 50 வருடங்களாக தொடர்ந்து தினமும் நாடகம் போட்டு வரும் அளவுக்கு நாடகம் மீது வெறி கொண்டவர்.
மக்கள் முன்னிலையில் மட்டுமே நடிப்பேன் என கூறி, சினிமா வாய்ப்பு வந்தும் கடைசி வரை ஏற்றுக்கொள்ளாதவர். ஆனால் அவரும் சினிமாவிற்குள் வருகிறார். அது எப்படி என்பதுதான் படத்தில் உள்ள மிகப்பெரிய ட்விஸ்ட்.
நீங்களே படத்தில் பாருங்கள்.
படத்தை பற்றிய அலசல்:
முதல் அரை மணி நேரத்திற்கு மட்டுமே வந்தாலும் தன் நடிப்பு திறமையை முழுமையாக பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. அச்சு அசலாக 70 வயதுக்கு மேற்பட்டவர் போல தோற்றம், பாவங்கள் - அனைத்திலும் ஈர்க்கிறார். 10 நிமிடங்கள் சிங்கில் ஷாட்டில் அவுரங்கசிப் நாடகத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
ஒரு கற்பனையான மெட்டா சினிமா கதையை எடுத்து தைரியமாக படமாக்கிய இயக்குனருக்கு பாராட்டுகள்.
வில்லன் கேரக்டரில் நடித்துள்ள சுனில் (நடிகர் வைபவ்வின் அண்ணன்), ராஜ்குமார் ஆகியோர் ஷூட்டிங்கின்போது செய்யும் எக்ஸ்பிரஷன் காமெடி உங்களை நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற மற்றவர்களுக்கு சில நிமிடங்கள் வந்து செல்லும் அளவுக்கு சிறிய கேரக்டர்ரோல்தான்.
கிளாப்ஸ் & பல்ப்ஸ்:
விஜய் சேதுபதியின் நடிப்பு, பின்னனி ஸ்கோர், காமெடி - ப்ளஸ்.
ரன் டைம் தான் இந்த படத்தின் பெரிய மைனஸ். கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது படம். இன்னும் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் சீதக்காதி பார்த்து சிரிக்கலாம்.

No comments: