மு. பொ


Image may contain: one or more people, people sitting and indoor

.
1939 ம் ஆண்டு புங்குடுதீவில் பிறந்த மு . பொ என்று அழைக்கப்படும் முருகேசு பொன்னம்பலம் அவர்கள் சிறுவயதிலிருந்தே தனது தமையனார் மு. தளையசிங்கத்துடன் சேர்ந்து கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1950 களின் பிற்பகுதிகளில் சுதந்திரன் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் சிறுவர் பகுதிக்கு கட்டுரைகள், கதைகள் எழுத ஆரம்பித்த இவரது கைகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றன. ஈழத்து தமிழ் கலை இலக்கிய துறைக்கு புதுவடிவத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கிய இவரது படைப்புகள் அதன் வளர்ச்சியில் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவரது வாழ்வோடு இணைந்த ஆன்மீக நாட்டம் அவரது எழுத்திலும் பிரதிபலிக்க தவறியதில்லை.
இதுவரை இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை/ விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறுவர் ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் தனது 30 இற்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஆங்கில கவிதையும் உள்ளடங்கும். அவரது ஆக்கங்கள் அனைத்தும் ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்திருப்பதுடன் கலை இலக்கியத்துறையில் இனிவரவிருக்கும் மாற்றங்களை கோடிட்டு காட்டுபவையாகவும் அமையப்பெற்றிருப்பது அவற்றின் தனிச்சிறப்பாகும்.
இவரது பல நூல்கள் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளன.
• கடலும் கரையும் (சிறுகதை)
 வடகிழக்கு மாகாண விருது 1998
 சுதந்திர இலக்கிய விருது 1998
 கொழுப்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் விருது – 1998
• நோயில் இருத்தல் (நாவல்) – அரச சாகித்திய விருது – 2000
• முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை (சிறுகதை) - வடகிழக்கு மாகாணசபை விருது 2010
• திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம்)
 வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூலுக்கான விருது 2011
 தான்ஸ்ரீ விருது – மலேசியா அனைத்துலகப் புத்தகப் போட்டியில் முதற் பரிசு 2012
• கவிதையில் துடிக்கும் காலம் (கவிதை)
 அரச சாகித்திய விருது – 2012
 சிறந்த நூலிற்கான தமிழியல் விருது – 2012
• ஒயாத கிளர்ச்சி அலைகள் (மொழிபெயர்ப்பு) - அரச சாகித்திய விருது – 2015
இது தவிர இவரது இலக்கியசேவையை பாராட்டி பல கெளரவ விருதுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.




Image may contain: one or more people, people sitting and indoor

• American Library of Congress (New Delhi office) மூலம் கிடைத்த தெற்காசிய இலக்கிய பதிவாக்கம் செயற்திட்டத்தில் (South Asian Literary Recording Project) பங்குபற்றிய ஒரே ஒரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் – 2001
• வடக்கு /கிழக்கு ஆளுனர் விருது – 2003
• தமிழியல் விருது – 2010
• காலம் 36 வது மு.பொ சிறப்பிதழ் – 2010
• தகவம் கெளரவிப்பு – 2010
• SAARC Literary Festival – 2011
• தெஹிவளை பிரதேச செயலகம் வழங்கிய ஸ்ரீ விபுதி விருது - 2016
• பேராதனை பலகலைக்கழக தமிழ்ச்சங்க கெளரவிப்பு – 2016
இதைத் தவிர இலங்கை தமிழ் இலக்கியதுறைக்கு ஆற்றிய உன்னத சேவைக்காக வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் தேசத்தின் உயர் கெளரவ அரச விருதான ‘சாகித்தியரத்னா’ விருதிற்காக இவ்வாண்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வளவு விருதுகளையும் கெளரவிப்புகளையும் பெற்றாலும் எவ்வித தற்பெருமையும் கொள்ளாமல் எப்போதும் எளிமையாக வாழ்ந்து வரும் மு. பொ வை எண்ணி ஒரு வாசகனாக, அவரது மகனாக பெருமை அடைகின்றேன்.

மு பொ வுக்கு  சாகித்திய ரத்னா விருது கிடைத்தபோது  அவர் குடும்பத்தோடு 
Image may contain: 5 people, people smiling

nantri FB

No comments: