.
தனுஷ் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) ரிலீஸாக இருக்கும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், “முதன்முதல்ல ‘மாரி’ பண்ணும்போது மிகப்பெரிய சேலஞ்சிங்கா இருந்தது. நான் எந்தப் படத்துக்குமே அவ்வளவு ஹோம் ஒர்க் பண்ணது இல்ல. ‘உங்ககூட ரெண்டு பேர். ரெண்டு பேரையும் அடிச்சிக்கிட்டே இருப்பீங்க. அதுல ஒருத்தர் ரோபோ சங்கர்’னு பாலாஜி மோகன் சொன்னார்.
‘நான் அடிச்சா வாங்குற மாதிரி சைஸ்ல ஒரு ஆள் பாருங்க’னு சொன்னேன். பாலாஜிதான் ரோபோ சங்கர் வேணும்னு விடாப்பிடியாக நின்னார். இவ்வளவு பெரிய உருவத்தை அடிச்சா ஆடியன்ஸுக்கு கன்வின்ஸிங்கா இருக்க வேண்டும் என்பதற்காக, தனியா அதுக்கு ஹோம் ஒர்க் பண்ணேன்.‘அவர் சைஸ் என்ன, என் சைஸ் என்ன... நான் எப்படிங்க அவரை அடிச்சிக்கிட்டே இருக்குறது? திரையில் பார்க்கும்போது அதை ஜனங்க நம்பணும்ல...’னு சொல்லி, ரோபோ சங்கம் வேணாம்னு ஒத்தக்கால்ல நின்னேன். இதுதான் உண்மை.
இப்படி ‘மாரி’யைப் பொறுத்தவரைக்கும் நிறைய சேலஞ்ச் இருந்தது. அந்த கேரக்டர் என்ன பண்ணாலும், அது விதண்டாவாதமாகவே இருக்கும். ஆனாலும், ரசிகர்களுக்குப் பிடிக்கணும். ஆனால், ‘மாரி 2’வில் அப்படி கிடையாது. ஏற்கெனவே ஒரு கேரக்டரை ரெடி பண்ணி வச்சாச்சு, அதுல போய் சரியா உக்காந்துட்டா போதும்.
‘மாரி 2’வைப் பொறுத்தவரைக்கும் என்ன சவால் என்றால், எனக்கு என்ன எமோஷனல் என்றாலும், நான் அழவே மாட்டேன். ஆனால், அந்தப் பக்கம் சாய் பல்லவி ஃப்ரீயா அழுதுகிட்டே இருப்பாங்க. நான் எமோஷனையும் காட்டணும், அழாமல் ஸ்ட்ராங்காகவும் இருக்கணும். இந்த மாதிரி செக் வச்சது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு.
‘மாரி’ பார்த்த எல்லாருக்கும் ‘மாரி 2’வில் என்ன எதிர்பார்க்கலாம்னு தெரியும். நீங்க எதிர்பார்த்ததைத் தாண்டி கொஞ்சம் விஷயங்கள் இருக்கும்னு ஸ்ட்ராங்கா நம்புறேன்” என்றார்.
No comments:
Post a Comment