25 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானை புரட்டி போட்ட “ஜெபி”
கேரளாவில் மீண்டும் சோகம்; எலி காய்ச்சலுக்கு 74 பேர் பலி
இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை இடமறித்து அழித்தது சிரியா
ஜப்பானில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மீட்பு பணிகள் தீவிரம்
ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம்- வெளியானது அதிரடி தீர்ப்பு
டிரம்பை கடுமையாக சாடி ஒபாமா உரை
25 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானை புரட்டி போட்ட “ஜெபி”
04/09/2018 ஜப்பானின் மேற்கு பிராந்தியத்தை தாக்கிய ஜெபி சூறாவளியால் ஜப்பானின் பல பிராந்தியங்கள் பாதிப்படைந்துள்ளன.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பானை தாக்கிய ஜெபி சூறாவளியால் 600ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
05/09/2018 இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளதோடு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும். அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15 ஆம் திகதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது.
இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர்.
நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது நோய் தொற்று பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நன்றி வீரகேசரி
05/09/2018 சிரியா நாட்டிலுள்ள ஈரான் இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய படையினர் நடத்திய வான் வழி ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் பதில் தாக்குதல் நடத்தி இடமறித்து அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிரியாவின் டார்டோஸ் மற்றும் ஹாமா பகுதிகிலுள்ள ஈரான் நாட்டுக்கு சொந்தமான இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்தது.
இதையடுத்து சிரிய இராணுவம் ஐந்து ஏவுகணைகளை நடுவானிலேயே எதிர் தாக்குதலை நடத்தி இடமறித்து அழித்துள்ளது. எனினும் ஹாமா பகுதியல் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே இரண்டு ஏவுகணைகள் வெடித்துள்ளது.
இந்த தாக்குதலினால் மூன்று இராணுவ வீரர்கள் பலியானதாகவும், மேலும், ஈரானை சேர்ந்த 9 வீரர்களும் சிரியாவை சேர்ந்த 14 இராணுவ வீரர்கள் என மொத்தம் 23 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என இஸ்ரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான சிரிய கண்காணிப்புக் கருத்தின்படி, லெபனிய வான்வெளி வழியாக இஸ்ரேலிய படையினர் நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
ஜப்பானில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மீட்பு பணிகள் தீவிரம்
06/09/2018 ஜப்பான் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 32 பேர் காணாமல் போயுள்ளனர்.
6.7 ரிக்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹொக்கைடோவில் மீட்பு பணிகளில் 25000 பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஹொக்கைடோவின் பிரதான விமான நிலையமும் சிட்டோஸ் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம்- வெளியானது அதிரடி தீர்ப்பு
06/09/2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ஏழு பேரையும் தமிழக அரசே விடுதலை செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஏழு தமிழர்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றே இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் எழு பேரையும் விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என நீதிபதி ரஞ்சன் கோகேய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம் இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. நன்றி வீரகேசரி
டிரம்பை கடுமையாக சாடி ஒபாமா உரை
08/09/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிரம்பின் அரசாங்கத்தின் காணப்படும் அச்சம் மற்றும் வெறுப்பு கலாச்சாரத்தை கடுமையாக சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் முதல்தடவையாக நீண்டஉரையொன்றை ஆற்றியுள்ள பராக் ஒபாமா அமெரிக்க வாக்காளர்களை அமெரிக்காவில் சிறந்த ஜனநாயகமொன்றை கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
டிரம்பும் குடியரசுக்கட்சியினரும் வோசிங்டனில் பயன்படுத்துகின்ற தந்திரோபாயங்கள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சத்தை தூண்டுவது,ஒரு பிரிவை மற்றொரு பிரிவினருக்கு எதிராக தூண்டிவிடுவது,எங்களை போல இல்லாதவர்களால் பாதுகாப்பிற்கு ஆபத்து என பிரச்சாரம் செய்வது, போன்ற கலாச்சாரம் காணப்படுவதாக தெரிவித்துள்ள டிரம்ப் இது டிரம்புடன் ஆரம்பமாகவில்லை அவர் நோய்க்கான ஒரு அறிகுறி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் பல வருடங்களாக தூண்டிவந்த வெறுப்பினை டிரம்ப் பயன்படுத்துகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் ஜனநாயகத்தில் வெற்றிடம் நிலவும்போது நாங்கள் வாக்களிக்காத போது எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரத்தை அலட்சியம் செய்யும்போது அச்சம் மற்றும் வெறுப்புணர்வு அரசியல் வேர்கொள்கின்றது எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment