பசிதீரா அலைகள் - பிச்சினிக்காடு இளங்கோ


அவை எப்போதும்
அழகாகவே
அலைகளோடு

நிலாவும்  நட்சத்திரங்களும்
அன்றாடம்
விழுந்து எழுகின்றன

அனைத்தையும்
அள்ளிக்கொள்ளும்
ஆகாயமாய்  இருக்கிறது

எல்லைகள் கடந்தும்
எல்லைக்குள்ளும்
அலைகளின் பயணம்
நித்தம்.


தூண்டியும்
துள்ளியும் போடும் கோலத்தில்
புள்ளிகள் வைப்பதில்
தனிக்கவனம் இல்லாமலில்லை
தவிர்க்கவும் இயலவில்லை

காலம்
எழுதும் கவிதையில்
பாடுபொருளாய்
காலந்தோறும்
கவிதையாய்
இருப்பது
இயல்பாகிவிடுகிறது
-->









No comments: