.
யாழ் இந்து மகளிர் பழைய மாணவிகளின் வருடாந்த மலரும் மாலை நிகழ்வு கடந்த வாரம் 1/9/2018 அன்று Silverwater Bahai
Centre இல் மாலை 6 மணிக்கு இடம் பெற்றது. நானும் எனது கணவரும் மாலை 5.30 மணியளவில் மண்டபத்திற்கு சென்றோம். அங்கு மாடியில் நுழை வாயிலில் எமது தமிழ் கலாச்சாரத்தின் படி கோலம் போட்டு நிறைகுடம் குத்து விளக்கு என்பன வைக்கப்பட்டு பழைய மாணவிகள் சங்க செயற்குழு அனைவரும் பாடசாலையின் நிறத்திற்கேற்றார் போல் பச்சை வர்ண புடவை அணிந்து வெள்ளை மலர் மாலைகளை தலையில் சூடி, புண் முறுவலுடன் அனைவரையும் வரவேற்ற வண்ணம் இருந்தார்கள். அவர்களின் கணவர்மார்களும் தங்களுக்கு அளிக்கப்பட வேலைகளை செவ்வன செய்து தமது உதவிக்கரத்தை பல வழிகளில் புரிந்து கொண்டு இருந்தார்கள்.
மண்டபத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து அமர ஆரம்பித்து விட்டார்கள். அறிவித்தலில் இருந்தவாறு சரியாக 6 மணிக்கு இரு இளம் யுவதிகள் மேடையில் காட்சி அளித்து தங்களை அறிமுகம் செய்து அனைவரையும் வரவேற்றார்கள். இது யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களின் சிட்னி கிளையின் 25 ஆவது வருட சிறப்பு நிகழ்ச்சி என அறிவித்து அவர்களின் தற்போதைய போஷகரும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்று பின் அங்கு ஆசிரியையாக இருந்தவருமான திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் மற்றும் திரு ஜெகநாதன் இருவரையும் மங்கள விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்குமாறு அழைத்தனர்.
தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை ஷிவாஞ்சலி
ரட்ணசீலன் மற்றும் துவாஹினி ரட்ணசீலன் இருவரும் மிகவும் இனிமையாக
பாடினார்கள். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய தேசிய கீதத்தை அபிநயினி குகசிறி மற்றும் ஷாலினி
முருகானந்தம் பாடினார்கள் அதனை தொடர்ந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் பாடசாலை கீதத்தை பாடினார்கள். இவர்களுக்கு பின்னணி இசையை திரைக்குப் பின்னால் இருந்து ரத்னம் ரத்னதுரை
குழுவினர் வழங்கி இருந்தது வழக்கத்திற்கு மாறாக நன்றாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாக
இருந்தது. தொடர்ந்து தாயகத்தில் உயிர் நீத்த மக்களுக்காக ஒரு நிமிட அஞ்சலியும் அவதானிக்கப்
பட்டது. தொடர்ந்து சங்கத்தின் தலைவி திருமதி கௌரி முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை
வழங்கினார். அதில் அவர் இதுவரை காலமும் தமது பழைய மாணவர் சங்கத்திற்கு உறுதுணையாக இருந்த
அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றிகளைத் தெரிவித்திருந்தது சிறப்பாக
இருந்தது. மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளைத்
தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க
திரு மகேஸ்வரன் பிரபாகரனை அறிமுகம் செய்து இன்னிசை நிகழ்ச்சி ஆரம்பமானது. மகேஸ்வரன்
பிரபாகரன் ஒரு பிரபலமான வானொலி மற்றும் மேடைகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில்
மிகவும் தேர்ச்சி பெற்றவர். உள்ளூர் கலைஞர்களான பபிதா, காவ்யா
ஜெய்ஷ்ங்கர், அபிநயினி, கிரி, கோபி ஐயர் ஆகியோர் காற்றில் வரும் கீதமே எனும் பாடலுடன்
இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. இவர்கள் உளூரில் மிகவும் பிரபலமான இசை கலைஞர்கள். தொடர்ந்து
பபிதா கண்ணை காட்டு போதும் எனும் பாடலை மிகவும் இனிமையாக தனது வசீகரக் குரலால் பாடினார்.
இவரை பிரபா டாக்டர் பபிதா என முதல் தடவையாக மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். சிறிது
கால இடைவேளையின் பின் மேடைகளில் இவர் தோன்றினாலும் தனது குரல் வளத்தால் எல்லோரையும்
கட்டிப் போட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து கிரி நிலவே என்னிடம் நெருங்காதே
என்னும் காலத்தால் அழியாத பாடலை பாடினார். மிகவும் இனிமையான குரல் வளம் பெற்ற பாடகர்.
மிகவும் எளிமையாக வந்து பாடிவிட்டு சென்று விடுவார்.
தொடர்ந்து இலங்கையில் இருந்து வந்திருந்த பாடகி செல்வி ஸ்ரீ வத்சலா ராமநாதன் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்னும் பாடலை பாடினார். இந்தப் பாடல் அவரின் மென்மையான குரலில் ஏனோ அவ்வளவாக எடுபடவில்லை என்று நான் எண்ணியிருந்த வேளையில் பாடல் முடிந்தவுடன் அறிவிப்பாளர் அவரிடம் அவரின் குரலுக்கு என்ன நடந்தது என்னும் கேள்வியை கேட்டபோது தான் நான் உணர்ந்தேன் சிட்னியின் கால நிலையால் அவரின் குரல் பாதிப்படைந்திருந்தது என்று. குரல் பாதிக்கப் பட்டிருந்தாலும் மிகவும் இனிமையாக தன்னால் முடிந்தவரை சமாளித்து பாடல்களை பாடியிருந்தார். மிகவும் இனிமையான குரல் வளம் கொண்ட இந்த பாடகி மென்மேலும் பல நிகழ்ச்சிகளிலும் மற்றும் திரைப்படங்களிலும் பாட வேண்டும் என்பது பலரின் ஆசையும் கூட.
தொடர்ந்து அடுத்த பாடலைப் பாடுவதற்கு இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ஜார்ஜ் ஸ்டான்லி அழைக்கப்பட்டார். இவரை அறிமுகம் செய்கையில் இவரின் தோற்றத்தை பார்த்தால் ஒரு நடிகர் போல் இருக்கின்றார் என்று அறிவிப்பாளர் கூறி அவர் கர்நாடக சங்கீதத்தை தேர்ச்சியாக பயின்றவர் என்றும் சினிமாவில் பாடல்களை பாடி இருக்கின்றார் எனவும் கூறினார். இவர் மறுவார்த்தை பேசாமலே என்னும் சித் ஸ்ரீராமின் பாடலை மிகவும் அழகாக பாடினார். அவ்வளவு வசீகரமான குரல் வளம் கொண்டவர் இவர். இவர் தொடர்ந்து பாடிய ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, விழியே கதை எழுது, முத்துக் குளிக்க வாறீர்களா போன்ற பாடல்களை பாடிய போது அப்படியே TMS பாடினால் போல் இருந்தது. மென்மேலும் அவர் பல மேடைகளிலும் திரைப்படங்களிலும் பாட வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
தொடர்ந்து கலாநிதி ராஜலிங்கம் ராஜயோகன் அவர்கள் நிலவு ஒரு பெண்ணாகி என்னும் MGR இன் பாடலை பாடி அசத்தியிருந்தார். இவரை சிட்னியில் தெரியாதவர்கள் இல்லை. இவர் பல மேடைகளில் பல திறமையான பாடகர்களை கொண்ட karioke இசையை பல நிகழ்ச்சிகளுக்காக படைத்து வருபவர். சிட்னி மட்டும் அல்லாது மற்றைய மாநிலங்களிலும் பல karioke இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். பொதுவாக பாடல்களை மிகவும் சுவாரசியமாக பாடலுக்கு ஏற்ற உடையணிந்து வரும் இவர் இன்று MGR போல் வேஷம் போடாது வந்ததை இட்டு "என்ன லாண்டரியில் உங்கள் உடைகளை போட்டுவிட்டிர்களா " என்று பிரபா கேட்ட போது, தான் சற்று அடக்கி வாசிப்பதாக கூறினார். உங்களின் அந்த பாடலுக்கான வேஷங்கள் தான் எம்மை மிகவும் கவர்ந்தவை. இனி வரும் காலங்களில் அதனை தொடர வேண்டும் என்பது எனது விருப்பம்.
தொடர்ந்து ஈழத்தமிழர் ஒருவருக்கு இந்திய சினிமாவில் பாட டி இமானினால் வாய்ப்பு கிடைத்து, பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டு விஜய் சினி அவார்ட்ஸில் விருதும் பெற்ற செந்தூரா
புகழ் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தை அறிமுகப் படுத்தினார் அறிவிப்பாளர். அவர் கனடாவில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை என்றும். இசையில் பட்டப்படிப்பை பெற்றவர் என்றும் அறிமுகம் செய்து தான் "நீங்கள் ஒரு பள்ளி மாணவி" என நினைத்தது தவறு என்றும் கூறினார் பிரபா. கொஞ்சும் நிலவு என்னும் பாடலை மிகவும்
திறமையாக பாடினார் லக்ஷ்மி. கண்ணாளனே பம்பாய் திரைப் படத்தில் இருந்து பாடலையும் மிகவும் இனிமையான தனது
குரலால் பாடினார். மிகவும் மென்மையான காதல் பாடல்களையும் கொஞ்சும் நிலவு மற்றும் செந்தூரா போன்ற துள்ளிசை
பாடல்களையும் குரலை பாடலுக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பாடக் கூடிய வல்லமை படைத்த ஒரு பாடகி. இவர் தமிழிலும் மிகவும் திறமையாக மிகவும் ஸ்வாரசிகமாகவும் இனிமையாகவும் அறிவிப்பாளர் பிரபாவுடன் உரையாடி பலரதும்
கர கோஷத்தை பெற்றார். இவரை அவர் தற்போது பாடி வரும் பாடல்களில் ஒரு சில வரிகளை பாடுமாறு கேட்ட போது
மற்றும் எந்த இசை அமைப்பாளர்களுக்கு பாடல்களை எந்த படத்திற்கு பாடி வருகிறார் அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் போன்ற விபரங்களை கேட்ட போது, தான் அந்த விபரங்களை கூறி தனது வளர்ச்சிக்கு தானே ஆப்பு வைக்க விரும்பவில்லை என்று சுவாரசிகமாக கூறினார்.
25 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இத்தனை ஆண்டுகள் போஷகர்களாக தங்களது யாழ் இந்து மகளிர்
கல்லூரி பழைய மாணவிகள் சிட்னி கிளைக்கு அறிவுரைகளை வழங்கிய அத்தனை போஷகர்களுக்கும் அவர்களின்
சேவைகளை பாராட்டி சங்கத்தின் தலைவி கேடையங்களை வழங்கி கௌரவித்தார். இத்தனை வருடங்களாக சங்கத்தின் தலைவிகளாக இருந்த அனைத்து தலைவிகள் சேவைகளையும் பாராட்டி கேடையங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்டான்லியுடன் இணைந்து ஸ்ரீ வத்சலா உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே என்னும் பாடலையும்,
லக்ஷ்மி டிக் டிக் டிக் எனும் திரைப் படத்தில் இருந்து குறும்பா பாடலை தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி பாடி அசத்தினார்.
கோபி ஐயர் வத்சலா இணைந்து ஆத்தங்கரை மரமே என்னும் பாடலை மிகவும் அழகாக தன் வசீகரக் குரலால் பாடி
அசத்தினார். ஆமாம் கோபி ஐயர் அறிவிப்பாளர் கூறியது போல் ஒரு திறமையான இளமையான பாடகர். மிகவும் ஆழமான குரல் வளம் கொண்ட இளைஞன்.
இடைவேளையின் பின் காவ்யா சுசீலா வின் பாடல்களின் தொகுப்பு ஒன்றை ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து medley கோர்வை ஒன்றை மிகவும் அழகாக கதை கூறி பாடினார். காவ்யா மிகவும் ஒரு திறமை வாய்ந்த பாடகி. மிகவும் உச்சஸ்தாயிலும் பாடக்கூடிய ஒரு பாடகி.
தொடர்ந்து கிரியுடன் ஸ்ரீ வத்சலா இணைந்து வளை ஓசை கலகல என்னும் காலத்தால் அழியாத இளையராஜாவின் இசையில் உருவான பாடலை பாடி அசத்தினார். அண்மையில் நிகழ்ந்த இளையராஜாவின் நிகழ்ச்சியில் கூட இந்த பாடல் பாடப் பட
வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கிரி மிகவும் அழகாக ஒரிஜினல் ட்ராக்கில் பாடிய மாதிரி பாடி அசத்தி இருந்தார்.
ஸ்ரீ வத்சலாவும் தன் கட்டுப்படுத்தப்பட்ட குரலுடன் நன்றாகவே பாடி இருந்தார்.
புகழ் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தை அறிமுகப் படுத்தினார் அறிவிப்பாளர். அவர் கனடாவில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை என்றும். இசையில் பட்டப்படிப்பை பெற்றவர் என்றும் அறிமுகம் செய்து தான் "நீங்கள் ஒரு பள்ளி மாணவி" என நினைத்தது தவறு என்றும் கூறினார் பிரபா. கொஞ்சும் நிலவு என்னும் பாடலை மிகவும்
திறமையாக பாடினார் லக்ஷ்மி. கண்ணாளனே பம்பாய் திரைப் படத்தில் இருந்து பாடலையும் மிகவும் இனிமையான தனது
குரலால் பாடினார். மிகவும் மென்மையான காதல் பாடல்களையும் கொஞ்சும் நிலவு மற்றும் செந்தூரா போன்ற துள்ளிசை
பாடல்களையும் குரலை பாடலுக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பாடக் கூடிய வல்லமை படைத்த ஒரு பாடகி. இவர் தமிழிலும் மிகவும் திறமையாக மிகவும் ஸ்வாரசிகமாகவும் இனிமையாகவும் அறிவிப்பாளர் பிரபாவுடன் உரையாடி பலரதும்
கர கோஷத்தை பெற்றார். இவரை அவர் தற்போது பாடி வரும் பாடல்களில் ஒரு சில வரிகளை பாடுமாறு கேட்ட போது
மற்றும் எந்த இசை அமைப்பாளர்களுக்கு பாடல்களை எந்த படத்திற்கு பாடி வருகிறார் அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் போன்ற விபரங்களை கேட்ட போது, தான் அந்த விபரங்களை கூறி தனது வளர்ச்சிக்கு தானே ஆப்பு வைக்க விரும்பவில்லை என்று சுவாரசிகமாக கூறினார்.
25 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இத்தனை ஆண்டுகள் போஷகர்களாக தங்களது யாழ் இந்து மகளிர்
கல்லூரி பழைய மாணவிகள் சிட்னி கிளைக்கு அறிவுரைகளை வழங்கிய அத்தனை போஷகர்களுக்கும் அவர்களின்
சேவைகளை பாராட்டி சங்கத்தின் தலைவி கேடையங்களை வழங்கி கௌரவித்தார். இத்தனை வருடங்களாக சங்கத்தின் தலைவிகளாக இருந்த அனைத்து தலைவிகள் சேவைகளையும் பாராட்டி கேடையங்கள் வழங்கப்பட்டது.
லக்ஷ்மி டிக் டிக் டிக் எனும் திரைப் படத்தில் இருந்து குறும்பா பாடலை தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி பாடி அசத்தினார்.
கோபி ஐயர் வத்சலா இணைந்து ஆத்தங்கரை மரமே என்னும் பாடலை மிகவும் அழகாக தன் வசீகரக் குரலால் பாடி
அசத்தினார். ஆமாம் கோபி ஐயர் அறிவிப்பாளர் கூறியது போல் ஒரு திறமையான இளமையான பாடகர். மிகவும் ஆழமான குரல் வளம் கொண்ட இளைஞன்.
30 நிமிட நேர இடைவேளையின் போது சைவ கொத்துரொட்டி மற்றும் சைவ சிற்றுண்டி பொதியும் தேநீர், coke, போன்றன விற்கப்பட்டன.
தொடர்ந்து கிரியுடன் ஸ்ரீ வத்சலா இணைந்து வளை ஓசை கலகல என்னும் காலத்தால் அழியாத இளையராஜாவின் இசையில் உருவான பாடலை பாடி அசத்தினார். அண்மையில் நிகழ்ந்த இளையராஜாவின் நிகழ்ச்சியில் கூட இந்த பாடல் பாடப் பட
வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கிரி மிகவும் அழகாக ஒரிஜினல் ட்ராக்கில் பாடிய மாதிரி பாடி அசத்தி இருந்தார்.
ஸ்ரீ வத்சலாவும் தன் கட்டுப்படுத்தப்பட்ட குரலுடன் நன்றாகவே பாடி இருந்தார்.
அடுத்து நன்றி உரையை திருமதி ஷாந்தி உதயன் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த
அனைவரின் பெயர்களை கூறி ஒருவரையும் விடாது சங்கத்தின் சார்பில் நன்றியினை கூறி இருந்தார். இசைக்குழுவினரை
இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளுக்கு உதவிய தங்களது சகோதர பாடசாலையாக யாழ் இந்தக்
கல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் மற்றும் பிரதான அணுசரணையாளர்கள், ஒளி ஒலி வழங்கியவர்கள், உணவுகளை வழங்கியவர்கள், ஆண்டு மலருக்கு உதவியவர்கள் என்று ஒருவர் விடாது தமது நன்றிகளை கூறி இருந்தார்.
தொடர்ந்து இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ரிதம் ஸ்டார் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் இந்தக் குழுவின் தலைவன் திரு ரத்னம் ரத்னதுரையின் மகனாகிய அபினவ் ரத்னத்துறை ஜதி கோர்வையை சொல்ல அதற்கேட்ப இசைக் கலைஞர்கள் இசைக்க கருவிகளைக் கொண்டு இசை மழை ஒன்றை பொழிந்தனர். ரத்னம் ரத்னதுரை அவர்கள் தபேலா, மோர் சிங்க். கஞ்சீரா ஒக்டோபட போன்ற இசைக் கருவிகளையும் மிகவும் திறமையாக வாசித்திருந்தார். புல்லாங்குழல், கிட்டார், கீபோர்ட், டிரம்ஸ், தபேலா போன்ற இசைக் கருவிகளின் சங்கமம் இடம் பெற்றது. அபினவ் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற வகையில் ஒரு குறுகிய மிருதங்க வாத்திய கச்சேரியையும் அளித்தார். ரத்னம் ரத்னதுரை பல விருதுகளை பெற்ற ஒரு மூத்த கலைஞன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. செந்தூரன் கீபோர்டு , ஆனந்தராஜா டிரம்ஸ், மோகன் ரூபன் பேஸ் கிட்டார், அமல்ராஜ் லீட் கிட்டார், நிரஞ்சன் கீபோர்டு மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை மிகவும் திறமையாக வாசித்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர். இந்த இசை குழு மென்மேலும் வளர்ந்து எல்லா நாடுகளுக்கும் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக வழங்க வேண்டும் என்பது எல்லோர் விருப்பமும் கூட.
நிகழ்ச்சியின் பிரதான அணுசரணையாளர்களாகிய டாக்டர் சங்கீதா மனோகரன் மற்றும் திரு வேலுப்பிள்ளை அவர்கள் எல்லோருக்கும் கேடயங்களை வழங்கி
கௌரவித்தார்கள். நன்றியுரையில் மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர்களுக்கு தவறுதலாக
நன்றி கூற மறந்து விட்டார்களே என என் மனம் அங்கலாய்த்துக்கொண்டிருந்த போது அதை நிவர்த்தி செய்யும் முகமாக
துவாஹினி ரட்ணசீலன் , சரண்யா மோகன் மற்றும் மகேஸ்வரன் பிரபாகரன் அவர்களுக்கும் கேடயங்களை கொடுத்து
கௌரவப்படுத்தினார்கள். அத்துடன் உள்ளூர் மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த பாடகர்
பாடகிகளையும் கௌரவித்திருந்தார்கள்.
தொடர்ந்து இன்னிசை மழை பொழிய ஆரம்பித்தது. முறைதானா முகுந்தா, யாரோ யாரோடி உன்னோட புருஷன், போன உசுரு வந்திருச்சு பாடல்களை லட்சுமியுடன் இணைந்து பபிதா, ஸ்ரீ வத்சலா மற்றும் கிரி வழங்கியிருந்தனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் என் மனம் கவர்ந்த பாடல் போன உசுரு வந்திருச்சு, கிரியும் லக்ஷ்மியும் மிகவும் திறமையாக இந்த பாடலை பாடி இருந்தார்கள். தொடர்ந்து பபிதா, காவ்யா, கிரி மூவரும் இணைந்து வந்தேன் வந்தேன் என்னும் பாடலை இரு பெண்களின் நடுவே ஒரு ஆண் எப்படி தத்தளிக்கின்றார் என்பதை விவரித்து அசைவுகளுடன் மிகவும் நன்றாக பாடி இருந்தது அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலை மேலும் மெருகூட்டியது ஒளி அமைப்பு. ஆமாம் அருமையின் மகன் ராஜாவின் ஒளியமைப்பு பாடலின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப வர்ண ஒளிவிளக்குகளினால் ஒரு வர்ண ஜாலத்தையே மேடையில் காட்டினார்.
30 மில்லியனையும் தாண்டி youtube இல் இன்னும் பார்வையாளர்கள் பார்த்தும் கேட்டும் கொண்டிருக்கும் அந்த ஹிட் பாடலை பாடுவதற்காக லக்ஷிமியை அழைத்த பிரபா அவருக்கு பிடித்த பாடகி அல்லது பாடகர் யார் என்று கேட்ட போது, ஸ்ரேயா கோஷல் தான் தன் மனம் கவர்ந்த பாடகி என்று கூறி அவர் பாடிய ஒரு ஹிந்தி பாடலின் ஒரு சில வரிகளை பாடினார். பின்பு செந்தூரா பாடலை மிகவும் அழகாக பாடி முடித்தார்.
கோபி ஐயர் செந்தமிழ் தேன் மொழியால் என்னும் காலத்தால் அழியாத பாடலை மிகவும் சிறப்பாக பாடினார். தொடர்ந்து ஸ்ரீ வத்சலா முதல் முறை பார்த்த ஞாபகம் என்னும் பாடலை பாடினார். அவரின் குரல் வளம் குளிரினால் பாதிக்கப் பட்டிருந்ததனால் இந்தப் பாடலை அவரால் சரிவர பாட முடியவில்லை. இருந்தாலும் தன்னால் இயலுமானவரை முயன்று பாடலை பாடி, சரிவர பாடமுடியாமைக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். லக்ஷ்மியும் கோபி ஐயரும் இணைந்து ஒட்டகத்தை கட்டிக்கோ மற்றும் ஸ்டாண்லியுடன் இணைந்து வாடா வாடா பொய்யா என்னும் பாடல்களை சும்மா பிய்த்து மேய்ந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தொடர்ந்து ஒரு துள்ளிசை பாடல் கோர்வை ஒன்றை கிரி, கோபி, ஸ்டான்லி, ஸ்ரீ வத்சலா, லட்சுமி இணைந்து வழங்கியிருந்தார்கள். இந்த பாடல் கோர்வை சற்று நீண்டு விட்டதென்பது எனது கருத்து. ஒரு சில பாடல்களை குறைத்து ஏன் முடிந்து விட்டது என்று நினைக்கும் அளவிற்கு இருந்திருந்தால் என்னும் நன்றாக இருந்திருக்கும்.
நிகழ்ச்சி முடியும் பொது நேரம் சரியாக 11.15. மண்டபம் நிறைந்த கூட்டம் அதுவரை காணப்
பட்டது இந்த நிகழ்ச்சி எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு ஓர் அறிகுறி.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு மேலும் உறுதுணையாக இருந்த ஒளி ஒலி அமைப்பை
பாராட்டியே ஆக வேண்டும்.
Alnoor இல்லை என்றால் இன்று ஒலி வாங்கிகள் கோளாறு செய்ய போகின்றன என்று சிலர்
நினைத்த காலம் உண்டு. ஆனால் தான் அல்னூருக்கு சற்றும் சளைத்தவன் இல்லை என்பதை
திரு பத்மசிறி மகாதேவா அவர்கள் அன்று தனது திறமையை காண்பித்திருந்தார். 25 ஆகஸ்ட் 2018 இல் C3 சர்ச் மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சியிலும் பல
தடங்களுக்கிடையில் துல்லியமான ஒலி அமைப்பை வழங்கியதையும் இங்கு குறிப்பிடுவது
நன்றாக இருக்கும் என எண்ணுகின்றேன். உங்களுக்கும் உங்கள் குழுவை சார்ந்த அருண் மற்றும் கீர்த்தனாவுக்கும்
வாழ்த்துக்கள்.

அதே போல் ஒளி அமைப்பை வழங்கிய அருமையின் புதல்வர்கள் ராஜா மற்றும் ஸ்ரீராஜ் இருவருக்கும் வாழ்த்துக்கள். பாடல்களின் அசைவுகளுக்கு ஏற்ப மின் விளக்குகளின் ஜாலத்தை மேடையில் தெறிக்க விட்டிருந்தார்கள்.
நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய துவாகினி ரட்ணசீலன் மற்றும் சரண்யா மோகன் இருவரும் மிகவும் நேர்த்தியாக தம் கடமையை செய்திருந்தார்கள். இங்கு பிறந்து வளர்ந்த துவாகினியின் தமிழும் அவரின் தமிழ் உச்சரிப்பும் என்னை வியக்க வைத்தது. பாராட்டுக்கள். அடுத்து நிகழ்ச்சியை மிகவும் பிரமாதமாக தொகுத்து வழங்கிய திரு மகேஸ்வரன் பிரபாகரனை பாராட்டாமல் இருக்க முடியாது. நிகழ்ச்சி மிகவும் சுவாரசிகமாக எந்தவித தொய்வுமில்லாமல் நிகழ்ந்ததற்கு இவர் அளவான நகைச்சுவை கலந்த உணர்வுடன் தொகுத்து வழங்கியமையே காரணம். உங்கள் சேவை மென்மேலும் தொடர
வாழ்த்துக்கள்.
மேடையில் புகை அடித்ததை சற்று குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது மட்டும் இல்லை பலரின் குறிப்பும் கூட. நிகழ்ச்சியின் இறுதியில் வெளியில் குளிராக இருந்த போதிலும் மண்டபத்தினுள் சற்று சூடாக மூச்சு முட்டுவது
போல் இருந்தமை அவதானிக்க கூடியதாக பலருக்கு இருந்தது. இடை வேளை முடிந்து மண்டபத்திற்கு திருப்பும் போது
நம்மவர் சாப்பிட்ட உணவுப் பொதிகளின் மீதியை அப்படியே ஆங்காங்கே விட்டு விட்டு மற்றவர்கள் துப்பரவு செய்யட்டும் என்று எண்ணி விட்டுச்சென்றதை பார்த்த போது சற்று மனம் அவதியுற்றது.
பாடல் தெரிவு பிரமாதமாக இருந்தது... புதிய, பழைய மேடைக்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்தமை பாராட்டுதற்குரியது.
நல்லதொரு நிகழ்ச்சியை ஒருங்கமைத்து வழங்கிய யாழ் இந்து மகளிர் பழைய மாணவிகள் சங்கத்தினரை வாழ்த்தி மீண்டும் அடுத்த ஆண்டு இதை விட சிறப்பான இன்னுமொரு நிகழ்வை நடத்துவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிகழ்ச்சியைப் பற்றி என் பார்வையில் ஏதாவது தவறு இருந்தால் அல்லது யாருடைய மனதையும் தவறுதலாக புண்படுத்தி இருந்தால் சிரம் தாழ்ந்த எனது மன்னிப்புக்களை கேட்டுக் கொள்கின்றேன்.
மதுரா மஹாதேவ்.

1 comment:
நேர்த்தியான ஒரு நிகழ்ச்சி , நேர்த்தியான ஒரு பதிவு
சிட்னியில் கடந்த 2-3 வருடங்களில் நான் பார்த்து ரசித்த ஒரு மிக மகிழ்வான நிகழ்ச்சி
ஒவ்வொரு பாடலும் / பாடியவர்களும் அருமை ...அருமை
கல்லூரி கீதம் பாடும் போது பின்னணி இசை சேர்த்து கொண்டது மிகவும் நன்றாக இருந்தது
உள்ளூர் /வெளியூர் சிறந்த பாடகர் தெரிவு ,
அதே போல் இலங்கை கலைஞ்சர்களுக்கு ஒரு அங்கீகாரம் - இதற்காகவே நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர்களை பாராட்டலாம்
எனது அம்மா படித்த பாடசாலை என்பதில் நானும் இந்த வெற்றியை பகிர்ந்து கொள்ளுகிறேன். ( அம்மா எனக்கும் டிக்கெட் வாங்கியது , மேலதிக மகிழ்ச்சி )
ஒரு நல்ல நிகழ்ச்சியில் எப்படியாவது ஓர் இரு குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்று, கண்டு பிடித்து ஒருங்கிணைப்பாளர் சிலரிடம் பகிர்ந்து கொண்டேன்.
மொத்தத்தில் இனி வரும் காலங்களில் இந்த நிகழ்ச்சியின் தரம் தக்க வைப்பது உங்களுக்கே பெரிய சவாலாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை
நிகழ்ச்சியை நேரில் பார்க்காதவர்களின் குறையை ஆசிரியரின் நீண்ட கட்டுரை தீர்த்து வைக்கும் - நன்றி மதுரா மஹாதேவ்
ரமேஷ் நடராஜா
சிட்னி
Post a Comment