காளி சூப்பர் ஸ்டார் டைட்டிலில் பல வருடங்களுக்கு முன்பு வந்த படம். தற்போது அதே டைட்டிலில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் காளி. விஜய் ஆண்டனி மீதுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலை நிறுத்தினாரா? பார்ப்போம்.
கதைக்களம்
விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே ஒரு சைக்கோ கதாபாத்திரம், அம்மா செண்டிமெண்ட் இது இரண்டும் தான் பெரும்பாலும் இருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு எப்போதும் தன் கனவில் ஒரு பாம்பு, மாடு தெரிகின்றது. அமெரிக்காவில் முன்னணி டாக்டராக இருக்கும் இவருக்கு ஒரு கட்டத்தில் நாம் வளர்ப்பு மகன் தான் என தெரிய வருகின்றது.
பிறகு தன் வளர்ப்பு பெற்றோர்கள் அனுமதியுடன் இந்தியா வர அங்கு தன் தாய் இறந்துவிட்டார் என தெரிகின்றது. அதே நேரத்தில் தன் தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி தன் அப்பா யார் என்று தேடி செல்கின்றார். தன் தந்தை யார் தன் அம்மா ஏன் இப்படி ஆனார் என்பதை விஜய் ஆண்டனி கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஆண்டனிக்கே அளந்து எடுத்த கதாபாத்திரம், தனக்கு என்ன வருமோ அதை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், பல பேட்டிகளில் எனக்கு நடிக்க தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.
கொஞ்சம் எக்ஸ்பிரஷேன் காட்ட முயற்சி செய்யுங்கள் விஜய் ஆண்டனி, இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு Safe Zone ல் இருப்பீர்கள். அம்மா செண்டிமெண்டும், சைக்கோ செண்டிமென்டும் விஜய் ஆண்டனியின் முந்தய படத்தில் இருக்கும். தற்போது கூடுதலாக அவர் அப்பா செண்டிமெண்டை இதில் சேர்த்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியை தாங்கி பிடிப்பதே யோகி பாபு தான், தன் ஒன் லைன் கவுண்டரில் கலக்கியுள்ளார், அதிலும் விஜய் ஆண்டனி அப்பாவை கண்டிப்பிடிக்க அவர் கொடுக்கும் ஐடியாக்கள், ஊர் தலைவர் வீட்டில் திருடப்போவது, அவருக்கே சரக்கு வாங்கி கொடுத்து அவர் கதையை கேட்டு கலாய்ப்பது என ஒன் மேன் ஷோ. சூப்பர் யோகி பாபு.
படத்தில் மூன்று கதை பயணிக்கின்றது, மூன்று பேரிடம் தன் அப்பாவை பற்றி விஜய் ஆண்டனி விசாரிக்கையில் அந்த கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி வருகின்றார். வித்தியாசமான முயற்சி தான்.
ஆனால், மூன்றாவதாக வரும் கதையை தவிர மற்ற இரண்டு கதையிலும் சுவாரஸ்யம் இல்லை. மூன்றாவது கதை தொடங்கும் போதே மக்களிடம் அட இன்னொன்றா என்ற சோர்வு தெரிகின்றது.
மூன்று கதையிலும் ஒரு எமோஷ்னல் விஷயத்துடன் முடிவடைந்தாலும் அது எந்த விதத்தில் ஆடியன்ஸுடன் கனெக்ட் ஆனது என்றால் கேள்விக்குறி தான்.
படத்திற்கு இசையே விஜய் ஆண்டனி என்பதால் பாடல்களில் கவர்கின்றார், அதிலும் குறிப்பாக அரும்பே பாடலில் செம்ம ஸ்கோர் செய்துள்ளார்.
க்ளாப்ஸ்
யோகி பாபு முதல் பாதியை தாங்கிபிடிப்பதே அவர் தான்.
மூன்றாவது கதை அதில் சொன்ன விஷயம் கவர்கின்றது.
விஜய் ஆண்டனியின் இசை.
பல்ப்ஸ்
சோர்வாக செல்லும் திரைக்கதை.
எந்த கதையிலும் நாசர் தாடியை போலவே ஒட்டாத காதல் காட்சிகள்.
மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் தேடல் பெரிது என்றாலும் சுவாரஸ்யம் குறைவு.
நன்றி CineUlagam
No comments:
Post a Comment