ஞான வேள்வி 2018 (ஜுலை 10, 11, 12)

.

அன்புடையீர்,
கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் மூன்று நாள் சிறப்புப் பேருரைகள் உங்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
திருக்குறள் (10)மகா பாரதம் (11) சார்ந்த தலைப்புகள் முதலிரு நாட்களிலும் அமைந்து,
மூன்றாம் நாள் பேருரையானது, பலருடைய வேண்டுகோளுக்கிணங்க,
'கேள்விகளால் ஒரு வேள்வி' என்ற தலைப்பில்,
உங்களுடைய தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகள்-சந்தேகங்களை தெளிவுறுத்தும் அரங்கமாக அமையவுள்ளது. 
தங்களுடைய கேள்விகளை தயவு செய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஜுலை 8ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள்.
kambanaustralia@kambankazhagam.org
அதிக கேள்விகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், தேர்ந்த விடயங்கள் ஆராயப்படும் என்பதையும் பணிவுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

அனைவரும் ஞான வேள்விப் பேருரைகளுக்கு வருகைதந்து,
எம் தமிழ்ப் பணிகளுக்கான ஆதரவைத் தந்தும்
பயன் பெற்றும் இன்புற வேண்டும் என அன்போடு அழைக்கின்றோம்.

-கழகத்தார்-

No comments: