தமிழ் சினிமா

லென்ஸ்   


சினிமாவில் எத்தனையோ விதமான படங்கள் வருகின்றன. அதில் ஒரு சில படங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை அப்பட்டமாக சொல்கின்றன. விருதுகளுக்காகவே சில படங்கள் எடுக்கப்பட்டாலும் அவை குறிப்பட்ட கதையை ஆழமாக பதியவைத்துவிட்டு செல்கிறது.
அந்த வரிசையில் லென்ஸ் திரைப்படம் எதை வெளிச்சம் போட்டு காட்டப்போகிறது என பார்க்கலாம்.

Lens
கதைக்களம்

கதைப்படி பார்க்கப்போனால் வில்லன் தான் ஹீரோவா, இல்லை ஹீரோ தான் வில்லனா என்பது தான் ட்விஸ்ட். கிளைமாக்ஸில் தான் இது புரியும்.
அரவிந்தாக வரும் இயக்குனர் தன் மனைவி சுவாதிக்கு தெரியாமல் சமூகவலைதளத்தை தவறாக பயன்படுத்தி முகம் தெரியாத பெண்ணுடன் chatல் ஆபாச இச்சை கொள்கிறார்.
வில்லன் யோகனாக வரும் ஆனந்தசாமி ஆதரவற்றவர். வாய்பேச முடியாத ஏஞ்சலை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் மனைவி இறந்துபோக தனிமையால் வாடுகிறார் யோகன்.
வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் வழக்கம் போல அரவிந்த் தனது தொடர்கதையை செய்ய திடீரென ஒருநாள் இவரது சிஸ்டத்தை வில்லன் ஹேக் செய்து விளையாட கதை சூடுபிடிக்கிறது.
எதிர்முனையில் Chat பக்கத்திலிருந்து தான் சொல்வதை கேட்க வேண்டும் இல்லையெனில் உன் லீலைகளை நான் அம்பலப்படுத்திவிடுவேன் என வில்லன் அரவிந்தை மிரட்டுகிறார்.
வில்லன் ஏன் ஹீரோவை மிரட்டவேண்டும். இருவருக்கும் என்ன சம்பந்தம், அவனிடமிருந்து இவர் தப்பித்தாரா, இவரின் லீலைகள் அம்பலமானதா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அறிமுக இயக்குனராக தானே கதையெழுதி படத்தை எடுத்து, நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் தற்போதிருக்கும் கவர்ச்சி உலகில் சைக்கோத்தனமாக நடக்கும் விஷயத்தில் ஹீரோவாக நன்கு நடித்திருக்கிறார்.
படுக்கையறை விசயங்கள் இப்போதெல்லாம் பப்ளிக் வீடியோவாக எப்படியோ சமூகவலைதளத்திலும், இணையதளத்திலும் உலா வருவதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
வழக்கமான வில்லன்களை போல் இல்லாமல் இப்படத்தில் வில்லன் ஒரு வித்தியாசமானவராக நடித்திருக்கிறார். சொல்லப்போனால் பார்ப்பவர்களுக்கு இவர் தான் ஹீரோ என்று தோன்றும்.
ஏஞ்சலாக நடித்திருக்கும் அஸ்வதி புதுமுகம் என்றாலும் தன் ரோலை சரியாக செய்திருக்கிறார். சுவாதியாக நடித்திருக்கும் மிஷா கோஷல் ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் கிளைமாக்ஸில் இவரும் ஒரு ட்விஸ்ட்டை வைக்கிறார்.
படத்தில் ஒரே பாடல் தான் என்றாலும் சலிப்பு தட்டவில்லை.

கிளாப்ஸ்

Cyber crime குற்றங்களை புதுமுக இயக்குனராக ஜெயபிரகாஷ் துணிச்சலாக இந்த கதையை எடுத்திருப்பதை பாராட்ட வேண்டும்.
வெற்றிமாறன் படத்தை வழங்கியிருப்பது இப்படத்திற்கு கிடைத்த பிளஸ்.



கதைக்கோர்வையில் காட்சிகளை நகர்த்திய விதத்தில் ஒளிப்பதிவு ஓகே.ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் ஒகே. ரொமாண்டிக்.

பல்பஸ்

காமெடி இல்லையென்றாலும் சில சீரியஸான இடங்களில் ஹீரோவின் டையலாக் சிரிக்கும் படியாக உள்ளது.
முதல் படம் என்றாலும் இயக்குனர் ஆபாச விழிப்புணர்வு என்ற பெயரில் கொஞ்சம் கூடுதலாக ஆபாசத்தை தொட்டுவிட்டாரோ என தெரிகிறது.
வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் நிலையாக உள்ளது.
மொத்தத்தில் லென்ஸ் சரியான வியூ. தெளிவாக விசயத்தை காட்டியிருக்கிறது.
Cast:

நன்றி   Cineulagam 

No comments: