இலங்கைச் செய்திகள்


அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!

கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்

வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி

நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு

இலங்கையை வந்தடைந்தார் மலே­சிய பிர­த­மர்
அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!

14/12/2017 அமெ­ரிக்­காவில் நியூ­ஜெர்சி மாநி­லத்தில் தற்­பொ­ழுது வசித்­து­வரும் யாழ்ப்­பாணம் அள­வெட்­டியைச் சேர்ந்த ஈழத் தமி­ழர்கள் நிர்­மலா, செல்­லையா ஞான­ சே­கரனின்   மகன்   மகிஷன் ஞான­சே­கரன்   சமூ­க­நல  செயற்­பா­டு­களில் மிக ஆர்வம் கொண்­டவர். இலங்­கையில் பிறந்து அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும்   மகிஷன் ஞான­சே­கரன்  தமிழ் மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டியவர். ஸ்பானிஷ் மொழி­யையும் ஆர்­வ­மாக கற்று வரு­கின்றார்.
2016 ஆகஸ்ட் மாதம்  அமெ­ரிக்க மாநி­ல­மான நியூ­ஜெர்­சியின் உயர்­நிலைக்  கல்விப் பிரிவில் பயிலும் மாண­வர்­களில் கல்வி, சமூ­க­சேவை, மாணவ தலை­மைத்­துவம் ஆகிய துறை­களில் முதல் நிலை  மாண­வ­ராக  விசேட  தேர்வு  மூலம் தெரிவு  செய்­யப்­பட்டு அம்­மா­நி­லத்தின் பிர­தி­நி­தி­யாக அமெ­ரிக்க தலை­நகர்  வாஷிங்டன்   D.C  யில் அமைந்­துள்ள வெள்ளை மாளி­கைக்கு அழைக்­கப்­பட்டு அங்கு ஒரு­வார காலம் தங்­கி­யி­ருந்த மகிஷன் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி   பராக் ஒபாமா, உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள், சட்ட சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோரை நேர­டி­யாக சந்­தித்து மாணவ தலை­மைத்­துவம், சமூ­க­நல செயற்­பா­டு­களில் மாண­வர்­களின் பங்­க­ளிப்பு போன்ற பல முக்­கிய விட­யங்­க­ளைப்­பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.  சமூ­கப்­பணி  தொடர்­பான செயல்­முறைப் பயிற்சி  மற்றும் பொது­வாழ்வில் ஈடு­பட்டு சமூ­கப்­ப­ணி­யாற்ற விரும்பும் இளை­ஞர்கள் இந்த வாய்ப்­பினைப் பெறு­வது மிகவும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யாகும். அமெ­ரிக்க நாட்டின் எதிர்­காலத் தலை­வர்கள் என்ற அளவில் இந்த இளை­ஞர்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.  இந் நிகழ்­வுக்கு தமிழ் மாணவன் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும். இந்­நி­கழ்­வா­னது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த பெரு­மையும்  அங்­கீ­கா­ரமும்  ஆகும். 
இத்­த­கு­தியை மகிஷன் அடை­வ­தற்குக் காரணம்  நடு­நிலை கல்வி நாட்­களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்­டிய சமூ­க­நல அக்­கறை கொண்ட பல செயல்­களும் பணி­க­ளு­மாகும். இவை­யாவும் படிப்­ப­டி­யாக  இவரை உயர்த்தி வந்­துள்­ளது. பத்து வயதில் வானியல் வல்­லு­ந­ராகப் பணி­யாற்­று­வதில் ஆர்வம் கொண்ட மகி­ஷனின் நோக்கம் பிற்­கா­லத்தில் ஒரு கோளையோ, விண்­கற்­க­ளையோ கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று துவங்­கி­யது.  நூலகம் ஒன்று நடத்­திய வாசிப்பு போட்­டியில் பங்­கு­பற்றி,   மூன்று மாத காலத்­தினுள் நூல­கத்தின் 1,000 புத்­த­கங்­களைப்  படித்­த­மைக்­காக நகர ஆட்­சி­யா­ள­ரிடம் இருந்து பரிசும், சிறந்த கவிதை  ஒப்­பு­வித்­த­மைக்­காக தங்­கப்­ப­தக்­கமும்   மற்றும்   மூன்று “உச்­ச­ரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்­டி­களில் பரி­சுகள் என்று கல்­விக்­கான தகு­தி­களை வளர்த்துக் கொண்டு பல போட்­டி­களில் வெற்­றி­களை தன­தாக்கிக் கொண்டார்.
சிறு வய­தி­லி­ருந்து தனக்கு  உத­விய  பொது  நூலகம் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றையால் நிதி­யின்றி மூடப்­பட்ட பொழுது அது ‘மனி­த ­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம்’ என மிகவும் இள­வ­ய­தி­லேயே தனது கருத்தைத் தயக்­க­மின்றிப் பதிவு செய்­தவர் மகிஷன்.  நன்றி வீரகேசரி


கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்

13/12/2017 காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது.
காலிமுகத் திடலில் நடைபெற்ற மூன்று நாள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மரத்தின் உயரம் 72.1 மீற்றர் - அதாவது, 236 அடியும் 6.58 அங்குலம் என்று அளவிடப்பட்டிருந்தது.
அதன்படி, உலகின் உயரமான செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.  நன்றி வீரகேசரி


வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி

12/12/217 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. 

அதில் வவுனியா நகரசபைக்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20 ஆயிரத்து 300 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 23 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 12 அயிரத்து 166 வாக்காளர்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 16 ஆயிரத்து 680 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 26 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு  55 ஆயிரத்து 5 வாக்காளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 10 ஆயிரத்து 448 வாக்களாருமாக 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரிநத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்

16/12/2017 வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து நத்தார் தினத்தன்று அனைத்து பேரூந்து சேவைகளும் இடம்பெறும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா புதிய பேரூந்து நிலையம் கடந்த 2017 ஜனவரி 16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் எவையும் அங்கிருந்து இடம்பெறாத நிலையில் பயன்பாடின்றி காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வட மாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனுடன் வட மாகாணசபை கட்டிடத்தொகுதியில் புதிய பேரூந்து நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பேரூந்து நிலையமானது பயன்பாடின்றி காணப்படுவது தொடர்பாக நாம் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சுட்டிக்காட்டியிருந்தோம். 
எனினும் அங்கிருந்து சேவைகளை மேற்கொள்ளவதற்கு இலங்கை போக்குவரத்து சபை முன்வராத நிலையில் எம்மாலும் சேவையினை அங்கிருந்து செயற்படுத்த முடியாதிருந்தது.
இந் நிலையில் வட மகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதன்போது தேசிய போக்குவரத்து அணைக்குழுவின் தலைவர், வட மகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் செயலாளர், வட மகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியத்தினர், ஐந்து மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையினுடைய 7 சாலை முகாமையாளர்கள் இப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தோம்.
இதன்போது இறுதி முடிவாக அவைரும் இணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பது என முடிவு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி
கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு
17/12/2017 கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமானசேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 
இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருக்கின்றது. மேலும் கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமான சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இலகுவாக சென்று தரிசிக்க முடியும்.
மேலும் பௌத்த மதத்தின் தெய்வீக நறுமணம் இந்தியாவின் பல பகுதிகளிலும் பறந்துள்ளது. பௌத்த மதத்தின் நற்செய்திகளை உலக நாடுகள் பின்பற்றுமாயின், உலக நாடுகளில் தற்போது வளர்ந்துவரும்  வன்முறைகள் குறைந்துவிடும் என நான் நம்புகின்றேன்.
இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. நட்பு ரீதியில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு உதவுவதற்கு தயாராகவுள்ளோம்.
அதுமாத்திரமின்றி இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கு வழிசமைக்கும் முகமாக நாம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி
இலங்கையை வந்தடைந்தார் மலே­சிய பிர­த­மர்

17/12/2017 மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரவித்தார்.
 அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விஞ்ஞான தொழில்நுட்பம், புதிய உற்பத்திகள் என்பன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்­கேற்கும் பொது­ந­ல­வாய மாநாட்டின் பங்­கேற்பு நாடு­களில் மலே­சிய தலை­மைத்­துவம் தொடர்­பாக ஆராயும் நோக்­கி­லேயே   இவ­ரது இவ்­வி­ஜயம் அமைந்­துள்­ளது.
இவ்­வி­ஜ­யத்தின் பொழுது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளிவி­வ­கார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை சந்திக் கவுள்ளார்.  நன்றி வீரகேசரிNo comments: