அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இரபோசன விருந்து நிகழ்வு

.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நத்தார் இராபோசன விருந்து  சென்ற சனிக்கிழமை (09.12.2017) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11 மணிவரை கோலாகலமாக இடம்பெற்றது . அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நூற்றுக்கு மேற்பட்ட  குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும்  ஒன்று கூடி விருந்தை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்ச்சியை திரு சிவசம்பு பிரபாகரன் வரவேற்று ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திரு .விஜய்விஜயரட்ணம் பாடல் இசையை ஒழுங்கு படுத்தி காதுக்கினிய பழைய புதிய பாடல்கள் பாடப்பட்டது.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்  அங்கத்தவர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் மிக இனிமையாக பாடினார்கள். தொடர்ந்து மெல்பேர்னில் இருந்து வருகை தந்திருந்த அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நிஷாம் அவர்கள் பல  குரலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பல  அறிவிப்பாளர்கள் போல்   அவர் செய்து காட்டியும் நடித்துக் காட்டியும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.





எல்லோருக்கும் பிடித்தமான கினோ விளையாட்டை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்  கூட்டாம் சோறு நிகழ்ச்சி தயாரிப்பாளர்  பரத் அவர்கள் நடாத்தி அனைவரையும் மகிழ்வித்தார். 

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இந்திய செய்தியாளர் சொக்கன் (சம்பந்தம்) அவர்கள் நகைச் சுவை துணுக்குகளை சொல்லி மகிழ்வூட்டினார் 

அதனைத் தொடர்ந்து நாவிற்கினிய  அறுசுவை உணவு பரிமாறப் பட்டது .


உணவினைத் தொடர்ந்து அனைவரும் பங்குகொள்ளுமாறு இரண்டு அணியினராக பிரிக்கப்பட்டு பாட்டுக்குப் பாட்டு நிகழ்வு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்  செ.பாஸ்கரனால்  நிகழ்த்தப் பட்டது . இந்நிகழ்வில் போட்டியாக இரு அணியினரும் பாடி அசத்தினார்கள் .



இறுதியாக நடனநிகழ்வு இடம்பெற்று நிகழ்வு 11 மணிக்கு இனிதாக நிறைவடைந்தது. வருடம் தோறும் நடைபெறும் இந்நிகழ்வு இம்முறையும் சிறப்பாக நடந்து முடிந்தது. 























No comments: