நீதிபதி இளஞ்செழியனின் செயலால் மனமுருகிய முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்
யாழ். சுற்றிவளைப்பில் 33 பேர் கைது
சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இராஜிநாமா !
வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்
அடையாளங்காணப்பட்டார் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்
வடக்கில் மீண்டும் இராணுவம்
நீதிபதி இளஞ்செழியனின் செயலால் மனமுருகிய முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர்
08/08/2017 முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று
அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை
இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர், நீதிபதியின் இவ்வாறான செயற்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ். சுற்றிவளைப்பில் 33 பேர் கைது
சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இராஜிநாமா !
07/08/2017 வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் குறித்த இராஜிநாமா அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றுகூடலில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லையென முடிவெடுக்கபட்டதையடுத்து, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்
08/08/2017 வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கணேசபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்,
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நாம் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய நாம் 2004 ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்று தொடக்கம் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.
அத்துடன் மழை காலங்களில் இடம்பெயர்வுகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது. அத்துடன் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அடையாளங்காணப்பட்டார் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்
வடக்கில் மீண்டும் இராணுவம்
யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர், நீதிபதியின் இவ்வாறான செயற்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ். சுற்றிவளைப்பில் 33 பேர் கைது
08/08/2017 குடாநாடெங்கும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி
வளைப்பு நடவடிக்கைகளில் மொத்தமாக 33 பேர் கைது செய்யப்பட்டதாக வட
பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்ட இந்த சிறப்பு சுற்றி
வளைப்புக்களில் காங்கேசன்துறை மற்றும் யாழ்.பொலிஸ்
பிராந்தியங்களில் இந்த கைது கள் பதிவானதாக வட பிராந்திய சிரேஷ்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்களை மேற்கோள் காட்டி பொலிஸ்
ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் அறிவித்தது.
குடாநாட்டின் குடவத்தை , துன்னாலை, வேம்படி, அல்வாய் மற்றும் யாழ்.
பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த
ஜூலை 9 ஆம் 10 ஆம் திகதிகளில் பருத்தித்துறை மணல்காடு பகுதியில் மணல்
லொறி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர்
கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அமைதிக்கு பங்கம்
ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களும், ஜூலை 21 ஆம் திகதி மணல்காடு
பகுதியில் கடலோர பாதுகாப்புப் பிரிவினர் மீது தாக்குதல்
நடத்தியவர்களும் உள்ளடங்குவதாக சுற்றிவளைப்பை
நெறிப்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைவிட விஷேட அதிரடிப் படையினரின் பவல் வாகனம் மீது தாக்குதல்
நடாத்தியவர்களும் கைதானோரில் அடங்குவதாக வட பிராந்திய சிரேஷ்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் சுட்டிக்காட்டுகின்றது.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின்
உத்தரவுக்கு அமைய சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் முற்பகல்
9.00 மணிவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோவின்
மேற்பார்வையில் இரு நாட்கள் விஷேட சுற்றிவளைப்புக்கள்
இடம்பெற்றன.
இதன் போது , காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
மாசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் வடமராட்சி, துன்னாலை கிழக்கு,
தெற்கு பகுதியை மையப்படுத்தியும், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
ஸ்ரெனிஸ்லெஸின் நேரடி கட்டுப்பாட்டிலும் யாழ். பகுதியை
மையப்படுத்தியும் சுற்றி வளைப்பு நடைபெற்றது. இதன்போது பிராந்திய
பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் வீரர்கள்
100 பேர் வரையில் சுற்றி வளைப்பு நடவடிக்கையில்
ஈடுபடுத்தப்பட்டனர்.
காங்கேசந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மேற்பார்வையில்
இடம்பெற்ற சுற்றி வளைப்புக்கள் குடவத்தை , வேம்படி மற்றும் துன்னாலை
பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் தீவிரமாக இடம்பெற்றிருந்தன.
இதன் போது 52 பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் ஆயுதம்
தாங்கி சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்ததுடன் மேலும் சில
குழுவினர் அவசியம் ஏற்படும் போது அப்பகுதியை சுற்றிவளைக்க தயார்
நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் 13 பேர் கைது
செய்யப்ப்ட்டனர். இதனைவிட யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
பகுதிக்கு உட்பட்ட அல்வாய், யாழ். பகுதியில் வைத்து 20 பேர் வரையில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பவல் வாகனம் மீது தாக்குதல்
நடத்தியோர், கடலோர காவல் படையினரின் மீது தாக்குதல் நடாத்தி
அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தோர், மணல் காடு பகுதியில் இளைஞர்
ஒருவர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பின்னர் பிரதேசத்தின்
அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் ையில் பொலிஸ் காவலரணை உடைத்து,
வீதிகளில் ரயர் எரித்து கலவரம் புரிந்தோர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர்,
குடி போதையில் வாகனம் செலுத்தியோர், தடை செய்யப்பட்ட கத்திகளை
வைத்திருந்தோர், சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியோர் ஆகியோர்
அடங்குவதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம்
தெரிவித்தது.
நன்றி வீரகேசரி
சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இராஜிநாமா !
07/08/2017 வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் குறித்த இராஜிநாமா அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றுகூடலில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லையென முடிவெடுக்கபட்டதையடுத்து, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்
08/08/2017 வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கணேசபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்,
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நாம் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய நாம் 2004 ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்று தொடக்கம் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.
அத்துடன் மழை காலங்களில் இடம்பெயர்வுகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது. அத்துடன் எமக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அடையாளங்காணப்பட்டார் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்
08/08/2017 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை
குறிவைத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன்
தொடர்புபட்டுள்ளார்கள் என சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டவர்களுள், பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்பில்
இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போதே குறித்த அணிவகுப்பு இடம்பெற்று சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். புங்குடுத்தீவைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிஸில் சரணடைந்திருந்தார்.
இந் நிலையிலேயே இன்று நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி, சம்பவ இடத்திற்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் சாரதிகளால் சம்பவம் தொடர்பாக சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி

12/08/2017 புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆமை
வேகத்தினை அடைந்திருப்பதாக சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறிதரன் வடக்கில் மீண்டும் இராணுவப்பதிவுகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய
வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு
வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஊழல் மோசடிகள் குறித்து தற்போது பேசப்படுகின்றது. கடந்த
ஆட்சியாளர் தற்போதுள்ளவர்களையும், தற்போதைய ஆட்சியாளர்கள்
கடந்த ஆட்சியாளர்களையும் சுட்டிக்காட்டும் படலம்
தொடர்ந்தவண்ணமுள்ளது. புதிய ஆட்சியில் மிகவும் மோசமான ஒரு
செயற்பாடாக கருதப்படும் பிணை முறிகள் விற்பனை குறித்து
குற்றச்சாட்டுக்களில் அமைச்சர் இராஜினாமாவும்
செய்திருக்கின்றார்.
இவ்வாறான விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்த
நாட்டின் ஒரு தேசிய இனத்திற்கு காணப்படும் பிரச்சினைகள் பராமுகமாக
தொடரும் நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்ற அவலத்தினை யாரும் ஏன்
கருத்தில் கொள்ளாதிருக்கின்றார்கள் என்பதே எனது கேள்வியாகும்.
எத்தனையோ தடவைகள் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக
இந்த சபையில் குறிப்பிட்டுள்ளோம். அதனை விடவும் அத்தியாவசியமாக
அந்த மக்களுக்கு அவசியமாக காணப்படுகின்ற பல்வேறு விடயங்களையும்
முன்வைத்துள்ளோம். ஆனால் எதற்குமே பதிலைக் காணவில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. அதன் ஊடாக
பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எமது
மக்களுக்கு காணப்பட்டது.ஆனால் கடந்த காலத்தில் மிகவும் தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டவொரு விடயமாக காணப்பட்ட அரசியலமைப்பினை
உருவாக்குவதற்கான செயற்பாடுகள் தற்போது ஆமை வேகத்தினை
அடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் காட்டும் ஆர்வத்தினை தற்போது
அரசியலமைப்பு விடயத்தில் காட்டாது இருக்கின்றமை ஐயப்பாட்டினை
ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு நிலைமைகள் காணப்படுகின்ற அதேநேரம் வடக்கில் மீண்டும்
இராணுவத்தினர் சுற்றி வளைப்புக்களைச் செய்யும் செயற்பாடுகளும்
மக்களை பதிவு செய்கின்ற செயற்பாடுகளும்
ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
கிளிநொச்சியில் பல்லவராயன் கட்டு உள்ளிட்ட பகுதிகளில்
இவ்வாறான இராணுவப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. வடக்கின் ஏனைய
பகுதிகளிலும் இவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றன.
எமது மக்கள் அரசாங்கத்திடம் பெரிதாக எதனையும்
எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தமக்கான வாழ்வாதார வசதிகளை
கோருகின்றார்கள்.
நியாயமான தீர்வைக் கோருகின்றார்கள். காணாமல் போன தமது
சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்று கோருகின்றார்கள். அவற்றினை
அரசாங்கம் மேற்கொள்ள முடியாதிருப்பது ஏன்?
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா நிபுணர் ஊடக சந்திப்பை
நடத்தியிருந்தார். அதிலே அவர் சில விடயங்களை
குறிப்பிட்டிருந்தார். அவை தொடர்பில் வீரகேசரி பத்திரிகையில்
தலைப்புச்செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக காணாமல் போனவர்கள், சிறைச்சாலைகளில் தடுத்து
வைக்கப்பட்டிருக்கின்றவர்கள், திருமலையில் உள்ள நிலக்கீழ் முகாமில்
நடைபெற்ற விடயம் ஆகியவை தொடர்பில் உண்மைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என
வலியுறுத்தியிருந்தார்.
ஆகவே சர்வதேசமும் எமது மக்கள் கோரும் விடயங்களின் நியாயப்பாட்டினை
உணர்ந்துள்ளது. அரசாங்கம் அது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பதிலளிக்க
கடமைப்பட்டிருக்கின்ற பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment