சிறகுகள் -கவிதை - திருச்சி முஹம்மது காசிம்

.

 கஷ்டத்தில் சிக்கியவுடன்
சருகாகி விட்டோம்
என்று எண்ணி விடாதே !
பறவைகள்
ஒடிந்த சிறகை வைத்து தான்
பறக்க முயற்சிக்கிறது !

பல இடங்களில் முட்டி மோதியும்
வாய்ப்புகள் கிடைக்கவில்லையே
என்று மனம் ஒடிந்து விடாதே !
காற்றில் பறக்கும் சிறகுகள்
ஒரிடத்தில் நிலையாக நிற்ப்பதற்க்கே
அலை மோதுகின்றது !

முன்னேறும் போது
"எல்லோரும் ஏளனமாக பார்க்கின்றார்கள்"
என்றுஎண்ணிவிடாதே!
சிறகுகள் மேலே
செல்லும் போது தான்
பலர் வியப்பாக பார்க்கிறார்கள் !அடுத்தவர்களின் கைகளை
நம்பி  இராதே !
தன்னம்பிக்கையில் தான்
வாழ்க்கை இருக்கின்றது !

கிளைகளை நம்பி
பறவைகள் அமர்வதில்லை !
சிறகுகளின்  நம்பிக்கையிலேயே
பறவைகள் வாழ்கிறது !

No comments: