உலகச் செய்திகள்


80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

இந்து மதத்தைச் சேர்ந்தவர் பாகிஸ்தானில் அமைச்சராகிறார் 

 ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது.!


80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

09/08/2017 இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை,சவுதி,குவைட்,அமீரகம்,யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது.

கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தரும் பயணிகளின் நாடுகளை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது (30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில்) மாறுபடுகிறது.

மேலதிக தகவலுக்கு ;- https://www.visitqatar.qa/plan/visas-requirements.html


நன்றி வீரகேசரி










இந்து மதத்தைச் சேர்ந்தவர் பாகிஸ்தானில் அமைச்சராகிறார்
07/08/2017 பாகிஸ்தானில் கடந்த 25 வருடங்களில் முதன் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் உறுப்புரிமை பெற்றுள்ளார்.

சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டம் மீர்புர் மதெலோ நகரத்தில்  65 வயதான தர்ஷன் லால் வைத்தியராக பணிபுரிகிறார்.  பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் அமைச்சரவையில் இவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இவர் 2013 ஆம் ஆண்டு நவாஸ் ஷரீஃபின் பி.எம்.எல்.என் கட்சியின் சார்பில் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் பக்துன்க்வா சிந்து பலுச்சிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களையும் ஒருங்கிணைக்கும் பணி தர்ஷன் லாலிடம் ஒப்படைக்கப்படடள்ளது.   நன்றி வீரகேசரி











 ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது.!
12/08/2017 ராஜீவ் கொலை வழக்கின் குற்­ற­வாளிகள்  றொபர்ட் பயஸ்  மற்றும்  ஜெயக்­குமார்  ஆகி­யோரை விடுவிக்க முடி­யாது  என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.  முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக் கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன், றொபர்ட் பயஸ், ஜெயக்­குமார் உள்­ளிட்ட 7 பேர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். 25 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறையில் உள்­ள­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும் என தமி­ழக அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.
இந்­நி­லையில் ஜெயக்­குமார், றொபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்­களை விடு­விக்­கக்­கோரி சென்னை உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர். இந்த மனு, கடந்த ஜன­வரி மாதம் விசா­ர­ணைக்கு வந்­த­போது, தற்­போ­தைய நிலை­கு­றித்து மத்­திய, மாநில அர­சுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று  உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.
இந்­நி­லையில் இது­தொ­டர்­பான வழக்கு நேற்று மீண்டும் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்­குமார், றொபர்ட் பயஸை விடு­விக்க முடி­யாது என மத்­திய உள்­துறை அமைச்­சகம் பதில் மனுத்­தாக்கல் செய்­தது. ஆயுள் தண்­டனை என்­பதே வாழ்நாள் முழு­வதும் சிறையில் கழிக்க வேண்டும் என்­ப­துதான். எனவே ஜெயக்­குமார் மற்றும் றொபர்ட் பயஸ் ஆகியோர் வாழ்நாள் முழு­வதும் சிறையில் இருக்க வேண்­டி­யது தான் என்றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இத­னி­டையே பேர­றி­வாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி




No comments: