மகளிர் உரிமைகள் -- தி. சுவாமிநாதன்நாமக்கல்.

.

               
மகளிர்  உரிமைகள் என்பது அனைத்து வயதிலுமுள்ள பெண்கள் மற்றும் சிறுமியர்கள் அனைவருக்குமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் குறிக்கிறது. இந்த உரிமை நிறுவனப்படுத்தப் படாது இருக்கலாம். சட்டம் உள்ளுர் பழக்கங்கள் சமூகக் கட்டுபாடுகளால் தவிர்க்கப்பட்டோ இருக்கலாம். ஆண்களுக்கு இயல்பாக கொடுக்கப்படும் உரிமைகள்கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. 18ம் நூற்றாண்டில் பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்விகூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். போர்களில் ஈடுபட்டு ஆண்களின் எண்ணிக்கை பெருமளவு சரிந்த போது 1857ஆம் ஆண்டுகளில் ஆண்களுக்கு நிகராக நிலக்கரி சுரங்கங்கள் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டது. பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே வைத்திருந்தனர்  என்பது வரலாற்று உண்மை. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மகளிர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். பெண் விடுதலை என்பது சம உரிமை வேலை நேரம் சம்பளம் தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை இவைகளில் தொடங்கி சமையலறை மண உணர்வுகள் வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விஷயம். 
மறுக்கப்படும் முக்கிய உரிமைகள்:



          உடல் மற்றும் மண சுதந்திரம் வேலை செய்ய உரிமை வேலையில் சரியான ஊதியம் பெறல் சொத்துரிமை கல்வி பெற உரிமை இராணுவத்தில் பணியாற்றும் உரிமை மணவாழ்வு குழந்தை வளர்ப்பு மற்றும் சமய சுதந்திரம் போன்ற விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையில்தான் பெரும்பாலான மகளிர் உள்ளனர். 
நவீன மகளிர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சிரமங்கள்:


          பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவது, பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சனைக் கேட்டல், நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை மற்றும் சித்ரவதை செய்தல், கடத்தல், பெண்களை கைவிட்டு விட்டு கணவர்கள் ஓடுதல், வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணம் தொடர்பான மோசடிகள், முதல் மனைவி இருக்கும் போதே கணவன் இரண்டாவது மணம் செய்தல், கற்பழிப்பு, காவல்துறை அலட்சியம், தொல்லை தருதல், பாலின பாகுபாடு, ஊடகங்களில் பெண்களை அநாகரிகமாக பிரதிநிதித்துவப் படுத்தல், சம உரிமையின்மை, பாராளுமன்ற, சட்ட மன்றங்களில் மிகக் குறைந்த பிரதிநிதித்துவம், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் வேலைக்குச் செல்ல கணவனிடமிருந்து அனுமதி மறுக்கப்படுதல்  ஆகிய சமுதாய போக்குகள் முற்றிலும் குறையவில்லை.
          மூன்று வயது பெண் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் வாழ்கிற பதட்டம் இன்றைய பெற்றோர்களுக்கு உள்ளது. பெண்களை வெளியே அனுப்ப பயமாக உள்ளது. ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு என குற்றங்கள் குறையவில்லை. பெண் குழந்தை பிறந்தால் முகம் சுளிப்பது, ஆண் குழந்தை என்றால் சந்தோஷப்படுவது என்ற நிலை இன்றும் உள்ளது. பெண்களைத் திட்டுவதற்கான வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் உள்ளது  வருந்தத்தக்கது. பெண்களின் புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. பெண்களை, மாணவிகளை கேலி செய்வது, சிறைச் சாலைகளில் பெண்களுக்கு கொடுமை நடத்தப் பட்டால் அது வெட்கக் கேடானது. வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் அழுக்குத் துணிகளையும், எச்சில் பாத்திரங்களையும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்து சம்பளம் பெறுபவர்கள், வீட்டில் ஒரு பொருள் தொலைந்து விட்டது என்றால், முதல் சந்தேகம் வீட்டு வேலைப் பணியாளர் மீதுதான் விழுகிறது. திடிரென்று வேலையை விட்டு நிறுத்தப்படுவது சாதாரணம். இவர்களுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. வீட்டு வேலைக்கு செல்வதை ஒரு தொழிலாக அங்கீகரிக்கப் படவில்லை. அதிக வேலை நேரம், இரவு நேரங்களில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்கள், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்கள், மருத்துவமனையில் பணியாற்றும் பெண்கள்; போதிய பாதுகாப்பாற்ற நிலையில்தான் உள்ளனர். பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் மிகவும் சிறப்பானவை. நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் சிக்கல்கள் உள்ளது. வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர்.          அழகிப் போட்டியில் வரிசையில் நிற்பது, மகளிர்களில் ஒரு சிலர் உயர்பதவிக்கு சென்றுவிட்டாலும் பெண்களின் நிலை சொல்லும் அளவுக்கு இல்லை. வரதட்சனை கொடுமைகள், மரியாதைக் கொலைகள் என்று எல்லாமே பெண்களின் வாழ்வை கேள்விக் குறியாக்குகின்றன. பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்திற்கு பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்து விட்டு வாழ்ந்து வருகிறார்கள். அடித்தட்டு பெண்கள் ஏழ்மையாலும், உடல் நலக் குறைவிலும் சிக்கித் தவிக்கிறார்கள். பெண் குழந்தை தனக்கு கடன் சுமையை அதிகரிக்கப் பிறந்திருப்பதாகவே பெற்றோர் நினைக்கிறார்கள். உணவு, ஆரோக்கியம், படிப்பு என்று எல்லா விஷயங்களிலும் இவர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள். நடைமுறையில் இவை முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்கங்கே நடைபெற்ற  வண்ணம் உள்ளன. உலகின் பல பாகங்களிலும் இந்த நிமிடம் வரை பல இலட்சக் கணக்கான பெண்கள் ஏதோ ஒரு உரிமையை இழந்து பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் உறுதிப் படுத்துகின்றன. பெண் என்பவள் ஆணின் அடிமை, அவனின் சிற்றின்ப பொருள், குடும்பத்தின் அவமானச் சின்னம், ஒரு சுமை, மனிதப் பிறவியாகக் கருதப்படாதவள் என்ற மனப்பான்மை உள்ளது. சகப்பெண்ணுக்கு நடக்கும் அநீதிகளை வேடிக்கை பார்ப்பது, மௌனம் காப்பது, இன்று யாருக்கோ நடப்பது நாளை நமக்கு நடக்கும் என்று உணராமல் இருப்பது வேதனையானது. ஆண்கள் மற்றும் சிறுவர்களைவிட பெண்களும் சிறுமிகளும்தான் அதிக நேரத்தை வீட்டு வேலைகளில் செலவிடுகின்றனர்.
பெண் இல்லாத உலகம்:
          பெண் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்க்க முடியுமா? சந்தேகப்படும் கணவன்மார்களின் மனைவி  வன்முறைகளை பிரயோகித்து வதைக்கப்படுகிறாள். தாங்கொண்ணா துயரத்தில் எத்தனையோ யுவதிகள் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பலர் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.  மதுப்பழக்கமுடைய கணவன்மார்களால் பலர் நிரந்தரமான கண்ணீரும், துயரமுமாக வறுiயில் வாழ்க்கையை கடத்துகிறார்கள். கிராமபுறங்களில் கணவனுக்குப் பின் மனைவி தொடர்ந்து வருதல் பெண்களைத் தரையில் அமர வைத்தல் போன்ற பழக்கங்கள் குறையவில்லை. மிகவும் சிறிய வயதில் திருமணம், அடுத்தடுத்து பிள்ளைப்பேறு, கல்வியின்மை, சுகாதாரம் குறைவான சு10ழலில் ஏழ்மை காரணமாக வாழ வேண்டிய நிர்பந்தம், வீட்டுக்குள்ளேயே அடைபடும் நிலை என பெண்கள்படும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. கைவிடப்படுவதால் நிர்க்கதியாகக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும், கற்பழிப்பு, மானபங்கம், பாலியல் துன்புறுத்தல், கொலை, கொடுமைப்படுத்தப்படுவது, வரதட்தனை வாங்கி வரச் சொல்வது, அடி,உதை தாக்குதலுக்கு ஆளாதல், மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்தல், தான் சொல்வதை பெண் கேட்க வில்லை என்றால் தனக்கு கௌரவ குறைவாக கருதும் ஆணின் சிந்தனை, தங்களுக்கு எதிரான வன்முறையை பெண் தன் வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக கருதுகிறாள். குடும்ப கட்டுபாட்டில் பெண்ணே பலியாகிறாள். 
இருபால் சமத்துவம்:
          இருபால் சமத்துவத்தை சமூகத்தில் நிலைநிறுத்த அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து செல்கிறது. 1992ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்:1091 இந்த எண் எடுக்கப்பட வில்லை என்றால்    4423452365 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். திடிர் ஆபத்து வரும் போது பெண்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். எங்கோ ஒரு இடத்தில் தனித்து விடப்பட்டாலும் அல்லது தங்க இடமில்லாத போதும் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். 
ஆப்கானிஸ்தானில் சர்வதேச மகளிர் தினத்திற்கு விடுமுறை  வழங்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் 1911ல் தொடங்கிய மகளிர் தினம் (மார்ச்-8) நூறு ஆண்டுகளை கடந்து கொண்டாடி வருகின்றனர். மகளிரிடையே விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்துள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் 1989ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என அறிவிப்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப் பட்டது. நாடாளுமன்றத்தில், பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு  இடங்களுக்காக மசோதா மக்களவையில் நிறைவேற்ற குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. சதித்தடை சட்டம்-1852, விதவை மறுமணம்-1856, பலதார முறை (ம) குழந்தை திருமண தடைச் சட்டம்-1872, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை-1956, வரதட்சனை தடைச் சட்டம்-1961, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம்-1976, சிசுக் கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை திட்டம்-1992 உள்ளிட்ட  சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைக் கலாச்சாரத்தினை இல்லாதொழிக்க அனைவரும் முன்வர வேண்டும். இறந்து போன செல்வாக்கு மிக்க மனிதர்களின் மகள்களோ, சகோதரிகளோ, தாய்மார்களோ என்றில்லாமல் தன் சொந்தத் திறமையால் அடையாளங்களை கவனமாக உருவாக்கிக் கொண்டு புதியவர்கள் வருகிறார்கள். ஆணும், பெண்ணும் இணைந்து ஒற்றுமையாக உழைத்தால் சமூக பொருளாதார மறுமலர்ச்சியை பூரணமாக நிறைவேற்ற முடியும். துணிந்து பல துறைகளில் தங்கள் சாதனைகளை மகளிர் தொடர்ந்து செய்து வரத் துவங்கி விட்டார்கள். முடங்கி கிடந்த மகளிர் தங்கள் அறிவாற்றல்களை வெளிஉலகிற்கு காட்டி அசத்த ஆரம்பித்து உள்ளார்கள். இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் பெண்ணானவள் சகல துறையிலும் முன்னேறி வருகிறாள். 
          உடல் உறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள். பெண்களை மதிப்பவனாக, பெண்களை இழிவு செய்யாதவனாக, எந்த சு10ழலிலும் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் தராதவனாக தங்கள் மகன்களை உருவாக்க ஒவ்வொரு தாயும் முயல வேண்டும். தவறாது அறிவுறுத்த வேண்டும். கடல் போன்ற வாழ்வில் கலங்கரை விளக்குகள் பெண்கள் என்றால் அது மிகையாகாது. 
          ஆண்களுக்கும்;, பெண்களுக்கும் வாழ்வில் வௌ;வேறு பாத்திரங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் உரிமைகள் சமமானது. நீங்கள் உங்கள் மகனை படிக்க வைத்தால், உங்கள் மகனை படிக்க வைக்கிறீர்கள் அவ்வளவுதான். ஆனால், நீங்கள் மகளை படிக்க வைத்தால் ஒரு தலைமுறையையே படிக்க  வைக்கிறீர்கள். 
மகளிர்க்கு சம உரிமை வழங்கும் போது ஓரு தேசம் நிலையானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது. பெண்ணுக்கு ஓரு நாட்டில் உரிமைகள் மறுக்கப் படும்போது வளமற்ற நிலையற்ற தன்மை உறுதி செய்யப் படுகிறது. 
பெண்களின் சுதந்திரத்திற்கு உரிமைகளுக்கு மதங்கள் எதிரானதாகவே உள்ளன. எல்லா சமூகங்களிலும் மதங்களால் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையே உள்ளது. 
பெண்கள் உலகில் சாதிப்பதற்கு செய்து முடிப்பதற்கு எல்லையே இல்லை. 
1813ல் பெண்களுக்கு உரிமைகளே இல்லை. 1913ல் பெண்கள் போராடத் துவங்கினார்கள். 2013ல் எல்லா உரிமைகளுடன் உலாவுகிறார்கள். 
இந்த உலகம் உண்மையான சிறந்த முன்னேற்றத்தை காண விரும்பினால் சிறந்த முதலீடு பெண்கள்தான். நாம் ஏப்போதும் அவர்களோடு சேர்ந்து நிற்போம், அவர்களுக்கு எதிராக அல்ல. பெண்கள் உரிமைகளே மனித உரிமைகள். மனித உரிமைகளே பெண்கள் உரிமைகள். தைரியம்தான் பெண்ணின் சிறந்த பாதுகாப்பு. தான் விரும்புகிறவனை மணக்க, தன் உழைப்பில் தன் பெயரில் சொத்துக்கள் வாங்க, பள்ளிக்குச் செல்ல, சமமாக நடத்தப்பட, சுயமாக முடிவுகள் எடுக்க, அரசியலில் மதிக்கப்படவும், தலைமைத் தாங்கவும் பெண்கள் விரும்புகிறார்கள். 
மற்றவர்கள் பெண்களின் வாழ்வை தீர்மானிக்கக் கூடாது. தான் என்னவாக வேண்டும் என ஒரு பெண் சுயமாக முடிவு செய்ய வேண்டும். உலகின் மக்கள் தொகையில் பாதி பெண்கள் உள்ளனர். வேலை நேரங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் உழைக்கிறார்கள். உலக வருமானத்தில் அவர்கள் பெறுவதோ வெறும் 10 சதம்தான்.  உலகில் உள்ள அசையாச் சொத்தில் 1 சதவிகிதம்தான் பெண்கள் பெயரில் உள்ளது. இது மாற்றப்பட வேண்டாமா?
                              தி.சுவாமிநாதன், நாமக்கல்.


No comments: