அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் பேசும் மக்கள் - ரவி - கன்பரா

.

அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் இலாகாவால் ஐந்து வருடங்களுக்கு ஓரு முறை சனதொகைக் கணக்கெடுப்பு என பொதுவாக அழைக்கப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடாத்தப்படும். கடைசியான சனத்தொகைக் கணக்கெடுப்பு 9 ஆகஸ்ட் 2016 அன்று நடாத்தப்பட்டது.
கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட 61 கேள்விகளில் 16வது கேள்வியில் இந்த நபர் வீட்டில் ஆங்கிலத்தை விட வேறு மொழி பேசுவாரா? என்று கேட்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையானது இக்கேள்விக்கு வீட்டில் பேசும் மொழி தமிழ் என பதிலளித்தவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இக்கேள்விக்கு தமிழ் என பதில் அளிக்காதவர்கள் தமிழ் பேசும் மக்கள் தொகையில் கணக்கிடப்படமாட்டார்கள்.
இந்த அடிப்படையில் 2016 சனத்தொகை கணக்கெடுப்பின்படி அவுஸ்திரேலியாவில் உள்ள வீடுகளில் தமிழ்ப் பேசும் மக்களின் (இனி தமிழ்ப்பேசும் மக்கள் என்போம்;) எண்ணிக்கை 73,162. இந்த 2016 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அவுஸ்திரேவியாவில் வசிக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட அண்ணளவாக 55 நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ளனர்.
எல்லா தமிழர்களும் வீட்டில் பேசும் மொழி தமிழ் என கணக்கெடுப்பு கேள்விக்கொத்தில் பதிலளித்தார்கள் என்பதில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். எனவே அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் உண்மையான தொகை இங்கு தரப்படும் தொகையைவிட அதிகமானதாக இருக்கும். 2016 சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இங்கு சில முன்னிலைத் தரவுகளும் தேவைக்கேற்ப முந்திய ஆண்டுகளுடன் செய்யப்பட்ட ஒப்பீடுகளும் தரப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது:



வரைபடம் 1. அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள், 1991-2016
அட்டவணை 1. மாநில ரீதியாக தமிழ்ப் பேசும் மக்கள் 2011 மற்றும் 2016
அட்டவணை 2. பிறப்பிட ரீதியாக தமிழ்ப் பேசும் மக்கள், 2011 மற்றும் 2016
வரைபடம் 2. சமய ரீதியாக தமிழ்ப் பேசும் மக்கள், 2016
அட்டவணை 3. வயது ரீதியான சனத்தொகைப்பகிர்வு: அவுஸ்திரேலியாவில் வாழும்; தமிழ்ப் பேசும் மக்களும் அவுஸ்திரேலிய சனத்தொகையும், 2016
அட்டவணை 4. பால் ரீதியான சனத்தொகைப்பகிர்வு: அவுஸ்திரேலியாவில் வாழும்; தமிழ்ப் பேசும் மக்களும் அவுஸ்திரேலிய சனத்தொகையும், 2016
வரைபடம் 3. Nளுறு மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 4. விக்டோரியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 5. குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 6. மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 7. தென் அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 8. தாஸ்மேனியா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 9. அவுஸ்திரேலிய தலைநகர பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
வரைபடம் 10. வடக்குப் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதிகள், 2016
குறிப்பு: இந்தத் தரவுகள் அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் இலாகாவின் தரவுகளின் அடிப்படையில் திரு த இரவீந்திரனால் தொகுக்கப்பட்டது. இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் கருத்துக்களே. இத் தரவுகளின் மூலம் அங்கீகாரம் செய்யப்படின் இவை பிரதி செய்யப்படலாம். இந்த கட்டுரை பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன (சயஎiனெசையn@பசயிநஎiநெ.உழஅ.யர).
தமிழாக்கம்: தர்மன் சவரிமுத்து
2016ல் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 2011 உடன் ஒப்பிடும் போது 46 சதவீதத்தால் அதிகரித்துள்ளதை வரைபடம் 1 காட்டுகின்றது.


வரைபடம் 1. அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள், 1991-2016





No comments: