ஓவியாவை திருமணம் செய்ய நான் ரெடி..! சிம்பு அதிரடி அறிவிப்பு

.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவிற்கு இந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குறிப்பாக அந்த ரிவியே இதனை எதிர்பார்க்கவில்லை. இதனால் ஓவியாவை வெளியேற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை, ஓவியா நற்பணி மன்றம் என பட்டியல் நீண்டு போகிறது. பல திரைப்பிரபலங்களும் ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் பட வாய்ப்பும் வந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிம்பும் ஓவியாவிற்குத் தான் தனது ஆதரவு என தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் மேலாக, ஓவியா போல ஒரு பெண் கிடைப்பது அரிது. என்னை விட்டால் நான் ஓவியாவை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்.
ஓவியா வெளியே வந்தால் புரபோஸ் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறி உள்ளார். இது சிம்புவின் போலி ட்விட்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையான ட்விட்டர் கணக்கா இல்லை போலியா என்பது தெரியவில்லை. இதற்கு சிம்புவே விளக்கம் சொன்னால் தான் சரியாக இருக்கும்.

No comments: