வடக்கில் குடிநீரின்றி தவிக்கும் நான்கரை இலட்சம் மக்கள்
இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்
டெங்கு மரணம் உயர்கிறது : கடந்த 7 மாதங்களில் எவ்வளவு தெரியுமா ?
13 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு யாழில்
முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்!
வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு இராணுவ அலுவலர்கள்
சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
வடக்கில் குடிநீரின்றி தவிக்கும் நான்கரை இலட்சம் மக்கள்
03/08/2017நாட்டின் வட பகுதியில் நிலவும் கடும் வரட்சி
காரணமாக வடமாகாணத்தின் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து 4 இலட்சத்து 62 ஆயிரத்து 991
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் குடிநீருக்கு பாரிய
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விவசாயம் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளது.
வட பகுதியில் தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பக் காலநிலை காரணமாக
வடக்கில் கடும் வறட்சி நிலவுகின்றது. இந்த வறட்சி காரணமாகவே
வடமாகாணத்தில் 670 கிராம சேவைப் பிரிவுகளில் நீர் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது. நிலவும் வறட்சி காரணமாக வடக்கில் 1 இலட்சத்து 33
ஆயிரத்து 758 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 62 ஆயிரத்து 991
பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
இதேவேளை யாழ். மாவட்டத்தில் சுமார் 267 கிராம சேவைப் பிரிவுகளில்
34,000க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 24 ஆயிரத்து
382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வறட்சியின் மூலம்
வடமாகாணத்தில் யாழ். மாவட்ட மக்களே அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
இந்த வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 730
குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 15 ஆயிரத்து 308 பேரும் வன்னி
மாவட்டத்தில் 24 ஆயிரத்து 507 குடும்பங்களை சேர்ந்த 85 ஆயிரத்து 771
பேரும், மன்னர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 386 குடும்பங்களை சேர்ந்த
54 ஆயிரத்து 152 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 24 ஆயிரத்து 006
குடும்பங்களை சேர்ந்த 83 ஆயிரத்து 378 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 233
குடும்பங்களுக்காக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4071 குடும்பங்களுக்கு குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,
மன்னார் மாவட்டத்தில் 3160 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்
இம்பெறுவதாகவும் , வன்னி மாவட்டத்தில் 3395 குடும்பங்களுக்கு
குடிநீர் வழங்கியுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5705
குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கியுள்ளதாகவும் அனர்த்த
முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இரணைமடு குளத்தில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன் விவசாய
செயற்பாடுகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை
தெரிவித்துள்ளனர். தமது வாழ்வாதார நடவடிக்கைகள் வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் மற்றும் விவசாய
நடவடிக்கைகளுக்கான நீரை பெற்றுக்கொள்ளும் மாற்று வழிமுறை ஒன்றை
பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வறட்சியினால் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை
நிவர்த்தி செய்வதற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள்
ஒன்றிணைந்து பவுசர் வண்டி மூலம் நீர் விநியோயகம் செய்தாலும் அந்நீர்
தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு போதியதாக இல்லை என பொது மக்கள்
தெரிவித்துள்ளனர். எனினும் அரசாங்கம் மூலமாக நீர் விநியோக நடவடிக்கைகளை
நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும்
பவுசர்கள் மூலமாக நீர் பெற்றுத்தரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து
வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி
இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்
03/08/2017 இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச மற்றும் தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீ காரம் வழங்கியுள்ளது. நன்றி வீரகேசரி
டெங்கு மரணம் உயர்கிறது : கடந்த 7 மாதங்களில் எவ்வளவு தெரியுமா ?
03/08/2017 நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 327 ஆக உயர்ச்சி கண்டுள்ளது.
இதுவரையிலான எழுமாத காலத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 743 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை இன்றில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் பாதிப்புகள்
அதிகரித்துள்ளது. கடந்த எழுமாத காலத்தில் டெங்கு காய்ச்சலினால்
பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 743 ஆக
உயர்வு கண்டுள்ளது.
அதேபோல் இது வரையில் 327 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு
உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 10 ஆயிரத்து 927 பேர்,
பெப்ரவரி மாதம் 8 ஆயிரத்து 722 பேர். மார்ச் மாதம் 13 ஆயிரத்து 539 பேர்.
ஏப்ரல் மாதம் 12 ஆயிரத்து 512 பேர், மே மாதம் 15 ஆயிரத்து 918 பேர்,
ஜூன் மாதம் 25 ஆயிரத்து 90 பேர், ஜூலை மாதம் 31 ஆயிரத்து 49 பேர் என்ற
ரீதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது மேல்
மாகாணத்தில் கொழும்பில் 25 ஆயிரத்து 88 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 21
ஆயிரத்து 122 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 716 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். 44.95 வீத வேகத்தில் கடந்த எழுமாத காலத்தில் டெங்கு
காய்ச்சல் அதிகரித்துள்ளது. அத்துடன் இன்றில் இருந்து மீண்டும் நாடளாவிய
ரீதியிலான டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார
அமைச்சி குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதில் இருந்து
முன்னெடுக்கப்பட்ட மூன்று நாட்கள் விசேட வேலைத்திட்டத்தின் மூலமாக நாட்டின்
சகல பகுதிகளிலும் 5,48,600,000 பகுதிகள் பரிசோதிக்கப்பட்டது.
இவற்றில் 19 ஆயிரத்து 684 இடங்கள் டெங்கு நோய் பரவக்கூடிய இடமாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றில் 798 இடங்கள் மீது வழக்கு
தொடரப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் அதிகளவில் டெங்கு பரவல் ஏற்பட்டு
பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை,கம்பஹா, குருநகல், காலி, ரத்னபுர,
கேகாலை, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் சிறப்பு வேலைத்திட்டங்களை
முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
13 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு யாழில்
03/08/2017 உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் இணைந்து 13
ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை எதிர்வரும் 5 ஆம் 6 ஆம் திகதிகளில்
யாழில் நடத்தவுள்ள மாநாட்டில் இந்தியா இலங்கை மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த
200 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
1974ஆம் ஆண்டு யாழில் நடைப்பெற்ற 4ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில்
உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம்
இணைந்து 13ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
5ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள முதலாவது
மாநாட்டில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ரத்னம்
விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண முதலமைச்சர்
சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, தமிழ்த்தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இவ் அமர்வில் பன்னாட்டு மலர்வெளியிட்டு சிறப்புரையினை சிறுவர் மற்றும்
மகளிர் விவகார இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றவுள்ளார்.
6ஆம் திகதி யாழிலுள்ள பிரபல விடுதி ஒன்றில் நடைபெறவுள்ள 2 ஆவது
மாநாட்டில் முதன்மை விருந்தினராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும்
எதிர் கட்சி தலைவருமான இரா. சம்பந்தனும் கௌரவ விருந்தினராக இந்தியத்
துணைத்தூதுவர் எ. நடராஜனும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரன் வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் பாராளுமன்ற
உறுப்பினர்களான ஈ.சரவணபவன் அரியரத்தினம் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர்
கலந்துகொள்ள உள்ளனர். நன்றி வீரகேசரி
முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்!
02/08/2017 முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை,
தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு
பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில் மழை பெய்துள்ளமையானது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நன்றி வீரகேசரி
வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு இராணுவ அலுவலர்கள்
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்குறித்த ஆலோசனையை வழங்கினார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்ற மீளாய்வுக்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மக்கள் பல அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு உலருணவு வழங்குவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான முன்மொழிவு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உயர்தரமான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மேற்பார்வை குழுக்களை நியமித்து அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக மாற்றுக் காணிகளை இனங்காணுதல் மற்றும் அக் காணிகளை விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. காணிகளை இனங்காணும் செயற்பாடுகளை இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமெனவும், அது தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நாளைய தினத்துக்குள் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும், காணிகளை இனங்கண்ட பின்னர் அக்காணிகளை பயனாளிகளுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். நன்றி வீரகேசரி
சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
01/08/2017 மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார்
கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டு
வரும் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் பொலிஸ் சேவையில் இருந்து இடை
நிறுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் சேவைக்கு தொடர்ச்சியாக அவர் வராமல் தலைமறைவாகியிருக்கும்
நிலையிலும் குறித்த குற்றச் சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட தேடப்பட்டு
வரும் நிலையிலும் அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய் யப்பட்டுள்ளதாக
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
அவரை கண்டிப்பாக நாம் கைது செய்வோம். அதற்கான நடவடிக்கைகள் சிறப்பு
பொலிஸ் குழுவினரால் முன்னெ டுக்கப்பட்டுள்ளன. அவர் தேடப்படும் ஒரு சந்தேக
நபர். அவரை நாம் பணி இடைநிறுத்தம் செய்துள்ளோம். கண்டிப்பாக நடவடிக்கை
எடுத்தே தீருவோம்' என இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மாணவி கொலை வழக்கில் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ்குமார் என
அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு மே மாதம்
18ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து தப் பிச் சென்ற நிலையில்
19 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரினால்
கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தார் என்று அக்கால
பகுதியில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த லலித்
ஜெயசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருடன் அக்கால பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் என்பவரும் உடந்தையாக செயற்
பட்டார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்ரீகஜனை
தேடி விசாரணை தொடர் கின்றது. அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவரை கண்டிப்பாக கைதுசெய்ய வுள்ளதாக பொலிஸ் மா அதிபர்
நேற்று அறிவித்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment