கலிய நாயனார் குருபூசை - 03/08 - Saravana Prabu


Image may contain: 3 people, text

.
கலிய நாயனார் தம் திருத்தொண்டின் பொருட்டு தன் மனைவியை விற்கவும் முயன்றார்,அம்மையாரும் போற்றுதலுக்கு உரியவரே.பேருலகில் ஓங்குபுகழ்ப் 
    பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை 
    நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக் 
    கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி 
    சிறந்ததிரு வொற்றியூர் Image may contain: outdoor

எயிலணையும் முகில்முழக்கும் 
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும் 
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம் 
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில் 
சக்கரப்பா டித்தெருவு.

Image result for எண்ணெய் செக்கு

அக்குலத்தின் செய்தவத்தால் 
அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து 
மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார் 
எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத் 
திருத்தொண்டின் நெறிமுயல்வார்.

Image result for எண்ணெய் செக்கு

எல்லையில்பல் கோடிதனத் 
திறைவராய் இப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து 
திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தம் 
கோயிலின்உள் ளும்புறம்பும்
அல்லும்நெடும் பகலுமிடும்
திருவிளக்கின் அணிவிளைத்தார்.

Image may contain: outdoor

எண்ணில்திரு விளக்குநெடு 
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல் 
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம் 
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல் 
மாண்டதுமாட் சிமைத்தாக.

எண்ணில்திரு விளக்குநெடு 
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல் 
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம் 
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல் 
மாண்டதுமாட் சிமைத்தாக.

செக்குநிறை எள்ளாட்டிப் 
பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும் 
பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி 
தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார் 
விழுத்தொண்டு விளக்கிட்டார்.

அப்பணியால் வரும்பேறும்
அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார்.


மனமகிழ்ந்து மனைவியார் 
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும் 
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில் 
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார் 
கையறவால் எய்தினார்.

பணிகொள்ளும் படம்பக்க 
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப் 
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு 
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ் 
வினைமுடிக்கத் தொடங்குவார்.


திருவிளக்குத் திரியிட்டங்கு 
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா 
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய 
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன் 
நேர்வந்து பிடித்தருளி.

Inline image 1

மற்றவர்தம் முன்னாக 
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி 
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய் 
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில் 
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.

Image result for திருவொற்றியூர் தியாகராஜர்

Image may contain: 1 person, flower

No comments: