நடிப்பிசைப்புலவர்கள் - பிச்சினிக்காடு இளங்கோ

.


அவர்கள் இருவரும்
கலகலப்பாக     கலந்துரையாடினார்கள்

புண்ணை மறைத்துக்கொண்டு
புன்னகையைப் பொழிந்தார்கள்

நடிப்பில்
நானா நீயா
நடித்துக்கொண்டிருந்தார்கள்

அப்படியொரு நடிப்பில்
இருவரும் தோற்கவில்லை
ஆனால்
வெற்றியின் வேதனையை
ரசித்து ருசித்தார்கள்

உள்ளொன்றும்
உதிர்வதொன்றுமாய்
அவர்கள்
காட்டும் வேடிக்கையில்
கலங்கிப்போயிருந்தேன்
பிரகடனம் செய்தார்கள்
பிரச்சாரம் செய்தார்கள்
போட்டிப்போட்டுக்கொண்டு
ஆலிங்கனம் செய்து
அக்கறையை அரங்கேற்றினார்கள்

வள்ளுவன்சொன்னதுபோல்
அள்ளிப்பருகினார்கள்
அதற்குமேல்
சொல்லத்தெரியவில்லை எனக்கு

நான் சொல்லவருவதுஉ
அகலாமல்
அணுகாமல்
பார்வையாளனாய் என்னைப்
பார்த்துக்கொள்கிறேன்

No comments: