.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர் என்ற மருத்துவர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
அயர்லாந்தின் இளம் வயது பிரதமர் என்று சிறப்புக்கு சொந்தமாகியுள்ள லியோ தன்பாலின உறவாளர் ஆவார்.
ஆளுங்கட்சியான பைன் கேயல் கட்சியைச் சேர்ந்தவர் லியோ. அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்புக்கான தேர்வில் லியோ வெற்றி பெற்றார்.
மேலும் லியோவுக்கு பைன் கேயல் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் ஆதரவும் கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று கட்சியின் 11-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்துக்கு பிரதமராகும் வாய்ப்பு லியோவுக்கு கிடைதுள்ளது.
வரும் ஜூன் 13-ம் தேதி அயர்லாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த லியோ வராத்கர்?
மும்பையைச் சேர்ந்த அஷோக் வராத்கர் மற்றும் அயர்லாந்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த மிரியம் தம்பதிகளின் மகன் ஆவார்.
No comments:
Post a Comment