தமிழ்முரசு அவுஸ்ரேலியா கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறது.

.

சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை அருகேயுள்ள பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கவிக்கோவின், 'பாடப் புத்தகங்களே குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்' என்ற கவிதை குழந்தைகள் மீது சுமத்தப்படும் கல்விச் சுமையை எடுத்துச் சொல்ல கவிஞர்கள் இன்றும் கையாளும் கவிதையாக இருக்கிறது.

என் உயிரைக்/காதலில்/ஒளித்து வைத்துவிட்டேன்/மரணமே!/ இனி என்ன செய்வாய்?' என்று மரணத்தையே கேள்வி கேட்ட கவிஞரைத்தான் மரணம் தழுவிக்கொண்டுள்ளது. புதுக்கவிதை இருக்கும் காலம்தோறும், கவிக்கோ புதுக்கவிதைகளின் காலமாக வாழ்வார்.
இந்த மாபெரும் கவிஞர் சிட்னிக்கு வருகை தந்து சிட்னி கவிஞர்களை வைத்து வள்ளுவர் மாநாட்டிலேயே கவியரங்கத்திற்கு தலைமை தாங்கி கவியரங்கம் செய்தது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கிறது. அந்த கவியரங்கில் கலந்து கொண்ட பாக்கியம் எனக்கும் கிடைத்திருந்தது.
அவரின் மறைவிற்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியா கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறது.

No comments: