தமிழ் சினிமா

டோரா


நயன்தாரா படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் தனி ஈர்ப்பு இருக்கும். தனக்கென்று ஒர் பாணியில் செல்லும் அவர், இந்த படம் மூலம் தான் டான் என நிரூபித்திருக்கிறாரா என்பதை அவர் நடித்துள்ள இந்த டோரா என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது போல ஃபிளாஷ் பேக்குடன் கதை துவங்குகிறது. தம்பி ராமையாவின் மகளாக வரும் அவரின் பவளக்கொடி கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார்.
தன் அத்தை குடும்பத்தாருடன் ஏற்பட்ட போட்டிக்காக கால் டாக்சி நிறுவனம் துவங்க சபதம் எடுத்து கார் வாங்க ஷோரூம் செல்கிறார்கள். அங்கு பல ரக கார்கள் இருக்க ஒரு பழைய மாடல் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஏதோ அவரது உள்ளுணர்வு சொல்கிறது.
அதே வேளை வட நாட்டு இளைஞர்கள் மூன்று பேர் பணத்திற்காக கொலை, கொள்ளை சம்வங்களில் ஈடுபட கதை வேறொரு பக்கம் நகர்கிறது. இவர்கள் குறித்து போலீஸ் விசாரணை ஒருபக்கம் நடைகிறது.
காரின் மூலம் சந்திக்கும் சில அமானுஷ்யங்களால் நிலை புரியாமல் இருக்கிறார் நயன், ஒரு கட்டத்தில் அந்த 3 குற்றவாளிகளில் ஒருவர் நயனின் கார் , விபத்தில் சிக்க போலிஸில் அவரும் சிக்குகிறார்.
மற்ற குற்றவாளிகள் என்ன ஆனார்கள். காரில் இருக்கும் அமானுஷ்ய சக்திக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, அவர் அதோடு போலிசில் மாட்ட காரணம் என்ன, அதிலிருந்து நயன்தாரா தப்பித்தாரா என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதைகளில் மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா இந்த படத்தில் மீண்டும் தன் திறமையை காட்டியிருக்கிறார். அதோடு படத்தில் சமூகத்திற்காக தன் நடிப்பின் மூலம் அவர் மேசேஜ் சொல்லும் விதம் தனி.
தம்பி ராமையா சொல்லவே வேண்டாம். ஒரு அனுபவமிக்க நடிகர் என்பதை அவரது நடிப்பே சொல்கிறது. அப்பாவாக மட்டுமில்லாமல் ஒரு காமெடியான அவர் செய்யும் வேலைகள் படத்திற்கு கூடுதல் மார்க்.
ஹீரோயினை மைய்யப்படுத்திய கதை என்றாலும் கார் இதன் ஹீரோ என்றே சொல்லலாம். காருக்கும் காவல்துறைக்கும் ஒரு கட்டத்தில் நடக்கும் சவால்கள் நம்மை அசையவிடாமல் செய்கிறது.
தற்போது சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை குறித்த விஷயத்தையும் படத்தில் வைத்து சரியாக கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி.
தீம் மீயூசிக், ஓரிரு பாடல்கள் என விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோர் புதிதாக இருந்தாலும் பேய் படத்திற்கான எஃபெக்டை கொடுத்திருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

நயன்தாரா இந்த கதையை தேர்வு செய்த போதே தெரிகிறது படம் ஓகே என்று. தம்பி ராமையாவிற்கு நிகராக அவர் செய்யும் காமெடி ரசிக்க வைக்கின்றது.
தம்பி ராமையா எல்லா காட்சிகளிலும் சிரிக்க வைத்து கிளாப்ஸ் அள்ளுகிறார். காருக்காக அவர் செய்யும் அட்டகாசம் சூப்பர்.
படத்தின் சீன்களுக்கேற்றவாறு, திகிலுக்கு ஏற்றபடி பின்ணனியில் வைத்திருக்கும் மியூசிக் சரியான விதம்.

பல்ப்ஸ்

ஒரே ஒரு இடத்தில் லாஜிக் இடித்தாலும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

மொத்தத்தில் நயன்தாரா நடித்துள்ள டோரா குடும்பத்துடன் பார்க்கலாம். நன்றாக எஞ்ஜாய் பண்ணலாம். கார் ட்ரைவ் ஓகே.Dora Movie Public Opinion
Music:

நன்றி  Cineulagam 

No comments: