இலங்கைச் செய்திகள்



மட்டக்களப்பில்  வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் 

எமக்கு பொது­மன்­னிப்பை வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியை கோர வேண்டும் : தமிழ் அர­சியல் கைதிகள் கோரிக்கை

தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய்

கேப்பாபுலவில் 43நாட்களாக தொடரும் வீதி வாழ்க்கை, அரச அதிபர் அலுவலகத்தில் தீர்வுக்கோரி மகஜர் கையளிப்பு..!



















மட்டக்களப்பில்  வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் 

11/04/2017 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (30)   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 50 தினங்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும்  எங்களை ஏமாற்றாமல் நியாயமான தமது கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது பட்டதாரிகள் வலியுறுத்தினர்.
இதன்போது 'வெற்றிடங்கள் ஏராளம், பட்டதாரிகள் வீதியோரம், எதிர்க்கட்சி ஆளும் கட்சிக்கா எமக்கா?, தட்டித்திறக்கவில்லையாயின் முட்டித்திறப்போம், பட்டதாரிகளை தெருவில்விட்ட நல்லாட்சி, நல்லாட்சி என்ன மெல்ல கொல்லும் விசமா?,போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது தமக்கான உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டன.  நன்றி வீரகேசரி 












எமக்கு பொது­மன்­னிப்பை வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியை கோர வேண்டும் : தமிழ் அர­சியல் கைதிகள் கோரிக்கை

11/04/2017 நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எமக்கு பொது மன்­னிப்பை வழங்கி விடு­தலை செய்ய வேண்டும். ஜனா­தி­பதி நல்­லெண்ண சமிக்­ஞை­யாக இச்­செ­யற்­பாட்­டினை முன்­னெ­டுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்த வேண்டும் என்று தமிழ் அர­சியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்­த­னிடம் கோரி­யுள்­ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் நேற்று திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பாணம் சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்­தி­ருந்தார்.
இதன்­போது அங்கு  நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 10 தமிழ் அர­சியல் கைதி­களை நேரில் சந்­தித்து அவர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கேட்­ட­றிந்­துக்­கொண்டார்.
இதன் போதே மேற்­படி தமிழ் அர­சியல் கைதிகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். தமிழ் அர­சியல் கைதிகள் ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் தெரி­வித்­தா­வது நாங்கள் நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளோம். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் பல்­வேறு வழக்­குகள் சாட்­சி­யங்­க­ளற்ற நிலை­யிலும் எம்­மீது தொடுக்­கப்­பட்­டு்ள்­ளன.
ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது விடு­தலை தொடர்­பாக சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரத போராட்டம் உட்­பட பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் இன்று வரை­யிலும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி நல்­லி­ணக்கம் சம்­பந்­த­மாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கருத்­துக்­களை வெளி­யி­டு­கிறார்.
பிர­பா­கரன் ஏன் உரு­வானார் என்­ப­தற்­கான கார­ணத்தை கண்­ட­றிய வேண்டும் எனவும் அவர் தனது உரை­களில் சுட்­டிக்­காட்­டு­கிறார். இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்கும் அவ­ரி­டத்தில் எமது விடு­தலை சம்­பந்­த­மாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கூடிய அளவு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்டும்.
குறிப்­பாக கடந்த காலங்­களில்  அர­சி­யலில் அசா­தா­ரண நிலைகள் காணப்­பட்ட நிலை­யிலே தான் நாம் கைது செய்­யப்­பட்டோம். ஆகவே எதிர்­காலம் நோக்கி சிந்­திக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளி­டத்தில் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்ட எமக்கு ஓரு பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையி்ல் விடு­தலை வழங்க வேண்டும் என்­பதை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தி­யி­டத்தில் வலி­யு­றுத்தி தீர்வு பெற்­று­தர வேண்டும்.
அதே­நேரம் எமது வழக்­கு­களை கையாள்­வ­தற்­காக விசேட நீதி­மன்றம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. இந்த நீதி­மன்­றத்தின் ஊடாக கடந்த 2 வரு­டங்­களில் இரு­வரின் வழக்­குகள் மாத்­தி­ரமே நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதற்கு தமிழ் மொழி ரீதி­யான தமிழ் மொழியில் பரீட்­சயம் இல்­லாத நீதி­ப­திகள்இ சட்­டத்­த­ர­ணிகள், உத்­தி­யோ­கத்­தர்கள் காணப்­ப­டு­கின்­ற­மையே கார­ண­மா­கின்­றது.
ஆகவே விசேட நீதி­மன்­றத்தின் ஊடாக எமக்கு எவ்­வி­த­மான நன்­மை­களும் கிட்­ட­வில்லை. அதே­நேரம் நாம் எமது வழக்­கு­களை கையாள்­வ­தற்­காக தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்­றினை  ஏற்­பாடு செய்து தரு­மாறு ஏற்­க­னவே கூட்­மைப்­பிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இருப்பினும் தற்போது வரையில் அவ்வாறான குழுவொன்று தயார் செய்யப்படவில்லை. அது எமக்கு கவலையளிப்பதாக உள்ளது. எனவே அவ்வாறான குழுவொன்றை விரைந்து உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பை கோருவதாக அவர்கள் ஆனந்தன் எம்.பி.யிடம் மேலும் தெரிவித்தனர்.  நன்றி வீரகேசரி















தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய்

10/04/2017 நாடளாவிய ரீதியில்  இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த நோய் தொற்று உள்ளதாக அறிந்துக்கொண்டவர்கள் அதின சன நடமாட்டம உள்ள பகுதியிலி சென்று நிற்பதை தவிர்க்க வேண்டும், தடுமல் அல்லது தும்மல் ஏற்படுகின்ற போது மூக்கை துவாய் ஒன்றினால் மறைத்துகொள்ள வேண்டும், தரமான ஒரு வைத்தியரை உடனடியாக நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.   நன்றி வீரகேசரி















கேப்பாபுலவில் 43நாட்களாக தொடரும் வீதி வாழ்க்கை, அரச அதிபர் அலுவலகத்தில் தீர்வுக்கோரி மகஜர் கையளிப்பு..!

12/04/2017 கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இன்றுடன் 43 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம்  முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் 43வது நாளான இன்றையதினம் இதுவரை தமது சொந்த நிலங்களை கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் உத்தோயோகபூர்வமாக எந்த பதிலும் நேரடியாக தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அரசாங்க அதிபரோ பிரதேச செயலரோ இதுவரையில் தம்மை திரும்பிக்கூட பார்க்கவில்லை எனவும் அரசின் அறிவிப்பாக எதையும் தமக்கு அரச அதிபர் வழங்கவில்லை எனவும் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று தமது போராட்டத்துக்கு இதுவரையில் என்ன பதில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது என வினவியும் விரைவில் நல்ல முடிவை தருமாறு கோரியும் மகஜர் ஒன்றினை அரசாங்க அதிபர் பிரணவநாதனிடம் கையளித்தனர்.
நன்றி வீரகேசரி













No comments: